எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, July 5, 2010

தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் வெற்றி : அம்மா, நன்றி

 தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை:பெட்ரோல், டீசல் விலையையும், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இதற்கு தன் முழு ஆதரவை அளித்துள்ள தி.மு.க., அரசைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் சார்பில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.பண பலம், ரவுடிகள் பலம் மற்றும் போலீசாரின் துணையோடு, வன்முறை மூலமாக இந்தப் போராட்டத்தை முறியடிக்க தி.மு.க., சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் தி.மு.க., ரவுடிகள் கடைகளை திறக்குமாறு வியாபாரிகளையும், வர்த்தகர்களையும், வாகனங்களை இயக்குமாறு டிரைவர்களையும் போலீஸ் துணையோடு மிரட்டி உள்ளனர்.

அவர்களைத் தட்டிக் கேட்ட அ.இ.அ.தி.மு.க., மற்றும் தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களை கைது செய்து, அவர்கள் மீது பொய் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். தி.மு.க., அரசின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குளை ரத்து செய்து, உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தி.மு.க., அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.இத்தனை அராஜகச் செயல்களையும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மீறி இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு இதய தெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment