எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, July 2, 2010

தூத்துக்குடியில் அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு மூடு விழா நடத்த முயற்சிப்பதற்கும், குடிநீர், சாலை வசதி நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், அ.இ. அ.தி.மு.க., சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடியில் இருந்து தெற்கே செல்லும் பஸ்கள், பாளையங்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், தூத்துக்குடிக்கு வடக்கே செல்லும் பஸ்கள் மூன்றாம் கேட் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. 1993ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தைச் சுற்றி, தூத்துக்குடி தி.மு.க., மாவட்டச் செயலர் மற்றும் அவரது உறவினர்களுக்கு வணிக வளாகம், நட்சத்திர அந்தஸ்துள்ள உணவகம், நிலம் ஆகியவை உள்ளன.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயங்கினால், சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில், தன் சுயநலத்திற்காக அப்போதே பழைய பஸ் நிலையத்தை மூட நினைத்தவர் தி.மு.க., மாவட்டச் செயலாளர்  பெரியசாமி. அப்போது, அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி, கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இன்றி பஸ்கள் இயங்கி வந்தன. தற்போது, மக்களின் எதிர்ப்பையும் மீறி, அனைத்து பஸ்களும், புதிய பஸ் நிலையத்திலிருந்து இயங்கும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தன் சுயநலத்திற்காக நடவடிக்கை எடுக்கும் மாவட்டச் செயலர், குடிநீர், மின் வசதி, சாலை வசதி போன்றவற்றை செய்து தரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் தொடர் மின் தடை காரணமாக, அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல், தன் சுயநலத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் தி.மு.க., மாவட்டச் செயலரின் செயல் கண்டிக்கத்தக்கது. எனவே, பழைய பஸ் நிலையத்துக்கு மூடுவிழா நடத்த துடிப்பதுடன், மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத மைனாரிட்டி  தி.மு.க., அரசைக் கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன், அ.இ.அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு
புரட்சிதலைவி அம்மா அவர்கள் 
தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment