எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, May 27, 2016

Thursday, May 26, 2016

500 டாஸ்மாக் கடைகள் பட்டியல் தயார் ஓரிரு நாளில் மூடப்படும்

500 டாஸ்மாக் கடைகள் பட்டியல் தயார் ஓரிரு நாளில் மூடப்படும்
5/27/2016 11:36:14 AM
சென்னை,

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத் தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப் படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல்-அமைச்ச ராக ஜெயலலிதா பொறுப் பேற்றதும் தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றும் 5 கோப்புகளில் கையழுத் திட்டார்.

தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மதுக்கடை கள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைத்ததோடு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி பதவி ஏற்ற மறுநாளே மதுக்கடைகளின் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மூடப்பட வேண் டிய 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டது. பள்ளிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் செயல்படும் மதுக்கடைகளை மூட முடிவு செய்யப்பட்டது.கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் மூடப்பட வேண்டிய மதுக்கடை களின் பட்டியலை தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த பள்ளி கள், கோவில்கள், சர்ச்கள், மசூதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், விற்பனை குறைவான இடங்கள், கிராமப்புறங்கள், அருகருகே உள்ள கடைகள் என்ற அடிப்படையில் மாவட்டத்துக்கு 10 முதல் 15 கடைகள் வரை கணக்கெடுக்கபட்டு உள்ளன. இதன்படி 525 கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இந்த பட்டியலில் இருந்து 500 கடைகளை தேர்வு செய்வதற்காக டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களின் ஆலோ சனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டி யல் இறுதி செய்யப்பட்டது.

இந்த பட்டியல் அரசின் ஒப்புதலுக்கு இன்று வழங்கப்படுகிறது. ஓரிரு நாளில் அரசு ஒப்புதல் அளித்ததும் 500 டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த பார் களும் மூடப்படும் என்று டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு முதலைமைச்சர் நன்றி


‘எனது தலைமையிலான அரசு மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும்’ வாக்காளர்களுக்கு முதலைமைச்சர்  நன்றி
12:29 AM | மே 27, 2016
சென்னை,எனது தலைமையிலான அரசு மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்று தமிழக முதல்-அமைச்சர் அம்மா தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அ.தி.மு.க.வுக்கு வழங்கி உள்ளனர்.“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.வாக்காளர்களுக்கு நன்றிதமிழக மக்கள் எனது தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது நன்றி உரித்தாகுக. அ.தி.மு.க வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும்இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அளித்ததைப் போல, தொடர் வெற்றியை எனக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல எனது தலைமையிலான புதிய அரசு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்ற உறுதிமொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மக்களின் தீர்ப்பை ஏற்க மனமில்லாமல் தோல்வியை மூடி மறைக்க புள்ளி விவர குளறுபடிகளை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட கருணாநிதி முயற்சி இது கருணாநிதியின் பிறவிக்குணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து.

சென்னை, மே 25             
தமிழகத்தில் நடந்து முடிந்த 15வது சட்ட தேர்தலில், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான கழகம் வரலாற்றுச்சிறப்பு மிக் க வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக் குப்பின்னர், 2 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அடுத்தடுத்து அமோக
வெற்றிபெற்று, மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளார் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, புள்ளி விவரம் என்ற பெயரில், அலங்கோல கணக்குகளை அள்ளித் தெளித்து, தனது கட்சிக்கு
ஆதாயம் அளித்த கூட்டணிக்கட்சியினரையே அவமானப்படுத்தி, தனது பிறவிக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை யிலான கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக 23 4 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டது. ஆனால், தி.மு.க.வோ, பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் தேர்தலில் போட்டி யிட்டது. 180 தொகுதிகளில் தி.மு.க.வும், 54 இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட
கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. 134 இடங்களில் அமோக
வெற்றி பெற்று, 3 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுகின்ற கட்சியே, தொடர்ந்து ஆட்சியில் அமரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Monday, March 12, 2012

மனித உரிமைகள் மீறல் விவகாரம்: கண்டனத் தீர்மானத்தைத் தடுக்க ராஜபக்சே கடைசி நேர முயற்சி.

ஜெனீவா, மார்ச். 11
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
கொண்டுவந்துள்ள
தீர்மானத்தின் மீதான
ஓட்டெடுப்பை தடுக்க
இலங்கை அரசு கடும்
முயற்சியில் இறங்கியுள்ளது.
இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
தீர்மானம் ஒன்றை சமர்ப்
பித்துள்ளது. இந்த தீர்மா
னத்தின் மீதான ஓட்டெ
டுப்பை தடுத்து நிறுத்தும்
வகையில் இலங்கை தூது
குழுவினர் ஜெனீவா விரை
கின்றனர். வருகிற 23&ந்
தேதி வரை ஐ.நா. மனித
உரிமை பேரவையில்
19வது கூட்டத் தொடர்
நடைபெறுகிறது. இதற்கு
முன்பாக 20ந் தேதி
இலங்கைக்கு எதிரான
அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடை
பெறும் என்று தெரிவிக்
கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை மத்திய
அரசு ஆதரிக்க வேண்டும்
என முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
கடிதம் எழுதியிருந்தார்கள்.
இந்த வாக்கெடுப்பை
தடுத்து நிறுத்த இலங்கை
அரசு பகீரத முயற்சியில்
இறங்கியுள்ளது. இலங்கை
அதிபர் ராஜபக்சேவின்
விசேஷ தூதர் மஹிந்த சம
ரசிங்க ஜெனீவா விரைந்
தார். அமெரிக்காவின் தீர்
மானத்திற்கு ஏற்கெனவே
சில நாடுகள் ஆதரவு வழங்
கியுள்ள நிலையில், அனைத்து
உறுப்பு நாடுகளுடன்
இலங்கை தூது குழுவினர்
பேச்சு நடத்தவுள்ளதாக
தெரியவந்துள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012


தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவை கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, திரு.ரி.றி.சுப்பு (எ) சுப்பிரமணியன், (தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, March 7, 2012

தமிழ் மக்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு மீண்டும் கடிதம்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை
அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித
உரிமைள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா
உறுதிபட ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
மீண்டும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்கள். ஜெனீவா மனித உரிமைகள்
குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா
கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
வலியுறுத்தியுள்ளார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கடந்த
(பிப்ரவரி) 29ம் தேதி பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள்.
அந்தக் கடிதத்தில் இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில்
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்திக்
கேட்டுக் கொண்டார்கள்.