எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, December 30, 2010

மைனாரிட்டி தி.மு.க அரசுக்கு கண்டனம்: அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

சென்னை: மின்வெட்டு, விலைவாசி உயர்வு , ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பிரச்னைக்ளுக்கு மைனாரிட்டி தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று மாலையில் கூடிய அ.இ.அ.தி.மு.க, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பார்லி., கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சரும், அம்மா  பேரவை செயலாளருமான  நயினார் நாகேந்திரன் தீர்மானத்தை வாசித்தார்.
சென்னை அருகே உள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவரு வெங்கடாஜலபதி அரண்மனையில் அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு கூடியது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் , தலைமைகழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் ., முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்க வந்த அம்மா அவர்களுக்கு கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகள், பிரசாரயுக்திகள்,குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,மைனாரிட்டி தி.மு.க அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அமைக்கப்படும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 1. 76 லட்சம் கோடி இமாலய ஊழலில் ஈடுபட்டு உலக அளவில தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய மைனாரிட்டி  தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, உரிய வெள்ளநிவாரணம் வழங்காதது, சட்டம் ஒழுங்கின்மை, மீனவர் நலன் காத்திட தவறுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவித்தும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment