எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, March 7, 2012

தமிழ் மக்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு மீண்டும் கடிதம்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை
அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித
உரிமைள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா
உறுதிபட ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
மீண்டும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்கள். ஜெனீவா மனித உரிமைகள்
குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா
கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
வலியுறுத்தியுள்ளார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கடந்த
(பிப்ரவரி) 29ம் தேதி பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள்.
அந்தக் கடிதத்தில் இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில்
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்திக்
கேட்டுக் கொண்டார்கள்.


1 comment: