எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, July 29, 2010

ஹார்லிக்ஸ் கொள்ளைக்கு சி.பி.ஐ., விசாரணை; அம்மா கோரிக்கை

 "திருவாலயநல்லூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என டாக்டர் புரட்சிதலைவி அம்மா கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், "தனக்கு சொந்தமான சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட 770 பெட்டிகளிலிருந்த 9,240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள திருவாலயநல்லூரில் கடந்த 12ம் தேதி, கொள்ளை போயிருப்பது தெரிய வந்ததாகவும், இது குறித்த புகாரை சோழவந்தான் போலீஸ் அதிகாரி வாங்க மறுத்து விட்டார்' என மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், "இரண்டு மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டது. சில நாட்கள் கழித்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடந்த சம்பவத்துக்காக  
÷ பாலீஸ்  இன்ஸ்பெக்டர் வருத்தம் தெரிவித்து, வழக்கு தொடர்புடைய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
 அவற்றை பரிசீலித்த ஐகோர்ட், "இவ்வழக்கில், பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 17ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், 20ம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்' கருத்து தெரிவித்து இருக்கிறது. மேலும், வழக்கை திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி.,க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, "விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்திற்குள், ஐகோர்ட்டில் சமர்பிக்க வேண்டும்' என தீர்ப்பளித்துள்ளது.   இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுவது தான் பொருத்தமாக இருக்குமென்பதை சுட்டிக்காட்டி, அறவழி மீறி மக்களை துன்புறுத்தும் மைனாரிட்டி  தி.மு.க., அரசு, வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்பதை கருணாநிதிக்கு இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment