எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, July 25, 2010

ராதாபுரத்தில் காமராஜர், கக்கன் சிலை அமைக்க அம்மா கோரிக்கை

 "ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை, வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் நிறுவ, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும்' என,டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பஸ் நிலையம்' என பெயரிட்டு, அங்கு தன் பெற்றோரான அந்த இருவரின் சிலைகளையும் திறக்கும் முயற்சியை, கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்வர் கருணாநிதி மேற்கொண்டார்.இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி அ.இ.அ.தி.மு.க., சார்பில், வள்ளியூரில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதையடுத்து, ராதாபுரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பஸ் நிலையம் என்று பெயரிட்டு அங்கு இருவரது சிலையையும் திறப்பதற்கான நடவடிக்கையை கைவிடுவதாக கருணாநிதி அறிவித்தார்.சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், வேறு வழியின்றி ராதாபுரம் பஸ்நிலையத்திற்கு காமராஜர் பஸ்நிலையம் என்று பெயரிட்டிருக்கிறார் கருணாநிதி.உண்மையிலேயே காமராஜரின் மீது கருணாநிதிக்கு மரியாதை இருந்திருக்குமானால் கடந்த ஆண்டே ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஆனால், அதை கருணாநிதி செய்யவில்லை.இதே போன்று, காமராஜர் பஸ் நிலையத்தில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக தற்போது நிறுவப்பட்டுள்ள முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றி விட்டு காமராஜர், கக்கன் சிலைகளை நிறுவ தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் சிலைகளை அமைக்காவிடில், மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, தியாகி சுடலை முத்து அறிவித்துள்ளார். இதற்கு, அ.இ.அ.தி.மு.க., ஆதரவு அளிக்கிறது.இவ்வாறு அம்மா அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment