எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, July 23, 2010

இடஒதுக்கீட்டுக்கு உரிமை கொண்டாட பார்க்கிறார் : அம்மா குற்றச்சாட்டு

 "தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக, அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பிற்கு, கருணாநிதி உரிமை கொண்டாட பார்க்கிறார்' என, டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: எனது ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சாதகமான உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. இதனால் எனக்கு பெயரும், புகழும் கிடைத்து விடுமோ என்பதற்காக, அதை இருட்டடிப்பு செய்யும் வகையில், வாய்மூடி மவுனியாக இருந்தார் முதல்வர் கருணாநிதி. எனக்கு பாராட்டு விழா நடத்த தற்போது பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 69 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு பங்கம் ஏற்படும் நிலை ஏற்பட்ட போது, இட ஒதுக்கீடு பிரச்னையில் நான் இரட்டை வேடம் போட்டதாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 1991ம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்ற பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேரா வண்ணம் எப்பொழுதும் போல், இனி வருங்காலம் முழுவதிலும், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களின் அனுமதியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும்.

இந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்னால் முன்மொழியப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை கொச்சைப்படுத்தியவர் கருணாநிதி. இப்படிப்பட்டவர் இன்று நான் இரட்டை வேடம் போடுகிறேன் என்று சொல்கிறார். இந்தச் சட்டத்திற்கு தற்போது உரிமை கொண்டாடுகிறார். இது கண்டனத்துக்குரியது. இடஒதுக்கீடு பிரச்னையில் நான் எடுத்த உறுதியான நடவடிக்கைக்காகத் தான் "சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் எனக்கு அளிக்கப்பட்டது. கருணாநிதிக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின், தற்போது தன்னுடன் இருக்கும் வீரமணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இடஒதுக்கீடு தொடர்பாக அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பிற்கு கருணாநிதி உரிமை கொண்டாட பார்க்கிறார். இவ்வாம்று அம்மா அவர்கள் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment