எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, July 17, 2010

குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார்:கருணாநிதி அறிக்கைக்கு அம்மா விளக்கம்.


""நான் கூறிய குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு பதில் அளிக்காததன் மூலம் அவற்றில் உண்மை இருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்,'' என இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்.



இது குறித்து அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் நான் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, "ஆதாரமற்ற குற்றச்சாட்டும், ஆணித்தரமான பதிலும்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இதை படித்தால், என் பேச்சில் உள்ள ஆணித்தரம் அவரது பதிலில் இல்லை.மொத்தம் 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள சட்டசபையில் 118 பேரை பெற்றிருந்தால் தான் அது மெஜாரிட்டி. காங்கிரசை அமைச்சரவையில் சேர்த்திருந்தால் அதை கூட்டணி ஆட்சி எனச் சொல்லலாம். அப்படி இல்லாததால் தி.மு.க., ஆட்சி மைனாரிட்டி தான்.

கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கொண்டு தமிழகம் வளர்ச்சி பெற்றிருப்பதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உதாரணமாக 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற 110 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அது 1,929 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் விலைவாசி உயர்வு தான். இது எப்படி சாதனை. இதன் மூலம் விலைவாசி, அபரிமிதமாக உயர்ந்து விட்டதை கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார்.

போலீஸ் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறும் கருணாநிதி, தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டதை மறுக்கவில்லை. வேளாண் உற்பத்தி குறித்து மிகப் பெரிய புள்ளி விவரத்தை அளித்துள்ள கருணாநிதி, 3 லட்சம் எக்டேரில் நடந்த குறுவை சாகுபடி இந்த ஆண்டு 53 ஆயிரம் எக்டேரில் மட்டுமே நடந்துள்ளதையும், காவிரி டெல்டா பகுதிகளில் வெறும் 14 ஆயிரம் எக்டேர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதையும் வசதியாக மறைத்து விட்டார்.

நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள், புதிய கல்லூரிகள், பள்ளிகள் உருவாக்கப்படுவது, எல்லா ஆட்சியிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். இதை சாதனையாகக் கூறியுள்ளது நகைப்புக்குரியது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகியும், இறுதித் தீர்ப்பை அமல்படுத்த ஒரு துரும்பைக் கூட கருணாநிதி கிள்ளிப் போடவில்லை. இதிலிருந்தே கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது.

காலாவதி, போலி மருந்து, மின், குடிநீர் தட்டுப்பாடு, காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை, போலி மருந்து வினியோகம், உர மானியம் குறைப்பு, நூல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தா.கிருஷ்ணன் கொலை வழக்கு, ரேஷன் பொருட்கள் கடத்தல், மணல் கொள்ளை உள்ளிட்டவை குறித்தும் கருணாநிதி வாய் திறக்கவில்லை. இவ்வாறு அம்மா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment