எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, July 31, 2010

குடிசைவாழ் மக்களுக்காக போராடுவோம்: அம்மா அறிவிப்பு

 "சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை உயர்மட்ட சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஒன்பது கி.மீ., நீளமுள்ள இந்த சாலை 19 கி.மீ., ஆனது ஏன்? இதனால் பாதிக்கப்படும் குடிசைவாழ் மக்களுக்கு உரிய வாழ்வாதாரம் கிடைக்கவில்லை எனில், அ.இ.அ.தி.மு.க., போராட்டக் களத்தில் இறங்கும்' என்று டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னைத் துறைமுகம் - மதுரவாயலை இணைக்கும் வகையில், 9 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட சாலை அமைக்கப் போவதாக, மைனாரிட்டி தி.மு.க., அரசு 2007ல் அறிவித்தது. தற்போது இந்த சாலை 19 கி.மீ., நீளமுள்ளதாக அமைய, அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மறு குடியமர்வுக்கான பணிகள் துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்களிடம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இரவோடு இரவாக போலீசின் உதவியோடு வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தாங்களாகவே முன்வந்து தங்கள் இடங்களைத் தருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து கையொப்பம் பெற்றுள்ளது. பெரும்பாக்கம், ஜோதியம்மாள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து, அந்தப்பகுதி மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர். கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று கூறி, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. எண்ணூர் - கொட்டிவாக்கம் கடலோர மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் வந்தால், மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்.

குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அதே இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய கல் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது தான், "ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு' திட்டத்தின் நோக்கம். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் வகையில் தொலை தூரத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. குடிசைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் மைனாரிட்டி தி.மு.க., அரசிற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், குடிசை வாழ் மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., போராட்டக் களத்தில் இறங்கும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Friday, July 30, 2010

திருச்சி ., ஆர்ப்பாட்டம் :14ம் தேதிக்கு திடீர் மாற்றம்.

 அ.இ.அ.தி.மு.க., சார்பில் திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 10 நாட்கள் முன்னதாக வரும் 14ம் தேதியன்றே நடைபெறுமென அறிவித்துள்ளது.இது குறித்து அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை, மணல் கொள்ளை, நீராதாரம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகள் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க., சார்பில், வரும் 24ம் தேதி திருச்சியில் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.அந்த ஆர்ப்பாட்டம், 10 நாட்கள் முன்னதாக, வரும் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Thursday, July 29, 2010

ஹார்லிக்ஸ் கொள்ளைக்கு சி.பி.ஐ., விசாரணை; அம்மா கோரிக்கை

 "திருவாலயநல்லூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என டாக்டர் புரட்சிதலைவி அம்மா கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், "தனக்கு சொந்தமான சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட 770 பெட்டிகளிலிருந்த 9,240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள திருவாலயநல்லூரில் கடந்த 12ம் தேதி, கொள்ளை போயிருப்பது தெரிய வந்ததாகவும், இது குறித்த புகாரை சோழவந்தான் போலீஸ் அதிகாரி வாங்க மறுத்து விட்டார்' என மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், "இரண்டு மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டது. சில நாட்கள் கழித்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடந்த சம்பவத்துக்காக  
÷ பாலீஸ்  இன்ஸ்பெக்டர் வருத்தம் தெரிவித்து, வழக்கு தொடர்புடைய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
 அவற்றை பரிசீலித்த ஐகோர்ட், "இவ்வழக்கில், பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 17ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், 20ம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்' கருத்து தெரிவித்து இருக்கிறது. மேலும், வழக்கை திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி.,க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, "விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்திற்குள், ஐகோர்ட்டில் சமர்பிக்க வேண்டும்' என தீர்ப்பளித்துள்ளது.   இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுவது தான் பொருத்தமாக இருக்குமென்பதை சுட்டிக்காட்டி, அறவழி மீறி மக்களை துன்புறுத்தும் மைனாரிட்டி  தி.மு.க., அரசு, வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்பதை கருணாநிதிக்கு இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, July 27, 2010

கோர்ட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிக்கு எதிரான செயல்

:"கோர்ட்டிலுள்ள ஒரு பொருள் குறித்து கோர்ட்டில் தான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு, கோர்ட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது நீதிக்கு எதிரான செயல்' என டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:அரசியல் ரீதியாக என்னைப் பழிவாங்க வேண்டுமென்ற தீய எண்ணத்தில், சிறுதாவூர் என்ற இடத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை நான் அபகரித்து வீடு கட்டிக் கொண்டுவிட்டதாக தெரிவித்து, அது குறித்து விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை 2006ம் ஆண்டுமைனாரிட்டி  தி.மு.க., அரசு அமைத்தது.இதை விசாரித்த விசாரணை கமிஷன், இந்த நிலத்திற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தீர்ப்பளித்தது. விசாரணை கமிஷன் அறிக்கையை இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்தார் கருணாநிதி. கடைசியில் வேறு வழியின்றி, அதை வெளியிட்டார்.இதன் பின்னரும் எனக்கு எதிராக தி.மு.க., சார்பில் சிறுதாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க., அரசால் என் மீது புனையப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து, தி.மு.க., இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தேர்தலுக்கு முன், சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்கு எப்படியாவது தண்டனை பெற்று தர வேண்டும். என்னை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும், என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு பகீரத முயற்சி செய்தார்.

அது நிறைவேறாமல் போகவே, மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத வெத்து வேட்டு போராட்டத்தை தற்போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். அன்பழகன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கைத் தொடர்ந்து, இந்த வழக்கை கிட்டத்தட்ட 7 ஆண்டு காலம் நிறுத்தி வைத்த கருணாநிதி, தற்போது நான் காலம் கடத்துகிறேன் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது.இது போன்றதொரு போராட்டத்தை கருணாநிதியின் அனுமதியோடு ஸ்டாலின் அறிவித்திருப்பது கோர்ட் அவமதிக்கும் செயல்.

மேலும் கோர்ட் நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவது போல் அமைந்துள்ளது. முல்லை பெரியாறு பிரச்னை குறித்து, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அறிவித்த பின், கேரள அரசுக்கு எதிரான பொதுக்கூட்டம் என அதை மாற்றினார். கடைசியில் அதையும் நடத்த அருகதை இல்லாத கருணாநிதிக்கு, தனிப்பட்ட முறையில் என் மீது புனையப்பட்ட வழக்கிற்காக தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?நடுவர் மன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கருணாநிதி தயாரா?இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்

Monday, July 26, 2010

உளுந்தூர்பேட்டையில் அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

 உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை நிலையை கண்டித்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க., சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில், 25 கிராமங்களைச் சேர்ந்த நான்காயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.  இச்சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. திருநாவலூர் தொகுதிக்கு உட்பட்ட தென் பெண்ணையாற்றில் வரம்பு மீறி மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.

 இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும், இதைத் தடுத்து நிறுத்த மைனாரிட்டி தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்தியில் இருக்கிறது.  இந்தப் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டு, உயிருக்கு போராடும் நிலையில்  ஏழை, எளிய மக்கள்  அரசு மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். அப்போது அங்கு அவசர சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் கூட இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இப்பிரச்னைகளுக்காக மைனாரிட்டி  தி.மு.க., அரசை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க., சார்பில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

Sunday, July 25, 2010

ராதாபுரத்தில் காமராஜர், கக்கன் சிலை அமைக்க அம்மா கோரிக்கை

 "ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை, வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் நிறுவ, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும்' என,டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பஸ் நிலையம்' என பெயரிட்டு, அங்கு தன் பெற்றோரான அந்த இருவரின் சிலைகளையும் திறக்கும் முயற்சியை, கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்வர் கருணாநிதி மேற்கொண்டார்.இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி அ.இ.அ.தி.மு.க., சார்பில், வள்ளியூரில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதையடுத்து, ராதாபுரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பஸ் நிலையம் என்று பெயரிட்டு அங்கு இருவரது சிலையையும் திறப்பதற்கான நடவடிக்கையை கைவிடுவதாக கருணாநிதி அறிவித்தார்.சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், வேறு வழியின்றி ராதாபுரம் பஸ்நிலையத்திற்கு காமராஜர் பஸ்நிலையம் என்று பெயரிட்டிருக்கிறார் கருணாநிதி.உண்மையிலேயே காமராஜரின் மீது கருணாநிதிக்கு மரியாதை இருந்திருக்குமானால் கடந்த ஆண்டே ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஆனால், அதை கருணாநிதி செய்யவில்லை.இதே போன்று, காமராஜர் பஸ் நிலையத்தில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக தற்போது நிறுவப்பட்டுள்ள முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றி விட்டு காமராஜர், கக்கன் சிலைகளை நிறுவ தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் சிலைகளை அமைக்காவிடில், மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, தியாகி சுடலை முத்து அறிவித்துள்ளார். இதற்கு, அ.இ.அ.தி.மு.க., ஆதரவு அளிக்கிறது.இவ்வாறு அம்மா அறிக்கையில் கூறியுள்ளார்.

Friday, July 23, 2010

இடஒதுக்கீட்டுக்கு உரிமை கொண்டாட பார்க்கிறார் : அம்மா குற்றச்சாட்டு

 "தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக, அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பிற்கு, கருணாநிதி உரிமை கொண்டாட பார்க்கிறார்' என, டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: எனது ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சாதகமான உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. இதனால் எனக்கு பெயரும், புகழும் கிடைத்து விடுமோ என்பதற்காக, அதை இருட்டடிப்பு செய்யும் வகையில், வாய்மூடி மவுனியாக இருந்தார் முதல்வர் கருணாநிதி. எனக்கு பாராட்டு விழா நடத்த தற்போது பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 69 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு பங்கம் ஏற்படும் நிலை ஏற்பட்ட போது, இட ஒதுக்கீடு பிரச்னையில் நான் இரட்டை வேடம் போட்டதாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 1991ம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்ற பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேரா வண்ணம் எப்பொழுதும் போல், இனி வருங்காலம் முழுவதிலும், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களின் அனுமதியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும்.

இந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்னால் முன்மொழியப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை கொச்சைப்படுத்தியவர் கருணாநிதி. இப்படிப்பட்டவர் இன்று நான் இரட்டை வேடம் போடுகிறேன் என்று சொல்கிறார். இந்தச் சட்டத்திற்கு தற்போது உரிமை கொண்டாடுகிறார். இது கண்டனத்துக்குரியது. இடஒதுக்கீடு பிரச்னையில் நான் எடுத்த உறுதியான நடவடிக்கைக்காகத் தான் "சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் எனக்கு அளிக்கப்பட்டது. கருணாநிதிக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின், தற்போது தன்னுடன் இருக்கும் வீரமணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இடஒதுக்கீடு தொடர்பாக அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பிற்கு கருணாநிதி உரிமை கொண்டாட பார்க்கிறார். இவ்வாம்று அம்மா அவர்கள் கூறியுள்ளார்.


Wednesday, July 21, 2010

அ.இ.அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம்.

 அ.இ.அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை அ.இ.அ.தி.மு.க.,நிரந்தர  பொதுசெயலாளர்டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  திருத்தி அமைத்து உள்ளார். வடசென்னைக்கு அவைத் தலைவர் மதுசூதனனும், தென் சென்னைக்கு மைத்ரேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்மா வெளியிட்ட அறிவிப்பு: அவைத்தலைவர் மதுசூதனன் வடசென்னைக்கும், அமைப்புச் செயலர் பொன்னையன் சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டத்திற்கும், பன்னீர் செல்வம் மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக செயல்படுவர். தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் ஈரோடு மாநகர், புறநகர், நாமக்கல், நீலகிரி மாவட்டத்திற்கும், எம்.ஜி.ஆர்., மன்றச் செயலர் ஜெயக்குமார் திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தேர்தல் பிரிவுச் செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக செயல்படுவர். அமைப்புச் செயலர் தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், அமைப்புச் செயலர் செம்மலை

சேலம் மாநகர், கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்டத்திற்கும், விவசாயப் பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன் தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்டத்திற்கும், விவசாய பிரிவுச் செயலர் சோழன் பழனிச்சாமி திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் பொறுப் பாளர்களாக செயல்படுவர். அமைப்புச் செயலர் வளர்மதி விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்டத்திற்கும், தேர்தல் பிரிவு இணைச் செயலர் பாலகங்கா திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்திற்கும், அம்மா  பேரவை செயலர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாநகர் மாவட்டத்திற்கும், அமைப்புச் செயலர் கருப்பசாமி திருநெல்வேலி புறநகர் மாவட்டத்திற்கும் பொறுப் பாளர்களாக செயல்படுவர்.
 

எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிச் செயலர் ஆதிராஜாராம் திருவள்ளூர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு மாவட்டத்திற்கும், மாணவர் அணிச் செயலர் உதயகுமார் மதுரை மாநகர், விருதுநகர் மாவட்டத்திற்கும், மகளிர் அணிச் செயலர் கோகுல இந்திரா சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பொறுப் பாளர்களாக செயல்படுவர். மருத்துவ அணிச் செயலர் மைத்ரேயன் தென் சென்னைக்கும், மீனவர் பிரிவு இணைச் செயலர் ஜெனிபர் சந்திரன் தூத்துக்குடி மாவட்டத் திற்கும் பொறுப்பாளர்களாக செயல்படுவர். இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.


மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து அம்மா ., தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

 மைனாரிட்டி தி.மு.க., ஆட்சிக்கு எதிராக கோவையை தொடர்ந்து, திருச்சியில் டாகடர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் தலைமையில், அடுத்த மாதம் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

இது குறித்து அம்மா வெளியிட்ட அறிக்கை:நீரின்றி, மின்சாரமின்றி வேளாண் தொழிலை செய்ய முடியாமல், விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தலால், கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலை செய்ய முடியாமல் மீனவர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர்.காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் மைனாரிட்டி தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டு, உணவு, பஞ்சம் ஏற்படும் நிலை மை உருவாகி இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.கடலில் 12 மைல் தாண்டி, தமிழக மீனவர்கள் மீன் பிடித்தல் கூடாது; அப்படி பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம், 3 மாத சிறைத் தண்டனை போன்ற கடல் மீன் தொழில் ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வடிவு, தமிழக மீனவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

விவசாயிகள் வாழ்வோடு விளையாடியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தும், மணல் கொள்கையை மைனாரிட்டி தி.மு.க., அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு என்னும் கொடிய அரக்கனிடம் மக்களை சிக்க வைத்துள்ள மைனாரிட்டி தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.இ.அ.தி.மு.க., சார்பில் அடுத்த மாதம் 24ம் தேதி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

Monday, July 19, 2010

பதுக்கல், கடத்தலை அரசு ஊக்குவிப்பதே விலைவாசி உயர்வுக்கு காரணம்:

 "பதுக்கல், கடத்தல் தொழில்களை மைனாரிட்டி தி.மு.க., அரசு ஊக்குவிப்பது, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம்' என,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:முதல்வர் கருணாநிதி தன் அறிக்கையில் விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் பொறுப்பு என்றும், மத்திய அரசை நடத்தும் காங்கிரசை பற்றி நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். கருணாநிதியின் இது போன்ற பதில் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உள்ளது. பதுக்கல், கடத்தல் தொழில்களை மைனாரிட்டி தி.மு.க., அரசு ஊக்குவிப்பது விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம்.மத்திய கூட்டணி அரசின் அமைச்சரவையில் தி.மு.க., அங்கம் வகிப்பதோடு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. இதை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரே தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மறுப்பையும் கருணாநிதி இதுநாள் வரை தெரிவிக்கவில்லை. எனவே தான் விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு மைனாரிட்டி  தி.மு.க., அரசு காரணமென்று நான் குற்றம் சுமத்தினேன். அதே சமயத்தில் விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமான மத்திய அரசையும் நாங்கள் கண்டித்திருக்கிறோம்.அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்திலும் விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக, கருணாநிதி ஒரு புள்ளி விவரத்தை அளித்திருக்கிறார். உதாரணமாக 2001ம் ஆண்டு பொன்னி புழுங்கலரிசி விலை கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் இருந்ததாகவும், 2005ம் ஆண்டு 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அதிகபட்சமாக பொன்னி புழுங்கலரிசியின் விலை கிலோ 17 ரூபாய் என்ற அளவில் தான் விற்கப்பட்டது. ஆனால், தற்போது பொன்னி புழுங்கலரிசியின் விலை கிலோ 44 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலம் 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஒரு சில கடைகளில், சில நாட்கள் மட்டுமே வழங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் தரமற்று இருந்தது. இத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லையென்பதும் கருணாநிதிக்கு தெரியாது போலும்அ.இ..அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சாதாரண ஓட்டல்களில் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சாப்பாடு, தற்போது 50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதை வைத்தே, 4 ஆண்டுகளில் விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளதென்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா?மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியத் தொகை 2,000 கோடி ரூபாய் என்றும், அதில் 400 கோடி ரூபாய் ஏஜன்ட் கமிஷனை கருணாநிதி குடும்பத்தினர் பெற்று விட்டதாக, நான் குற்றம் சுமத்தி இருப்பது பொய் என்றும் கருணாநிதி கூறி இருக்கிறார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.அரசு ஆணையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஓர் ஆண்டிற்கு 517.307 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு ஆணையில் ஒரு குடும்பத்திற்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆண்டிற்கு 517.307 கோடி ரூபாய் என்றால், 4 ஆண்டுகளுக்கு தோராயமாக 2,000 கோடி ரூபாய் தானே? இதைத்தான் நான் குறிப்பிட்டேன். இதில் என்ன தவறை கருணாநிதி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.


Saturday, July 17, 2010

குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார்:கருணாநிதி அறிக்கைக்கு அம்மா விளக்கம்.


""நான் கூறிய குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு பதில் அளிக்காததன் மூலம் அவற்றில் உண்மை இருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்,'' என இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்.



இது குறித்து அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் நான் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, "ஆதாரமற்ற குற்றச்சாட்டும், ஆணித்தரமான பதிலும்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இதை படித்தால், என் பேச்சில் உள்ள ஆணித்தரம் அவரது பதிலில் இல்லை.மொத்தம் 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள சட்டசபையில் 118 பேரை பெற்றிருந்தால் தான் அது மெஜாரிட்டி. காங்கிரசை அமைச்சரவையில் சேர்த்திருந்தால் அதை கூட்டணி ஆட்சி எனச் சொல்லலாம். அப்படி இல்லாததால் தி.மு.க., ஆட்சி மைனாரிட்டி தான்.

கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கொண்டு தமிழகம் வளர்ச்சி பெற்றிருப்பதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உதாரணமாக 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற 110 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அது 1,929 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் விலைவாசி உயர்வு தான். இது எப்படி சாதனை. இதன் மூலம் விலைவாசி, அபரிமிதமாக உயர்ந்து விட்டதை கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார்.

போலீஸ் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறும் கருணாநிதி, தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டதை மறுக்கவில்லை. வேளாண் உற்பத்தி குறித்து மிகப் பெரிய புள்ளி விவரத்தை அளித்துள்ள கருணாநிதி, 3 லட்சம் எக்டேரில் நடந்த குறுவை சாகுபடி இந்த ஆண்டு 53 ஆயிரம் எக்டேரில் மட்டுமே நடந்துள்ளதையும், காவிரி டெல்டா பகுதிகளில் வெறும் 14 ஆயிரம் எக்டேர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதையும் வசதியாக மறைத்து விட்டார்.

நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள், புதிய கல்லூரிகள், பள்ளிகள் உருவாக்கப்படுவது, எல்லா ஆட்சியிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். இதை சாதனையாகக் கூறியுள்ளது நகைப்புக்குரியது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகியும், இறுதித் தீர்ப்பை அமல்படுத்த ஒரு துரும்பைக் கூட கருணாநிதி கிள்ளிப் போடவில்லை. இதிலிருந்தே கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது.

காலாவதி, போலி மருந்து, மின், குடிநீர் தட்டுப்பாடு, காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை, போலி மருந்து வினியோகம், உர மானியம் குறைப்பு, நூல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தா.கிருஷ்ணன் கொலை வழக்கு, ரேஷன் பொருட்கள் கடத்தல், மணல் கொள்ளை உள்ளிட்டவை குறித்தும் கருணாநிதி வாய் திறக்கவில்லை. இவ்வாறு அம்மா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Friday, July 16, 2010

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்துசென்னையில் அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்.

சென்னை:"தமிழக மீனவர்களின் உயிர், உடைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசு மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, சென்னை கலெக்டர் அலுவலகம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:மீனவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டிய மைனாரிட்டி  தி.மு.க., அரசு, அவர்களது வாழ்வாதாரத்தையே சீர்குலைத்துள்ளது.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதலில், நாகப்பட்டினம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன், கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இறந்தவரின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயை அளித்துவிட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தன்னுடைய பணியை கமுக்கமாக முடித்துக் கொண்டார் கருணாநிதி.

தமிழக மீனவர்கள் பிரச்னையில் உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காத சூழ்நிலையில், ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று எச்சரிக்கை விடுத்தால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.தன் சொந்தப் பிரச்னை என்றால் மத்திய அரசை மிரட்டும் கருணாநிதி, தமிழக மீனவர்கள் பிரச்னை என்றால் ஏன் அடக்கி வாசிக்கிறார்.தமிழக மீனவர்களின் உயிர், உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாமல், கடிதம் எழுதிக் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் மைனாரிட்டி  தி.மு.க., அரசைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க., வடசென்னை மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலர் சேகர்பாபு முன்னிலையில், ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் சனிக்கிழமையன்று (இன்று) சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா தெரிவித்துள்ளார்.

Tuesday, July 13, 2010

கோவை ஆர்பாட்டம் படங்கள்...

பிரம்மாண்ட கூட்டத்தில் அம்மா ஆவேசம் :


கோவை : ""தி.மு.க., அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்துமே மாயத்தோற்றங்கள். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் பதுக்கல் முறைகேடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது,இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் , கோவையில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார். கோவை நகரமே குலுங்கும் அளவுக்கு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க.,வையும், மாநில அரசையும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். 

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்வெட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம், கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று பகலில்  நடந்தது.

இரண்டு லட்ச்சதுகும் அதிகமானோர்  கலந்து கொண்ட இந்த பிரமாண்ட கூட்டத்தில் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  பேசியதாவது:நான்கு ஆண்டுகால மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியில் தமிழகம், தமிழ்மொழி, தமிழர்கள் வளர்ச்சியடையவில்லை. ஆனால், "தமிழ்' என்ற பெயரைச்சொல்லி ஒரு குடும்பம் மட்டும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிபோய்கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் தமிழின விரோத செயல்களை பட்டியலிடுபவர்கள், தாக்கப்படுகிறார்கள். தமிழை வழக்காடு மொழியாக்கு, என்று கூறுவோர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.மைனாரிட்டி  தி.மு.க., அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகளாகிவிட்டன; ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம்.பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா, என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின், ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.மைனாரிட்டி  தி.மு.க., அரசின் தோல்விகள் ஏராளம்.

அரசின் சாதனைகள் அனைத்தும் மாயத்தோற்றங்கள். மனிதன் உணவின்றி வாழமுடியாது. சாப்பிட அரிசி மட்டும் இருந்தால் போதாது. பருப்பு, உப்பு, மிளகாய், மசாலா, காய்கறிகளும் தேவை. இவற்றை சமைக்க மண்ணெண்ணெய் அல்லது எரிவாயு தேவை. இவற்றின் விலை நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துவிட்டது. உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் 17 விழுக்காடு உயர்ந்துள்ளதாக, அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருட்கள், தற்போது 240 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த அளவுக்கு விலைவாசி ஏன் உயர்ந்தது? இதற்கு பல காரணங்கள் உள்ளன.விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லை. அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை பம்பு மூலம் இறைக்க மின்சாரம் இல்லை. விவசாயப்பணிகள் முறையாக நடைபெறாததால், விவசாய தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகருக்கு செல்கிறார்கள்.

இதன் விளைவாக விவசாய பணிகளும், உற்பத்தியும் குறைந்துவிட்டன.மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியில் சட்டம்  ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளைகள் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழகம், இப்போது தரம் தாழ்ந்துவிட்டது. தமிழகத்தை பார்த்து இந்தியாவே வெட்கித் தலைகுனிகிறது. இந்நிலை மாறவும், தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கவும், வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளியுங்கள்; கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். இவ்வாறு அம்மா அவர்கள் ஆவேசமாக பேசினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வரவேற்புரை நிகழ்த்திய பின், பேசத்துவங்கிய அம்மா அவர்கள் , ஒரு மணி நேரம் வரை வேகம் குறையாமல் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.தனது உரையில், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை போன்று மிகவும் பொறுமையாக,மைனாரிட்டி  தி.மு.க., அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் எடுத்துக்கூறி, அத்திட்டங்களால் எவ்வித பயனுமில்லை என முழங்கினார்.  பேச்சுக்கு இடையே அவ்வப்போது தொண்டர்களை பார்த்து கேள்விகளை எழுப்பி, பதில் பெற்றார்.
வெள்ளிச்செங்கோல், வீரவாள் பரிசு :  கோவையில் அ.இ.அ.தி.மு.க., நடத்திய கண்டன பொதுக்கூட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற அம்மா அவர்கள் , கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராமன் 5 கிலோ எடையில் உருவாக்கிய வெள்ளிச் செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது ஜெயராமன் கூறியதாவது: கடந்த 1986 ம் ஆண்டு ஜூலை 13 ம்தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, அம்மா  செங்கோல் வழங்கினார். அந்த செங் கோலை அவர் வைத்துக் கொள்ளாமல் மீண்டும், அம்மாவிருக்கு  திரும்ப வழங்கினார்.அந்த நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் அதே தேதியில் அதே போல செங்கோலை, நான் அம்மாவிருக்கு செங்கோல் வழங்குகிறேன், என்றார். வீரவாள்: எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி பொதுச்செயலாளர் கே.ஆர்.ஜெயராம், வெள்ளியில் தயாரிக்கப் பட்ட வீரவாளை அம்மாவிற்கு  பரிசாக வழங்கினார். இது மூன்று கிலோ எடை கொண்டது. வாள் தனியாகவும், உரை தணியாகவும் இருந்தது. இரண்டரை அடி நீளம் கொண்டது.கூட்டத்தாரை நோக்கி வீரவாளை உயர்த்தி காண்பித்து வெற்றி நமதே என்று கூறினார்.,

Sunday, July 11, 2010

நாளை அ.இ.அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்

கோவை:பெட்ரோல், டீசல், கெரசின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கோவையில் நாளை அ.இ.அ.தி.மு.க., சார்பில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில், இதய தெய்வம் டாகடர் புரட்சிதலைவி அம்மா  பங்கேற்கிறார்.சமீபத்தில் மத்திய அரசு, பெட்ரோல், டீசல், கெரசின் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அ.இ.அ.தி.மு.க., சார்பில் நாளை (13ம் தேதி) கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.இதற்கென பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்பாடுகளை, அ.தி.மு.க., பொருளாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன் ஆகியோர் கோவையில் தங்கியிருந்து கவனித்து வருகின்றனர்.


கண்டன பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு, குடிநீர், உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அ.இ.அ.தி.மு.க., நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் நாளை பகல் 12.15 மணிக்கு அம்மா கோவை வருகிறார். விமான நிலையத்திலிருந்து கார் மூலம் அவினாசி ரோட்டிலுள்ள வ.உ.சி., பூங்கா மைதானம் வரும் அவர், அங்கு நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் 45 நிமிடம் பேசுகிறார். பின், மீண்டும் அவினாசி ரோடு வழியாக, கார் மூலம் விமான நிலையத்தை அடைந்து, சென்னை செல்கிறார்..

அனைவரும் வருக வருக......................................................

Tuesday, July 6, 2010

"கருணாநிதியின் மனப்பான்மையை காங்., புரிந்து கொள்ள வேண்டும்' ...

 ""காங்கிரஸ் கட்சியில் உள்ள கருணாநிதியின் நண்பர்கள், தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரின் உண்மையான மனப்பான்மை குறித்து புரிந்து கொள்ள வேண்டும், '' என டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ராஜிவ் கொலையை கருணாநிதி அங்கீகரித்துவிட்டார் என்ற உண்மையையும், ராஜிவ் கொலையாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எனது கோரிக்கையால் கருணாநிதி அடைந்த ஆத்திரம் இன்றுவரை அடங்கவில்லை என்பதையும், தன் அறிக்கை மூலம் கருணாநிதி  வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள கருணாநிதியின் நண்பர்கள், தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரின் உண்மையான மனப்பான்மை குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதியை போல், தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நட்புறவுடன் பேசிப் பழகும் பழக்கமும், அவர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்கும் பழக்கமும் எனக்கு இயற்கையாகவே கிடையாது.போர் நடக்கும்போது, பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மைதான். இதனுடன், இலங்கையில் வேண்டுமென்றே பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், போர் முடிந்துவிட்டது என கருணாநிதியால் அறிவிக்கப்பட்டபின், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்ததையும், கருணாநிதி ஒப்பிட்டுப் பேசுகிறார்.இதன் மூலம், இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்ததை  நியாயப்படுத்துகிறார்.

1980ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டுமென்பதற்காக விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆரும், நானும் ஆதரவு அளித்து வந்தோம்.ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும், கடைசியாக முன்னாள் பிரதமரையும் கொலை செய்தததற்குப் பிறகு, விடுதலைப் போராட்ட அமைப்பு பயங்கரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.அந்த தருணத்தில் இருந்து, புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன்; கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை.

இன்றைக்குக்கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன் சரணடைந்த புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன்.இவ்வாறு தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்கு தனது மகளையும், மூத்த தி.மு.க., கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து, அவர்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களுடன் நாடு திரும்பி வந்தததற்கு காரணமான கருணாநிதியின் நடவடிக்கையை கண்டிக்கிறேன்.நூற்றுக்கணக்கான தமிழ்ச் செம்மொழி மாநாடுகளை உலகம் முழுவதும் நடத்தினாலும், கருணாநிதியின் துரோகச் செயலை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார்.

Monday, July 5, 2010

தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் வெற்றி : அம்மா, நன்றி

 தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை:பெட்ரோல், டீசல் விலையையும், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இதற்கு தன் முழு ஆதரவை அளித்துள்ள தி.மு.க., அரசைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் சார்பில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.பண பலம், ரவுடிகள் பலம் மற்றும் போலீசாரின் துணையோடு, வன்முறை மூலமாக இந்தப் போராட்டத்தை முறியடிக்க தி.மு.க., சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் தி.மு.க., ரவுடிகள் கடைகளை திறக்குமாறு வியாபாரிகளையும், வர்த்தகர்களையும், வாகனங்களை இயக்குமாறு டிரைவர்களையும் போலீஸ் துணையோடு மிரட்டி உள்ளனர்.

அவர்களைத் தட்டிக் கேட்ட அ.இ.அ.தி.மு.க., மற்றும் தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களை கைது செய்து, அவர்கள் மீது பொய் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். தி.மு.க., அரசின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குளை ரத்து செய்து, உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தி.மு.க., அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.இத்தனை அராஜகச் செயல்களையும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மீறி இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு இதய தெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Friday, July 2, 2010

தூத்துக்குடியில் அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு மூடு விழா நடத்த முயற்சிப்பதற்கும், குடிநீர், சாலை வசதி நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், அ.இ. அ.தி.மு.க., சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடியில் இருந்து தெற்கே செல்லும் பஸ்கள், பாளையங்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பஸ்கள் மூன்றாம் கேட் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. 1993ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தைச் சுற்றி, தூத்துக்குடி தி.மு.க., மாவட்டச் செயலர் மற்றும் அவரது உறவினர்களுக்கு வணிக வளாகம், நட்சத்திர அந்தஸ்துள்ள உணவகம், நிலம் ஆகியவை உள்ளன.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயங்கினால், சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில், தன் சுயநலத்திற்காக அப்போதே பழைய பஸ் நிலையத்தை மூட நினைத்தவர் தி.மு.க., மாவட்டச் செயலாளர்  பெரியசாமி. அப்போது, அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி, கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இன்றி பஸ்கள் இயங்கி வந்தன. தற்போது, மக்களின் எதிர்ப்பையும் மீறி, அனைத்து பஸ்களும், புதிய பஸ் நிலையத்திலிருந்து இயங்கும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தன் சுயநலத்திற்காக நடவடிக்கை எடுக்கும் மாவட்டச் செயலர், குடிநீர், மின் வசதி, சாலை வசதி போன்றவற்றை செய்து தரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் தொடர் மின் தடை காரணமாக, அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல், தன் சுயநலத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் தி.மு.க., மாவட்டச் செயலரின் செயல் கண்டிக்கத்தக்கது. எனவே, பழைய பஸ் நிலையத்துக்கு மூடுவிழா நடத்த துடிப்பதுடன், மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத மைனாரிட்டி  தி.மு.க., அரசைக் கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன், அ.இ.அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு
புரட்சிதலைவி அம்மா அவர்கள் 
தெரிவித்துள்ளார்.



Thursday, July 1, 2010

கருணாநிதி போர்க் குற்றவாளி:அம்மா அறிக்கை.



 "ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அவர்களை அ.இ. அ.தி.மு.க., குழு சந்தித்து, "கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி' என பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும்' என, டாகடர் புரட்சிதலைவி அம்மா  அறிவித்துள்ளார்.
அம்மாவின் அறிக்கை: இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடந்த உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் தலைமையில், மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்து உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழர்களை தமிழக அரசும், அதன் முதல்வருமான கருணாநிதியும் கைவிட்டுவிட்ட நிலையில், பான் கி மூன் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழுவுக்கு விசா தருவதை, இலங்கை அரசு தனது இயல்புக்கு ஏற்ப மறுத்து வருகிறது. ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐ.நா., குழுவை சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் இந்தக் குழு, ராஜபக்ஷேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, அண்ணாதுரை நினைவிடம் அருகே திடீர் உண்ணாவிரதம் இருந்தார். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என அறிவித்தார். "கனரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்படாது' என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின், "உண்ணாவிரதத்தை' நிறுத்திவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, அப்பாவி இலங்கைத் தமிழர்கள், கருணாநிதியின் வார்த்தையை நம்பி, போர் முடிந்துவிட்டது என நினைத்து, பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள், கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர். போர் நிறுத்தம் ஏற்படாதபோது, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை, ராணுவத்துக்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி, அவர்களைக் கொலை செய்ய கருணாநிதி உதவி புரிந்திருக்கிறார்.

ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் எனக் கருதப்படுகின்றனரோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான். ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழு, இலங்கை செல்லும்போது அவர்களை அ.தி.மு.க.,வைச் சேர்ந்த குழு சந்தித்து, "கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி' என பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும். இந்த மரண வியாபாரியின் சதிச் செயல்கள் காரணமாக போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான ஆத்மாக்களுக்கு குறைந்தபட்சம், இதையாவது நாம் செய்ய வேண்டும்; இதைத் தான் நம்மால் செய்ய முடியும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள்ளார்.