அ.இ.அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை அ.இ.அ.தி.மு.க.,நிரந்தர பொதுசெயலாளர்டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் திருத்தி அமைத்து உள்ளார். வடசென்னைக்கு அவைத் தலைவர் மதுசூதனனும், தென் சென்னைக்கு மைத்ரேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்மா வெளியிட்ட அறிவிப்பு: அவைத்தலைவர் மதுசூதனன் வடசென்னைக்கும், அமைப்புச் செயலர் பொன்னையன் சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டத்திற்கும், பன்னீர் செல்வம் மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக செயல்படுவர். தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் ஈரோடு மாநகர், புறநகர், நாமக்கல், நீலகிரி மாவட்டத்திற்கும், எம்.ஜி.ஆர்., மன்றச் செயலர் ஜெயக்குமார் திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தேர்தல் பிரிவுச் செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக செயல்படுவர். அமைப்புச் செயலர் தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், அமைப்புச் செயலர் செம்மலை
சேலம் மாநகர், கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்டத்திற்கும், விவசாயப் பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன் தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்டத்திற்கும், விவசாய பிரிவுச் செயலர் சோழன் பழனிச்சாமி திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் பொறுப் பாளர்களாக செயல்படுவர். அமைப்புச் செயலர் வளர்மதி விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்டத்திற்கும், தேர்தல் பிரிவு இணைச் செயலர் பாலகங்கா திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்திற்கும், அம்மா பேரவை செயலர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாநகர் மாவட்டத்திற்கும், அமைப்புச் செயலர் கருப்பசாமி திருநெல்வேலி புறநகர் மாவட்டத்திற்கும் பொறுப் பாளர்களாக செயல்படுவர்.
எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிச் செயலர் ஆதிராஜாராம் திருவள்ளூர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு மாவட்டத்திற்கும், மாணவர் அணிச் செயலர் உதயகுமார் மதுரை மாநகர், விருதுநகர் மாவட்டத்திற்கும், மகளிர் அணிச் செயலர் கோகுல இந்திரா சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பொறுப் பாளர்களாக செயல்படுவர். மருத்துவ அணிச் செயலர் மைத்ரேயன் தென் சென்னைக்கும், மீனவர் பிரிவு இணைச் செயலர் ஜெனிபர் சந்திரன் தூத்துக்குடி மாவட்டத் திற்கும் பொறுப்பாளர்களாக செயல்படுவர். இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment