எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, March 12, 2012

மனித உரிமைகள் மீறல் விவகாரம்: கண்டனத் தீர்மானத்தைத் தடுக்க ராஜபக்சே கடைசி நேர முயற்சி.

ஜெனீவா, மார்ச். 11
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
கொண்டுவந்துள்ள
தீர்மானத்தின் மீதான
ஓட்டெடுப்பை தடுக்க
இலங்கை அரசு கடும்
முயற்சியில் இறங்கியுள்ளது.
இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
தீர்மானம் ஒன்றை சமர்ப்
பித்துள்ளது. இந்த தீர்மா
னத்தின் மீதான ஓட்டெ
டுப்பை தடுத்து நிறுத்தும்
வகையில் இலங்கை தூது
குழுவினர் ஜெனீவா விரை
கின்றனர். வருகிற 23&ந்
தேதி வரை ஐ.நா. மனித
உரிமை பேரவையில்
19வது கூட்டத் தொடர்
நடைபெறுகிறது. இதற்கு
முன்பாக 20ந் தேதி
இலங்கைக்கு எதிரான
அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடை
பெறும் என்று தெரிவிக்
கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை மத்திய
அரசு ஆதரிக்க வேண்டும்
என முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
கடிதம் எழுதியிருந்தார்கள்.
இந்த வாக்கெடுப்பை
தடுத்து நிறுத்த இலங்கை
அரசு பகீரத முயற்சியில்
இறங்கியுள்ளது. இலங்கை
அதிபர் ராஜபக்சேவின்
விசேஷ தூதர் மஹிந்த சம
ரசிங்க ஜெனீவா விரைந்
தார். அமெரிக்காவின் தீர்
மானத்திற்கு ஏற்கெனவே
சில நாடுகள் ஆதரவு வழங்
கியுள்ள நிலையில், அனைத்து
உறுப்பு நாடுகளுடன்
இலங்கை தூது குழுவினர்
பேச்சு நடத்தவுள்ளதாக
தெரியவந்துள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012


தலைமைக் கழக அறிவிப்பு எண். 37/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவை கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, திரு.ரி.றி.சுப்பு (எ) சுப்பிரமணியன், (தஞ்சாவூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, March 7, 2012

தமிழ் மக்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு மீண்டும் கடிதம்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை
அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித
உரிமைள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா
உறுதிபட ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
மீண்டும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்கள். ஜெனீவா மனித உரிமைகள்
குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா
கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
வலியுறுத்தியுள்ளார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கடந்த
(பிப்ரவரி) 29ம் தேதி பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள்.
அந்தக் கடிதத்தில் இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில்
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்திக்
கேட்டுக் கொண்டார்கள்.


முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுடன் மறைந்த முன்னாள் அமைப்புச் செயலாளர் சொ.கருப்பசாமி குடும்பத்தினர் சந்திப்பு சங்கரன்கோவில் கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யப்போவதாக உறுதி.

கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களை மறைந்த
கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சரு-
மான சொ.கருப்பசாமியின் குடும்பத்தினர்
நேரில் சந்தித்தனர். சங்க-ரன்-கோவில் இடைத்
தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்
முத்துச்செல்விக்காக தீவிர தேர்தல் பணி-
யாற்றி அவரை வெற்றிபெறச் செய்யப்போவ-
தாக அப்போது அவர்கள் உறுதி அளித்-தனர்.


Thursday, March 1, 2012

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த மூவர் குடும்பத்துக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.


சென்னை,  மார்ச். 1
வி ரு து ந க ர்  மா வ ட் ட ம் ,   சிவகாசி
வட்டம் சல்வார்பட்டியிலுள்ள தனியார்
ப ட் டா சு ஆலை வெடி
விபத்தில் மரணமடைந்த மூவர் குடும்
பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் தலா ரூ. 1 லட்சம்
வீ த ம்   நி தி யு த வி   அ ளி க் க   உ த் த ர
விட்டுள்ளார்கள்.
இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கை வருமாறு:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம்,
சல்வா ர்பட்டி கிர மத்தில் இயங்கி வரும்
தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 27.2.2012
அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சாத்தூரைச்
சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் முருகன்
ம ற் று ம்   ப ட ந் த ல்   கி ர ம த் த ச்   ச ர் ந் த
சுப்புராஜ் என்பவரின் மகன் மாரிக்கண்ணன்
ஆகிய  இருவரும் படுகாயமடைந்து மருத்துவ
ம ன யி ல்   அ னு ம தி க் க ப் ப ட் டு   சி கி ச் ச
பலனின்றி 28.2.2012 அன்றும், ஆண்டாள்புரம்
கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின்
மகன் பழனி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் 29.2.2012 அன்றும்
உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான்
மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கி மரணமடைந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை மூலம் ரூ.3 லட்சம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

காட்டு யானை தாக்கியதில் மரண
மடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ. 3
லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அ ம் ம மா  அ வ ர் க ள்   வி டு த் து ள் ள   அ றி க்  க
வருமாறு :
கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி
வ ன ச் ச ர க ம் ,   ப  ம் ப  ட் டி   சு  ண   ச ர க ம்
ப கு தி யி ல்   2 8 . 2 . 2 0 1 2   அ ன் று   தணி க ண் டி
கிராமத்தைச் சேர்ந்த பைரவன் என்பவர் காப்பு
காட்டில் நடந்து செல்லும் போது, காட்டு
யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான்
மிகவும் துயரம் அடைந்தேன்.

மனித உரிமைகளை மீறி போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்.

சென்னை,  மார்ச். 1
இலங்கை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசைக் கண்டித்து, ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியா, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளையட்டி மாணவ - மாணவியர் 202 பேருக்கு உயர் கல்வி பயில ரூ.17 லட்சம் நிதியுதவி சென்னை மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.

சென்னை, மார்ச் 1
முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களின்
பிறந்த நாளையட்டி
மாணவ&மாணவியர் 202
பேருக்கு உயர்கல்வி பயில
ரூ.17 லட்சம் நிதியுதவியை
சென்னை மாநகர மேயர்
சைதை துரைசாமி வழங்
கினார்.
சென்னை மாநகராட்சி
 ம ய ர்   அ றி வி த் த வ � று
ம ர் ச்  2 0 1 1  ம்   ஆ ண் டு
பொதுத்தேர்வு மதிப்பெண்
தரவரிசை அடிப்படையில்
உ ய ர் க ல் வி   ப யி லு ம்
சென்னை பள்ளி மாணவ
-   ம  ண வி ய ர் க ளு க் கு
உதவி தொகை வழங்கும்
விழா நடைபெற்றது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: கழகத்திற்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு.

சென்னை, மார்ச் 1
சங்கரன்கோவில்இடைத்
 த ர் தலில்  கழக த்துக்கு
மேலும் சில  கட்சிகள்
தங்கள் ஆதரவை தெரிவித்
துள்ளன.
இந்திய தேசிய
முஸ்லீம் லீக்
தமிழகத்தில் ஏற்பட்டி
ருந்த கடுமையான நிதி
பற்றாக்குறையை போக்கி
மக்கள் நலத்திட்டங்களில்
அக்கறை கொண்டு தமிழ
கத்தை சிறந்த மாநிலமாக்
கப் பாடுபடும் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களின்
நல்லாட்சி தொடர நடை
பெறவுள்ளசங்கரன்கோவில்
இடைத்தேர்தலில் இந்திய
தேசிய முஸ்லீம் லீக் கட்சி
தனது முழு ஆத ரவை
அளித்து உள்ளது என
அதன்தலைவர்ஒய்.ஜவஹர்
அலி கூறியுள்ளார்.
வாணியர் பேரவை
மார்ச் 18ந் தேதி நடை
பெறவிருக்கும் சங்கரன்
கோவில்சட்டமன்றதொகுதி
இ  ட த்  த ர் த லி ல்
அ.இ.அ.தி.மு.க. வேட்பா
ளர் முத்துச்செல்வி அதிக
வாக்குகள்வித்தியாசத்தில்
வெற்றிபெற தமிழ்நாடு
வாணியர் செட்டியார்
பேரவை பாடுபடும் என்று
மாநிலத் தலைவர் ஆர்.
பன்னீர்செல்வம் செட்
டியார் அறிவித்துள்ளார்.

Wednesday, February 29, 2012

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

வேலூர் மாவட்டத்தில் நடந்த சாலை
விபத்தில் மரணமடைந்த பெண்ணின்
குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி
வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

திருச்சி-1 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆரோக்கியசாமி மறைவு கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா இரங்கல்.

சென்னை, பிப்.28
திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி-1
தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.ஆரோக்கியசாமி மறைவுக்கு கழகப்
பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இரங்கல்
தெரிவித்துள்ளார்கள். .
இது குறித்து முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் இரங்கல்
செய்தி வருமாறு:
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி-1
தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எஸ். ஆரோக்கியசாமி மாரடைப்பால் மரண
மடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு
வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் ஆரோக்கியசாமியை
இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு
எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்
தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னா
ரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில்
இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.

மின் தடையை சமாளிக்க அரசு செலவில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: மாணவர் நலனுக்கு பாடுபடும் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு மாணவர்கள்-ஆசிரியர்கள் - பெற்றோர்கள் நன்றி - பாராட்டு.

சென்னை, பிப். 28
மின் தடையை சமாளிக்க பள்ளிகளுக்கு அரசு செலவில் ஜெனரேட்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். வீண் ஆடம்பரம், பாராட்டு விழாக்கள், திரைப்படம் சார்ந்த விழாக்களில் பங்கு பெறு வதையும், துதிபாடிகள் மூலம் பாராட்டப்படு வதையும் தவிர கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி தமிழகத்தின் நலன் கருதி எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செயல் படுத்தியதில்லை. பாலம் கட்டுகிறேன், நெரிசலைக் குறைக்கிறேன் என பல நூறு கோடி ரூபாய்களில் கருணாநிதி கட்டிய பாலங்கள் நெரிசலை சமாளிக்கப்பயன்பட வில்லை என்பது கண்கூடு. புதிய தலைமைச் செயலகம் கட்டுகிறேன். செம்மொழி பூங்கா அமைக்கிறேன், நூலகம் கட்டுகிறேன் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விரயமாக்கினார்.




முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உயரதிகாரக்குழு அறிக்கை: தாக்கலுக்கு ஏப். 30 வரை கெடு.

சென்னை, பிப். 28
முல்லைப் பெரியாறு
அணை விவகாரம்
தொடர்பான, உயரதி
காரக் குழுவின் அறிக்
கையை தாக்கல் செய்
வதற்கான கால அவ
காசத்தை, வரும் ஏப்ரல்
30ம் தேதிவரை நீட்டித்து
உச்சநீதிமன்றம் உத்தர
விட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல்,
தேனி, ராமநாதபுரம்,
சிவகங்கை உள்ளிட்ட
தென் மாவட்டங்களின்,
விவசாய பாசனத்திற்கு
முக்கிய ஆதாரமான
முல்லைப்பெரியாறு
அணையின்
நீர்மட்
டத்தை, 136 அடியில்

இருந்து 142 அடி வரை
உயர்த்த உச்சநீதிமன்றம்
அனுமதி அளித்தும்,
இதனை செயல்படுத்த
கேரள அரசு மறுத்து வரு
கிறது. மேலும், முல்லைப்
பெரியாறு அணைப்பகுதி
யில் புதிய அணை கட்டும்
முயற்சியிலும் ஈடுபட்
டுள்ள கேரள அரசு, இந்த
அணையின் பாதுகாப்பு
குறித்து, அம்மாநில மக்
களிடையே தேவை யற்ற
பீதியையும், வீண் வதந்
தியையும் பரப்பி வரு
கிறது. கேரள அரசின் இந்த
நடவடிக் கையை, தடுத்து
நிறுத்த வலியுறுத்தியும்,
புதிய அணை கட்ட
கேரள அரசுக்கு தடை விதிக்கக்
கோரியும்,
பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு தமிழக முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் கடிதங்
கள் எழுதியிருந்தார்கள்.

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பயங்கர கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு அச்சமின்றி பணியாற்றுவதாக வங்கி அதிகாரிகள்- ஊழியர்கள் கருத்து.

சென்னை, பிப். 28
சென்னையில் வங்கிக்
கொள்ளையர்களை,
காவல்துறையினர் சுட்டுக்
கொன்று, துரித நட
வடிக்கை எடுத்ததால்,
வங்கிகளில் தாங்கள் அச்ச
மின்றி பணியாற்றி வருவ
தாக வங்கி அதிகாரிகளும்,
ஊழியர்களும்
தெரி
வித்துள்ளனர். போலீசா
ருக்கு அவர்கள் பாராட்
டும் தெரிவித்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. நிர்வாகி காரில் ரூ.1 லட்சம் பறிமுதல்.

திருநெல்வேலி, பிப். 28
சங்கரன்கோவிலில்
ம.தி.மு.க. வேட்பாளர் அறி
முக கூட்டம் சனியன்று
நடந்தது. இதில் ம.தி.மு.க.
பொதுச் செயலாளர்
வைகோ வேட்பாளர்
சதன் திரு மலைக்குமாரை
அறிமுகப்படுத்தி பேசி
னார்.
இந்த கூட்டத்தில்
கலந்து கொள்ள தூத்துக்
குடி மாவட்ட ம.தி.மு.க.
செயலாளர் ஜோயல்
காரில் சென்றார்.
தேவர்குளம் போலீஸ்
சோதனை சாவடியில்
அவரது காரை தென்காசி
துணை தாசில்தார் முகம்
மது யூசுப் தலைமையி
லான பறக்கும் படையினர்
மற்றும் இன்ஸ்பெக்டர்
சங்கரேஸ்வரன், எஸ்.ஐ.
சண்முகவேல் ஆகியோர்
சோதனையிட்டனர்.
அப்போது அவரது சூட்
கேசில் கணக்கில் காட்
டப்படாமல் ரூ.1 லட்சம்
இருந்தது. இதனை பறக்கும்
படையினர் பறிமுதல்
செய்தனர். இது குறித்து
தேவர்குளம் போலீசார்
விசாரணை நடத்தி வரு
கின்றனர்.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் உதவியால் நலம் பெற்று வரும் தீயணைப்புத்துறை பெண் அதிகாரிக்கு சிறந்த பெண்மணிக்கான கலாச்சார விருது.

சென்னை, பிப். 28
தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உதவியால் நலம்
பெற்று வரும் சென்னை
தீயணைப் புத்துறை பெண்
அதிகாரி பிரியா
ரவிச்சந்திரனுக்கு வீரதீரச்
செயல்புரிந்த சிறந்த
 ப ண் ம ணி க் க  ன
கலாச்சார விருது-2012
வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை தீயணைப்
புத்துறை அதிகாரி பிரியா
ரவிச்சந்திரனின் மகள்கள்
சம்கீதா, சாத்விகா ஆகி
யோர் பெற்றுக் கொண்ட
னர்.
சென்னை ராஜா
அண்ணாமலைபுரத்தில்
குளோபல் அட்ஜெஸ்ட்
மென்ட்ஸ் சார்பில் விருது
வழங்கும் நிகழ்ச்சி நடை
பெற்றது. இந்நிகழ்ச்சியில்,
முன்னிலை வகித்து தமிழ்
வளர்ச்சி, அறநிலையங் கள்
மற்றும் செய்தித் துறை
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம், பேசும்
போது கூறிய தாவது:

கோவை துணை மேயராக கழகத்தைச் சேர்ந்த லீலாவதிஉண்ணிதேர்வு: கழகத்தினர் வாழ்த்து.

கோவை, பிப். 28
கோவை மாநகராட்சி
யின் துணை மேயராக கழ
கத்தை சேர்நத லீலாவதி
உண்ணி போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோவை மாநகராட்சி
யின் துணை மேயராக
இருந்த சின்னதுரை ராஜி
னாமா செய்ததையடுத்து,
அந்தப் பதவிக்கான தேர்
தல் நேற்று நடைபெற்றது.
கோவை மாநகராட்சி
ஆணையரும், தேர்தல்
அதிகாரியுமான பொன்னு
சாமி இதற்கான
அறிவிப்பை வெளியிட்
டார்.

Sunday, February 26, 2012

சென்னை:பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும். அவ்வாறு வழங்க முடியாத இடங்களில், பள்ளிகளே ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை அரசே ஈடுசெய்யும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்க, முந்தைய தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழகம் தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. என் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்த தவறிவிட்டது.மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்களும் உரிய காலத்தில் முடிக்கப்படாததால், நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. முந்தைய அரசு, அன்றாடம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தது. நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை பெற இயலவில்லை.
அன்னியர் பிரச்னை வேறுஇது தவிர, மின் தொடர் அமைப்பில் நெருக்கடி உள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒரு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர் நெருக்கடியின் விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவுக்கே மின்சாரம் பெற இயலுகிறது. இதனால், மின் இருப்புக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.

Friday, February 24, 2012

தமிழினத்தை வாழ வைக்க வந்துதித்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு இன்று 64வது பிறந்த நாள் நலிந்தோர்களுக்கு நல உதவிகள் வழங்கி கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம்.

சென்னை, பிப். 24
தமிழினத்தை வாழவைக்க பூவுலகில் அவதரித்த பொன்மனத் தலைவி முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 64வது பிறந்தநாள் இன்று. முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, நலிந்தோருக்கு நல
உதவிகள் வழங்கி கழகத்தினர் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
தமிழர் தம் மானம் காத்து, தமிழகத்தின்
உரிமை காக்க குரல் கொடுத்து வரும் வீரமங்கை
வேலுநாச்சியாரின் மறு உருவமான கழகப்
பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு 63 வயது நிறைவு
பெற்று இன்று 64வது வயது பிறக்கிறது.
அதனை சிறப்பாகக் கொண்டாட கழகத்தின் அனைத்துப் பிரிவுகளும் விரிவான
ஏற்பாடுகளை செய்துள்ளன.
ஆனால், கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களோ
தனது ஆசான் புரட்சித்தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர். அவர்களின் வழிநின்று அவரைப்
போலவே பிறந்தநாளன்று தன்னை யாரும்
சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
தமது பிறந்தநாள் விழாவை ஆடம்பர விழாவாக நடத்த வேண்டாம் என்றும் கழக
உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கு ஏற்ப
ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச்
செய்யுமாறும், அதுவே தனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும், தனக்கு உற்சாகத்தையளிக்கும்
என்றும் கழக உடன்பிறப்புகளுக்கு தான்
எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏழை-எளிய நடுத்தர மக்களுக்காக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பெயரில் 1000 சிற்றுண்டி சாலைகள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேறியது.

சென்னை, பிப்.24
சென்னை மாநகராட்சி
பகுதிகளில் உயர் தரத்
துடன், குறைந்த விலையில்
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்க
ளின் பெயரில் ஆயிரம்
சிற்றுண்டி உணவகங்கள்
அ ம ப் ப த ற் க ன
தீர்மானம் மாநகராட்சி
யில் ஒருமனதாக நிறை
வேற்றப்பட்டு, அரசுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி
மன்ற கூட்டத்தில் 32 தீர்
மானங்கள் நிறைவேற்றப்
பட்டன. சிறப்பு தீர்மான
மாக சென்னை மாநக
ராட்சி பகுதிகளில் ஆயிரம்
சிற்றுண்டி உணவகங்கள்
அமைப்பதற்கான தீர்மா
னத்தை மேயர் சைதை
துரைசாமி கொண்டு
வந்தார்.

'தானே' புயல் நிவாரண நிதிக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவிடம் பல்வேறு தரப்பினர் ரூ.2.62 கோடி நிதியுதவி வழங்கினர்.

சென்னை, பிப். 24
'தானே' புயலால் பாதிக்கப்பட்டுள்ள
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்
டங்களில் நிவாரணம் மற்றும்
மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்வ
தற்காக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களிடம் பல்வேறு தரப்பினர்
2 கோடியே 61 லட்சத்து 71 ஆயிரத்து
1 ரூபாய் நிதியுதவியை வழங்கினர்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு
வருமாறு:
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களிடம், 30.12.2011 அன்று
தமிழகத்தை தாக்கிய 'தானே' புயலால்
பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்களில் நிவார ணம்
மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்
வதற்காக முதலமைச்ச ரின் பொது நிவாரண
நிதிக்கு 23.2.2012 அன்று தலைமைச்
செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி
வழங்கினார்கள்.
1. கோயம்புத்தூர், லஷ்மி மிஷின் ஓர்க்ஸ்
நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
சஞ்சய் ஜெயவர்த் தனவேலு 1 கோடி
ரூபாய்.
2. மெட்ராஸ் சிமெண்ட் நிறுவனத்தின்
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்
பி. ராமசுப்பிரமணிய ராஜா 1 கோடி ரூபாய்.
3. சென்னை, சமுதாய பவுண்டேஷன்
நிர்வாக அறங்காவலரும், கர்நாடக
இசைக்கலைஞருமான சுதா ரகுநாதன்
5 லட்சம் ரூபாய்..

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவு நிறுத்தி வைப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட பல்வேறு முதலமைச்சர்களின் எதிர்ப்புக்கு பணிந்து பிரதமர் நடவடிக்கை.

சென்னை, பிப். 24
தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உள்ளிட்ட
பல்வேறு மாநில முதல
மைச்சர்களின் கடும்
எதிர்ப்பை அடுத்து, தேசிய
பயங்கரவாத தடுப்பு
மையம் அமைக்கும்
முடிவை மத்திய அரசு
நிறுத்தி வைத்துள்ளது.
தேசிய பயங்கரவாத
தடுப்பு மையம் அமைப்பது
தொடர்பான மத்திய உள்
துறை அமைச்சகத்தின் உத்
தரவு, மாநில அரசுகளின்
உரிமைகளை பறிக்கும்
நடவடிக்கை என்பதை சுட்
டிக் காட்டியுள்ள முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் இந்த
உத்தரவை மறுபரிசீலனை
செய்ய வலியுறுத்தி, கடந்த
17ம் தேதி பிரதமர்
மன்மோகன்சிங்கிற்கு
கடிதம் எழுதி இருந்தார்.
அவரது கருத்தை வலுப்
படுத்தும் வகையில், குஜ
ராத், மத்தியபிரதேசம்,
இமாச்சலபிரதேசம் உள்
ளிட்ட 9 மாநிலங்களின்
முதலமைச்சர்களும், பயங்
கரவாத தடுப்பு மையம்
அமைக்கும் மத்திய
உள்துறை அமைச்சகத்
தின் நடவடிக்கைக்கு
கண்டனம் தெரிவித்த
னர்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: கழக வேட்பாளர் முத்துச்செல்வி மனுத்தாக்கல்.

சங்கரன்கோவில், பிப். 24
கழகப் பொதுச்செயலா
ளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் நல்லாசியுடன், நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில்
இடைத் தேர்தலுக்கு
கழகத்தின் சார்பில்
போட்டியிடும் எஸ்.முத்துச்செல்வி நேற்று வேட்பு
மனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக சங்கரன்கோவில் சங்கரநாராயணன்
திருக்கோவிலில்
சிறப்பு பூஜைகள் செய்து
பின்பு ரத வீதி வழியாக
வந்து சங்கரன்கோவில்
தாலுகா அலுவலகத்தில்
உள்ள உதவி தேர்தல்
அலுவலர் தாமோதரனிடம்
வேட்பு மனு தாக்கல்
செய்தார்.

Thursday, February 23, 2012

வாழ்த்த வயதில்லை வாங்குகிறோம்.....



மாண்புமிகு இதய தெய்வம் தமிழக முதல்வர் தங்க தாரகை டாக்டர் புரட்சிததலைவி அம்மா அவர்களின் 64 வது பிறந்தநாள் விழா.
என்றும் உங்கள் வழியில் எங்கள் பயணம் தொடரும்...

நாசகார சக்திகளிடமிருந்து தமிழகத்தையும் - தமிழ் மக்களையும் மீட்ட புரட்சித்தலைவி அம்மாவின் 64வது பிறந்தநாள் நாளை: அன்னதானம் - ரத்த தானம் - நல உதவிகள் வழங்கி நாடெங்கும் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை, பிப். 23
நாசகார சக்திகளிடமிருந்து தமிழகத்தையும், தமிழ் மக்களையும் மீட்டு, அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 64வது பிறந்த நாள் நாளை ஏழை-எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நாடெங்கும் உள்ள கழக உடன்பிறப்புகள் அன்னதானம்-ரத்ததானம்-மருத்துவ முகாம்கள் நடத்தி, நல உதவிகள் வ ழ ங் கி   ம கி ழ் ச் சி  ய  டு   முத ல  ம ச் ச ர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். தமிழர்தம் மானம் காத்து, தமிழகத்தின் உரிமை காக்க குரல் கொடுத்து வரும் வீரமங்கை  வ லு ந  ச் சி ய  ரி ன்   ம று உ ரு வ  ன   க ழ க ப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா  அவர் களுக்கு  63  வயது நிறைவு பெற்று நாளை 64வது வயது பிறக்கிறது. அதனை சிறப்பாகக் கொண்டாட கழகத்தி ன்   அ  ன த் து ப்   பி ரி வு க ளு ம்   வி ரி வ  ன ஏற்பாடுகளை செய்துள்ளன. ஆனால், கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்க  ள   த ன து   ஆ ச  ன்   பு ர ட் சி த் த ல வ ர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழிநின்று அவரைப் போலவே பிறந்தநாளன்று தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

சங்கரன்கோவில் தொகுதியில் புரட்சித்தலைவிக்கு வெற்றிக்கனி கொடுக்க வெற்றி தேவதை காத்திருக்கிறாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு.

சிவகாசி, பிப். 23
நடைபெறவுள்ள சங்க
ரன்கோவில் தொகுதியில்
வெற்றி தேவதை புரட்சித்
தலைவி அம்மா அவர்
க ளு க் கு வெற்றிக்கனி கொடுக்க காத்திருக் கிறாள்
என்று செய்தி மற்றும்
சிறப்பு செயலாக்கத்துறை
அமைச்சரும், விருதுநகர்
மாவட்ட  கழக செய
ல  ள ரு ம  ன   ராஜேந்திர பாலாஜி புரட்சித்தலைவி அம்மா அவர்
களின் 64வது பிறந்த நாள்
விழா ஆலோசனைக் கூட்
டத்தில் பேசினார்.
மேலும் அவர் பேசிய
தாவது:
தமிழக மக்களின்நாடித்
துடிப்பு அறிந்த புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
கருவறை முதல் கல்லறை
வரை ஒவ்வொருவருக்கும்
தேவை என்ன என்றறிந்து
அதற்கான திட்டங்களை
தீட்டி சிறப்பாக செய
ல  ற் றி   வ ரு கி ற � ர் க ள் .
த மி ழ க   ம க் க ளி ன்
ஒவ்வொரு இல் லத்திலும்
க ல் ல  ம யு ம் ,
இல்லாமையும் இல்லாத
நிலை உருவாக வேண்டும்
என உறுதி பூண்டு களப்
பணியாற்றி வருகிறார்கள்

பெட்ரோல்-சமையல் கியாஸ் விலை மேலும் உயர்வு

சென்னை, பிப்.  23
மார்ச்   முதல் வாரத்தில் பெட்ரோல் வி  ல   லி ட் ட ரு க் கு   4 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும், சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 வரையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈ ரா  னி ல்   ஏ ற் ப ட் ட அரசியல் பொருளாதார பதற்றத்தை தொடர்ந்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பேர லுக்கு ரூ.5 ஆயிரத்தை தண் டி ய து .   க ட ந் த ஆண்டு ஜூன் மாதத்திற் குப்பின் இதுவே அதிக பட்ச விலை உயர்வாகும். க ச் ச    எ ண்  ண ய் விலை அதிகரிப்பால் இந்தி ய   எ ண்  ண ய் நிறுவனங்கள் பெரிய அளவில் ந ஷ் ட த் த   ச ந் தி த் து வ ரு வ த  க   அ றி வி த் து உள்ளன .   பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசலில் 3 ரூபாயும், சமையல் கியாஸ் வி ற் ப  ன யி ல் ,   சி லி ண்டருக்கு ரூ.390ம் தற்போது நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Wednesday, February 22, 2012

இதுவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 112.3 கோடி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவிடம் 'தானே' புயல் நிவாரண நிதிக்கு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.6 கோடி வழங்கினர்.

சென்னை, பிப். 22
'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிக்கு, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம், பல்வேறு துறைகள் சார்பில் 5 கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 940 ரூபாய் நேரில் வழங்கினர். இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு 112 கோடியே 2 லட்சத்து 89 ஆயிரத்து 338 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பு வருமாறு: தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம், 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய 'தானே' புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற் கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 21.2.2012 அன்று தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள்: சுற்றுச்சூழல் உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு தினமாக கொண்டாட சென்னை மாநகராட்சி முடிவு 200 சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து 2 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு மேயர் சைதை துரைசாமி தகவல்.



சென்னை, பிப். 22
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்க
ளின் 64வது பிறந்த நாளை
முன்னிட்டு சுற்றுச்சூழல்,
உலக வெப்பமயமாதல்
விழிப்புணர்வு தினமாக
கொண்டாடுவதுடன் 200
சிறப்பு மருத்துவமுகாம்
அமைத்து 2 லட்சம்
பேருக்கு சிகிச்சை அளிக்க
வும் சென்னை மாநக
ராட்சி முடிவு செய்துள்
ளது என மாநகராட்சி
மேயர் சைதை துரைசாமி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர்
வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பு வருமாறு:
தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் 64வது பிறந்த
நாளையட்டி சென்னை
மாநகராட்சி சார்பில்
பல்வேறு மக்கள் நலத்
திட்ட உதவிகள் வழங்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்
ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழிக்கு எதிராக சாட்சியம் அளித்தவருக்கு கொலை மிரட்டல் பழனி மாணிக்கத்தை பதவி நீக்கம் செய்ய பிரதமரிடம் வலியுறுத்தல்.

புதுடெல்லி, பிப். 22
ஸ்பெக்ட்ரம் ஊழல்
வழக்கில், குற்றம் சாட்டப்
பட்டுள்ள கருணாநிதியின்
மகள் கனிமொழிக்கு
எதிராக சாட்சியம்
அ ளி த் த வ ர் க  ள ,
தி.மு.க.வைச் சேர்ந்த
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.
பழனிமாணிக்கம் தனது
அதிகாரத்தைப் பயன்
படுத்தி மிரட்டுவதாக
பிரதமரிடம் புகார் அளிக்
கப்பட்டுள்ளது. ஒரு
லட்சத்து 80 ஆயிரம்
கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம்
இமாலய ஊழல் வழக்கில்
கைதாகி சிறையில்
அடைக்கப்பட்ட கருணா
நிதியின் மகள் கனிமொழி,
கருணாநிதியின் குடும்பத்
தொலைக்காட்சியின்
நிர்வாக இயக்குநர் சரத்
குமார் உள்ளிட்டோர்,
தற்போது, ஜாமீனில்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க.வைச்
சேர்ந்த மத்திய நிதித்துறை
இணையமைச்சர் எஸ்.எஸ்.
ப ழ னி ம  ணி க் க ம் ,
கனிமொழிக்கு எதிராக
சாட்சியம் அளித்தவர்
களை, தனது கட்டுப்
பாட்டில் உள்ள, வருமான
வரித்துறை, சுங்கம் மற்றும்
கலால் துறை அதிகாரிகள்
மூலம் மிரட்டுவதாக,
ஜனதாக் கட்சித் தலைவர்
டாக்டர், சுப்பிரமணியன்
சுவாமி, பிரதமருக்கு
எழுதியுள்ள கடிதத்தில்
புகார் தெரிவித்துள்ளார்.
கனிமொழிக்கு எதிராக
சாட்சியம் அளித்தவர்
களின் உறவினர்களும்
மிரட்டப்படுவதாக தனது
புகார் கடிதத்தில் அவர்
குறிப்பிட்டுள்ளார். மேலும்,
ஸ்பெக்ட்ரம் வழக்கு
விசாரணை நியாய
மாகவும், நேர்மையாகவும்
நடைபெறுவதை உறுதிப்
படுத்த, மத்திய நிதித்துறை
இணையமைச்சர் பொறுப்
பில் இருந்து தி.மு.க.வைச்
சேர்ந்த எஸ்.எஸ். பழனி
மாணிக்கம் விடுவிக்கப்பட
வேண்டும் என்றும்
டாக்டர். சுப்பிரமணியன்
சுவாமி வலியுறுத்தியுள்
ளார்.

தேசிய கைத்தறி கண்காட்சியில் ரூபாய் 1 கோடி துணிகள் விற்பனை மக்களிடமிருந்து அமோக வரவேற்பு.

சென்னை, பிப். 22
சென்னை எழும்பூரில்
உள்ள கோ-ஆப்டெக்ஸ்
கைத்தறி கண்காட்சி
திடலில் 10.2.2012 அன்று
துவக்கப்பட்ட தேசிய
கைத்தறி கண்காட்சி 2012,
தொடர்ந்து 5.3.2012 வரை
நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில்,
காஷ்மீர் முதல் கன்னியா
குமரி வரையிலான
அனைத்து மாநில துணி
வகைகளை வாடிக்கை
யாளர்கள் பெருமளவில்
வந்து வாங்கிச் சென்றதன்
பயனாக, இதுவரை
ரூ.102.00 இலட்சம்
அளவிற்கு விற்பனையாகி
உள்ளது. இந்த கண்
காட்சி மக்களிடையே
பெருத்த வரவேற்பைப்
பெற்றுள்ளது என்பது
தெரிய வருகிறது. இக்
கண்காட்சி இனிமேல்
காலை 10.00 மணி முதல்
இரவு 9.00 மணி வரை
நடைபெறும். இந்த
கண்காட்சிக்கு என்று
நுழைவு கட்டணம்
எதுவும் கிடையாது. இக்
க ண் க  ட் சி யி ல்
விற்பனையாகும் இரகங்
களுக்கு சிறப்பு தள்ளு
படியும் வழங்கப்படுகிறது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல்.

திருநெல்வேலி, பிப். 22
சங்கரன்கோவில்
சட்டசபை இடைத்
தேர்தலுக்கான வேட்பு
மனு தாக்கல் இன்று
துவங்குகிறது. அடுத்த
மாதம் 18ந் தேதி வாக்குப்
பதிவு நடைபெறுகிறது.
சங்கரன் கோவில்
தொகுதி கழக எம்.எல்.ஏ.
வாகவும், அமைச்சராகவும்
இருந்த கருப்பசாமி மரண
மடைந்ததை தொடர்ந்து
அங்கு இடைத் தேர்தல்
அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசியல்
கட்சிகள் தேர்தல்
பிரச்சாரத்தை துவக்கி
உள்ளன.
கழகம் சார்பில் முத்துச்
செல்வி வேட்பாளராக
போட்டியிடுகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. வருமான வரித் துறைக்கு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு.

புதுடெல்லி,பிப்.22
2ஜி ஸ்பெக்ட்ரம்
ஊழல் வழக்கில், அறிக்கை
தாக்கல் செய்யும்படி
சி.பி.ஐ. மற்றும் வருமான
வரித்துறைக்கு மத்திய
ஊழல் கண்காணிப்பு
ஆணையம் உத்தரவிட்டுள்
ளது.
ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் தி.மு.க.வைச்
சேர்ந்த முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ.ராசா உள்
ளிட்ட 17 பேர் கைது செய்
யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.
ஆ.ராசா மற்றும் தொலைத்
தொடர்புத்துறை முன்
னாள் செயலாளர் சித்
தார்த் பெகூரா ஆகியோ
ரைத் தவிர மற்றவர்கள்
ஜாமீனில் வெளியே
வந்துள்ளனர்.

Tuesday, February 21, 2012

அனைத்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா; பிரதமருக்கு வலியுறுத்தல்.

சென்னை, பிப். 21
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்
அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு
உடனடியாக கைவிட வேண்டும் என்றும்
இது தொடர்பாக அனைத்து மாநில
அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் எனவும் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பிரதமருக்கு மீண்டும் எழுதியுள்ள
கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்கள்.
இதுதொடர்பாக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள், பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு 20.2.2012 அன்று மீண்டும் எழுதியுள்ள
கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் உள்ள சில பிரிவுகளை
ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என கடந்த
17ம் தேதி நான் எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளதை நினைவு கூர்கிறேன்.
சம்பந்தப்பட்ட பிரிவுகள் குறித்து பிற மாநில
முதலமைச்சர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்புக்
கருத்துகளுடன் நானும் உடன்படுகின்றேன்.
மேலும், மார்ச் 1ம் தேதி முதல்
நடைமுறைப்படுத்தவுள்ள தேசிய பயங்கரவாத
தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான
இத்திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக
கைவிட வேண்டும். அரசியல் நிர்ணய
சட்டத்தின்படி, பொது ஒழுங்கு மற்றும்
காவல்துறை, மாநில வரம்பிற்குள் வருவதால்,
அனைத்து மாநில அரசுகளுடன் பேச்சு
வார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள், பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்
ளார்கள்.

தலைமைக் கழக அறிவிப்பு எண். 32/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டம் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, திரு. இ.சகாயம் (எ) ஐயப்பன், (மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு எண். 33/2012


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்-2012
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்
18.3.2012 அன்று நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்
தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல்
பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஏற்கெனவே
நியமிக்கப்பட்டுள்ள 34 பேர்களுடன்,
35. திரு. பி. பழனியப்பன் அவர்கள்
உயர் கல்வித் துறை அமைச்சர்
36. திரு. வி. மூர்த்தி அவர்கள்
திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலளார்
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
37. திரு. கே.ஏ. ஜெயபால் அவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர்
மீன்வளத் துறை அமைச்சர்
38. திரு. முக்கூர் என். சுப்பிரமணியன் அவர்கள்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
39. திரு. அ. முஹம்மத்ஜான் அவர்கள்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்
40. திரு. வி.ஷி.வி. ஆனந்தன் அவர்கள்
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
41. திரு. அ. தமிழ்மகன் உசேன் அவர்கள்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
42. டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., அவர்கள்
கழக கொள்கை பரப்புச் செயலாளர்
43. திரு. செ. செம்மலை, எம்.பி., அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர்
ஆகியோர் கூடுதலாக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு
பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக
வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிரணாப் முகர்ஜியுடன் கருத்து வேறுபாடு: மத்திய ரயில்வே அமைச்சர் திரிவேதி ராஜினாமா மிரட்டல்.

நிதி ஒதுக்குவதில் பிர
ணாப் முகர்ஜியடன் ஏற்
பட்ட கருத்து வேறுபாடு
எதிரொலியாக ரயில்வே
அமைச்சர் தினேஷ் திரி
வேதி ராஜினாமா மிரட்
டல் விடுத்துள்ளார்.
ரயில்வே அமைச்சராக
இருந்த மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வராகி
விட்டதால் அவரது கட்சி
யைச் சேர்ந்த தினேஷ்
திரிவேதி ரயில்வே
அமைச்சராக நியமிக்கப்
பட்டார். அடுத்த மாதம்
நாடாளுமன்றத்தில்
ரயில்வே பட்ஜெட் தாக்
கல் செய்யப்பட உள்ள
தால் அதற்கான பணி
களில் தினேஷ் திரிவேதி
தீவிரமாக ஈடுபட்டு வரு
கிறார்.

Sunday, February 19, 2012

64வது பிறந்தநாளையட்டி, 64 சீர்வரிசைகளுடன் கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் 64 ஏழை ஜோடிகளுக்கு இன்று இலவசத் திருமணம்: முதல்வர் புரட்சித்தலைவி அம்மா நடத்தி வைக்கிறார் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சிறப்பான ஏற்பாடு.

சென்னை, பிப். 19
கழகப் பொதுச்செயலாளர், முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 64 ஜோடிகளுக்கு 64 வகையான சீர்வரிசைகளுடன் இலவசத் திருமணங்களை, கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையேற்று தமது பொற்கரங்களா ல் இன்று நடத்தி வைக்கிறார்கள். கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது 64வது பிறந்தநாளை ஆடம்பரமில்லாமல், ஏழை-எளியோருக்கு நலன் பயக்கும் வகையில் நல உதவிகள் வழங்கி, எளிமையாக கொண்டாட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோளை தமது மடல் மூலமாக தெரிவித்திருந்தார்கள். கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கழக உடன்பிறப்புகள் பல்வேறு நல உதவிகள் வழங்கியும், இரத்ததானம், மருத்துவ முகாம், அன்னதானம், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பசுமைப் புரட்சிக்கு வித்திட மரக் கன்றுகள் நடுதல் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 64வது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாட முடிவு செய்துள்ளார்கள்.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம்: முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் கருத்துக்கு மேலும் 8 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் வலுக்கிறது.

சென்னை, பிப். 19
தேசிய பயங்கரவாதத்
தடுப்பு மையம் அமைக்கும்
மத்திய அரசின் நடவடிக்
கைக்கு கண்டனம் வலுக்
கிறது.
தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களுடன், மேலும்
எட்டு மாநிலங்களைச்
சேர்ந்த முதலமைச்சர்கள்
மற்றும் ஆந்திர முன்னாள்
முதலமைச்சர் சந்திரபாபு
நாயுடு ஆகியோரும் மத்
திய அரசுக்கு கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்
ளனர்.
மத்திய அரசு அமைக்க
விருக்கும் தேசிய பயங்கர
வாதத் தடுப்பு மையத்தின்
சில அம்சங்கள் மாநில
அரசுகளின் உரிமைகளைப்
பறிக்கும் வகையில் இருப்ப
தாக கண்டனம் தெரிவித்
துள்ள தமிழக முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள், தேசிய
பயங்கரவாதத் தடுப்பு
மையம் அமைக்கும் மத்
திய உள்துறை அமைச்
சகத்தின் உத்தரவை மறு
பரிசீலனை செய்ய
வேண்டுமென வலியுறுத்தி,
பிரதமருக்கு கடிதம்
எழுதியுள்ளார்கள்.
குஜராத் முதலமைச்சர்
நரேந்திர மோடி, மத்தியப்
பிரதேச முதலமைச்சர்
ஷிவ்ராஜ்சிங் சவ்கான்,
ஹிமாச்சலப்பிரதேச
மாநில முதலமைச்சர்
பிரேம்குமார் துமல்,
ஓடிசா மாநில முதல
மைச்சர் நவீன் பட்நாயக்,
பீகார் முதலமைச்சர்
நிதிஷ்குமார், பஞ்சாப்
மாநில முதலமைச்சர்
பிரகாஷ் சிங் பாதல், சத்
தீஸ்கர் மாநில முதலமைச்
சர்ராமன் சிங், மேற்கு
வங்க முதலமைச்சர்
மம்தா பானர்ஜி ஆகி
யோரும் பயங்கரவாதத்
தடுப்பு மையம் அமைக்கும்
மத்திய உள்துறை அமைச்
சகத்தின் நடவடிக்கைக்கு
தங்கள் எதிர்ப்பை தெரி
வித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் ஏற்பாடு.

சென்னை, பிப். 19
தமிழகம் முழுவதும்
இன்று போலியா சொட்டு
மருந்து முகாம் நடை
பெறுகிறது. தமிழகத் தில்
ஆ ர ம் ப சு க  த  ர
நிலையங்கள், மருத்துவ
மனைகள், சத்துணவு
மையங்கள், பள்ளிகள்
மற்றும் முக்கிய இடங்
களில் மொத்தம் 40
ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மையங்களில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக
அரசின் செய்தி குறிப்பு
வருமாறு:
பல்ஸ் போலியோ
சொட்டு மருந்து முகாம்
இன்றும் (19.2.2012) ஏப்ரல்
மாதம் 15ந் தேதி அன்றும்
நாடு முழுவதும் நடைபெற
உள்ளது. தமிழ் நாட்டில்
சுமார் 40,000 க்கும்
மேற்பட்ட சொட்டு
மருந்து மையங் கள் ஆரம்ப
சுகாதார நிலையங்கள்/,
அரசு மருத்துவமனைகள்
/ சத்துணவு மையங்கள்/
பள்ளிகள் மற்றும் முக்கிய
மான இடங்களில் பிரத்
தியேகமாக நிறுவப்பட்டு
இன்று (19.2.2012) சொட்டு
மருந்து வழங்க அனைத்து
ஏற்பாடுகளும் செய்யப்
பட்டுள்ளன.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு.

சென்னை, பிப். 19
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து
ஆய்வு செய்வதற்காக
தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர்
குழுவினர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களை மரியாதை
நிமித்தமாக சந்தித்தனர்.
நேற்று நெல்லை சென்ற
அக்குழுவினர், மாவட்ட
ஆட்சித்தலைவருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
கடந்த 4ம் தேதி தமிழக
சட்டமன்றப் பேரவையில்
ஆளுநர் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து
பேசுகையில், கூடங்குளம்
அமின்நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி
மக்களிடையே இதுகுறித்து
தற்போது நிலவிவரும்
எண்ணங்கள் மற்றும் அச்ச
உணர்வுகள் குறித்தும்
அறிந்து, மாநில அரசுக்கு
விரைந்து அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசா
ல் ஒரு வல்லுநர் குழு
அமைக்க முடிவு செய்யப்பட்
டுள்ளது என்று தெரிவி
த்திருந்தார்.

Saturday, February 18, 2012

மாநில அரசு பங்குபெறும் விதமாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மத்திய அமைச்சகங்கள் ஆணவப்
போக்குடன் செயல்படுவதாகவும், மாநிலங்களுக்கு உள்ள நியாயமான உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, மாநில அரசு பங்கு பெறும் விதமாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் இறையாண்மையை நிலைநிறுத்தவும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்
டை வலுப்படுத்தவும் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் நான் உறுதுணையாக இருந்து வருகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியாவின்
பாதுகாப்பில் சமரசத்திற்கு இடமில்லை. இந்த
சூழ்நிலையில், வரும் மார்ச் 1ம் தேதி முதல்,
உளவுத் துறையின் கீழ் தேசிய பயங்கரவாத
தடுப்பு மையம் அமைக்கப்பட உள்ளதாக,
கடந்த 3ம் தேதி அலுவலக செயற்குறிப்பு
ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம்
அனுப்பியிருப்பது குறித்து பிரதமரின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன்.

Friday, February 17, 2012

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடைபெறுகிறது இந்திய தேர்தல்ஆணையம்அறிவிப்பு மார்ச் 21ந் தேதி வாக்கு எண்ணிக்கை.

சங்கரன்கோவில் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மார்ச் மாதம் 18ந் தேதி நடை பெறும் என்றும், மார்ச் 21ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச் சராகவும்இருந்தசொ.கருப்பசாமி, அண்மையில் காலமானதையடுத்து, அத் தொகுதிக்கு இடைத்தேர் தல் நடைபெறும் என ஏற் கெனவே அறிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி, அடுத்த மாதம் 18ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது. தேர்தல் அறிவிக்கை வரும் 22ம் தேதி வெளி யிடப்படும்.அதேதினத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் அயல்நாட்டுக்காரர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

மீன் பிடிக்கச் சென்றபோது அயல் நாட்டு வணிகக் கப்பலிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்தவர் குடும் பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதுதொடர்பாக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், பூத்துறையைச் சேர்ந்த பிரடிசான் போஸ்கோ என்பவருக்கு சொந்தமான கப்பல் கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதிக்கு 15.2.2012 அன்றுமீன்பிடிக்கச் சென்றபோது,அயல்நாட்டு வணிகக் கப்பலில் இருந்த ஒருவர் சுட்டதில், மீன் பிடி கப்பலில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சேவியர் என்பவரது மகன் அஜீஸ் பிங்கோ உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இத்துப்பாக்கிச் சூட்டில் அகால மரண மடைந்த அஜீஸ் பிங்கோ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, February 16, 2012

"தமிழக காவல்துறையை உலகத்தின் தலைசிறந்த காவல்துறையாக்க வேண்டும்" என்ற எனது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவுறுத்தல்

சென்னை, பிப். 16 சட்டம்&ஒழுங்கை நிலைநாட்டிட காவலர்கள் எவ்வித அச்ச உணர்வும், இடையூறும் இன்றி பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும், செம்மையாகவும், சட்டப்படியும் ஆற்றிட ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகிறேன் என்றும் தமிழக காவல்துறையை உலகத்தின் தலை சிறந்த காவல் துறையாக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பயிற்சி உதவி ஆளிணிவாளர் களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் அறிவுறுத்தினார்கள். சென்னைவண்டலூர்அருகேஉள்ளதமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், 15.2.2012 அன்று நடைபெற்ற, உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில், முதலமைச்சர் புரட்சித்தலைவிஅம்மாஅவர்கள்கலந்து கொண்டு, அணிவகுப்புமரியாதையைஏற்றுக் கொண்டார்கள். பயிற்சி வகுப்புகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற உதவி ஆய்வாளர்கள் 31 பேருக்கு,

Wednesday, February 15, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்னிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா சென்னை ஊனமாஞ்சேரியில் இன்று நடைபெறுகிறது.

சென்னை, பிப். 15
காவல்துறையில் உதவி ஆய்வாளர் பயிற்சி
மு டி த் த   ஆ யி ர த் து   61 பேரை பணிக்குச்
செல்வதற்காக வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை
ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி அகாடமியில்
இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் இந்நிகழ்ச்சியில்
ப ங் க ற் று   பு தி ய   க வ ல் து   உ த வி
ஆய்வாளர்களை வாழ்த்தி, பணியில் சேர்வதற்கு
வழியனுப்பி வைக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இன்று மாலை 3 மணியளவில்
சென்னையை அடுத்தஊனமாஞ்சேரியில் உள்ள
தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம், கவாத்து
மைதானத்தில் நடைபெறுகிறது.
தமிழக காவல் துறையில் இன்று புதிதாக 1,061
உதவி காவல் ஆய்வாளர்கள் பணியில் சேர
இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி 1ந்
தேதி இவர்கள் பயிற்சியை தொடங்கினார்கள்.
பள்ளியில் 288 பேரும், மற்றவர்கள் சென்னையை
அடுத்துள்ள ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி
அகாடமியிலும் பயிற்சி பெற்றனர். இப்போது
இவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து
விட்டனர். இவர்களில் 307 பேர் பெண் உதவி
காவல் ஆய்வாளர்கள் ஆவார்கள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.72 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பயனாளிகள் நன்றி.

ஸ்ரீரங்கம், பிப். 15
ஸ்ரீரங்கம்  சட்டமன்ற த்  தெகுயில் ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள்
பயன்பெறும் வகையில்  ரூ-.72 கோடி மதிப்பில்
நலத் திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மாவுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 13.2.2012
அன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுமார் 72 கோடி ரூபாய்
மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
பயன்பெறும் இந்த உதவிகளைப் பெற்றுக்
 புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தங்களது மனமார்ந்த
நன்றியை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு நீதிபோதனை கதைகள், அன்பு, ஒழுக்கத்தை சொல்லி கொடுங்கள் பள்ளிகளுக்கு கல்வித்துறை வலியுறுத்தல்.

சென்னை, பிப். 15
நீதிபோதனை கதை
களை கூறி மாணவர்களை
எல்லோரிடமும் அன்பாக
ப ழ கு ம் ப டி   எ டு த் து க்
கூறுங்கள் என்று ஆசிரியர்
க ளு க் கு   க ல் வி த் து ற
சுற்றறிக்கை விடுத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
இயக்குநர்ப.மணிஅனைத்து
முதன்மை கல்வி அதிகாரி
களுக்கும்ஒருசுற்றறிக்கையை
அனுப்பியுள்ளார். அதில்
அவர் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வி இயக்
குனரகத்தின் கட்டுப்பாட்
டில் உள்ள அனைத்து வகை
ப ள் ளி க ளி ல்   ப டி க் கு ம்
மாணவ - மாணவி களுக்கு
சிறந்த முறையில் கல்வி
கற்று நல்வழி செல்ல ஏது
வாக சிறு சிறு நீதிக்கதை
கள் மூலமும், குழு கலந்து
ரையாடல் போன்ற வழி
யி லு ம் வழங்க உரிய நடவடிக்கை
மேற் கொள்ள அனைத்து
முதன்மை கல்விஅலுவலர்
கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி: சென்னையில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு.

சென்னை, பிப். 15
டெல்லிகுண்டுவெடிப்பு
சம்பவத்தை தொடர்ந்து
சென்னையில்உள்ளவெளி
நாட்டு தூதரகங்களுக்கு
கூடுதல் போலீஸ் பாது
காப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் இஸ்ரேல்
தூதரக கார் மீது நடந்த
குண்டுவெடிப்புசம்பவத்தை
தொடர்ந்து சென்னையில்
போலீசார் உஷார் படுத்
தப்பட்டனர். சென்னை
யில் முக்கியமான இடங்
களில் போலீசார் குவிக்கப்
பட்டனர்.

Tuesday, February 14, 2012

யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி - தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா சூளுரை

திருச்சி, பிப். 14
உங்கள் அன்புச் சகோதரியின் அரசு ஏழை-எளிய மக்களின் நலனுக்காக
பாடுபடும் அரசு என்றும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு
செயல்படும் அரசு எனவும், யார் போற்றினாலும், தூற்றினாலும் என கடன் பணி
செய்து கிடப்பதே என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக மக்களின்
வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற
விழாவில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற அரசு
விழாவில் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட, சரித்திரப் புகழ்
வாய்ந்த ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த
இனிய விழாவிலே கலந்து கொண்டு, எனது
அருமை தொகுதி மக்களாகிய உங்களை
எல்லாம் கண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து
வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
உங்களோடு உரையாடும் வாய்ப்பினைப்
பெற்றுள்ளதில் உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற விழாவில் இரண்டாம் கட்டமாக 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் புரட்சித்தலைவி அம்மா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருச்சி, பிப். 14
ஸ்ரீரங்கம் வட்டம் நவலூர் குட்டப்பட்டு என்ற
இடத்தில் ரூ.100 கோடியில் தேசிய சட்டப்
பள்ளிக்கு அடிக்கல் நாட்டியும், ஸ்ரீரங்கம்
தொகுதியில் நடைபெற்ற விழாவில் இரண்டாம்
கட்டமாக 240 கோடி ரூபாய் மதிப்பிலான
திட்டங்கள்-நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடிக்கல்
நாட்டி வழங்கினார்கள்.
13.2.2012 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய உரை
வருமாறு:
இன்று நடைபெறும் இந்த இனிய விழாவில்,
7 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்ட மணப்பாறை அரசு மருத்துவ
மனை கட்டடம்; பள்ளி வகுப்பறைகள்; குடிநீர்
வசதிகள்; ஆய்வகங்கள்; பிற்படுத்தப்பட்டோர்
விடுதிக் கட்டடம்; கூட்டுறவுத் துறை வங்கிக்
கட்டடம்; கிராம சந்தை மற்றும், ஊரக
வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம்
கட்டப்பட்ட பாலங்கள்; சமுதாயக் கூடங்கள்;
பள்ளிக் கட்டடங்கள்; சாலைகள் ஆகியவற்றை
மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து
வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் சுயநல திட்டங்கள் கொக்கு கதையை நினைவுபடுத்தி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா விளக்கம்.

திருச்சி, பிப். 14
முந்தைய தி.மு.க. அரசின் ஆட்சிக்
காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் குடும்ப
வருவாயை பெருக்கும் சுய நல
திட்டங்கள் என்று, கொக்கு கதையை
நினைவுபடுத்தி முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் விளக்கம்
அளித்து பேசினார்கள்.
13.2.2012 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
அரசு விழாவில் தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய
உரை வருமாறு:
என்னைப் பொறுத்தவரையில், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை, எளிய
மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வளர்ச்சியாக
இருக்கவேண்டும். எனவே தான், எனது அரசு,
ஏழைமக்கள் உடனடியாகபயன்பெறும்வண்ணம்,
எந்தவித விலையும் கொடுக்காமல் பெறக்கூடிய
திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ஏழை-எளிய மக்கள் வாழ்க்கையில் ஏற்றம்பெற வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை வழங்கி வரும் ஒப்பற்ற முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி பேச்சு.

திருவள்ளூர், பிப். 14
ஏழை, எளிய மக்கள்
வாழ்க்கையில் ஏற்றம்
பெற விரைந்து சிறப்பு
மிக்கதிட்டங்களைவழங்கி
வருபவர் தமிழக முதல
மைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள்தான்
என பால்வளத் துறை
அமைச்சர் மாதவரம்
வி.மூர்த்தி பெருமிதத்
துடன் தெரிவித்தார்.
மு த ல  ம ச் ச ர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் 64வது பிறந்த
நாள் விழாவை முன்
னிட்டு திருவள்ளூர்
தெற்கு மாவட்ட கழ
கத்தின் சார்பில் மாவட்ட
செயல்வீரர்கள் கூட்டம்
வானகரத்தில் நடை
பெற்றது. இக்கூட்டத் திற்கு
மாவட்ட கழக அவைத்
தலைவர் என்.கே. கிருஷ்ண
குமார் தலைமை தாங்கி
னார். சென்னை மாநகர
துணை மேயர் பெஞ்சமின்
அனைவரையும் வரவேற்றார்.

Thursday, February 9, 2012

தலைமைக் கழக அறிவிப்பு எண். 28/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
கர்நாடக மாநிலம் - பெங்களூரு மாநகராட்சி
காந்தி நகர் 94ஆவது வார்டு உறுப்பினர்
பதவிக்கான கழக வேட்பாளர்
அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த
முடிவின்படி 26.2.2012 அன்று கர்நாடக மாநிலம்,
பெங்களூரு மாநகராட்சி, காந்தி நகர் 94ஆவது
வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற உள்ள
உள்ளாட்சி இடைத் தேர்தலில், அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
அதிகாரப்பூர்வ வேட்பாளராக,
திரு. எம்.பி.யுவராஜ் அவர்கள்
(கழகப் பொதுக்குழு உறுப்பினர், கர்நாடக
மாநிலம்)
தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு எண். 27/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
கும்பகோணம் நகரம்
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம்
நகரக் கழகச் செயலாளர் பொறுப்பில்,
திரு. ராம. ராமநாதன், M.com., அவர்கள்
(கும்பகோணம் தொகுதி முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.


2007ல் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினரின் 3 மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது; நிலையை விளக்க அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை உரிமைக் குழு அறிக்கையின் பேரில் விஜயகாந்த் மீதான நடவடிக்கையை கருணாநிதி விமர்சிப்பது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்.

சட்டப்பேரவையில் அவை மரபுக்கு மாறாக
நடந்து கொண்டார் என உரிமைக் குழு அளித்த
அறிக்கையின் பேரில் விஜய காந்த் மீது எடுக்கப்
பட்ட நடவடிக்கையை அரசுடன் தொடர்பு படுத்தி
கருணாநிதி விமர்சனம் செய்திருப்பது அவரது
சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் என சட்டப்
பேரவைத்தலைவர் டி.ஜெயக்குமார் கண்டித்
துள்ளார்.
2007ம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. உறுப்பி
னருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல்
3 மாத சம்பளத்தை நிறுத்தி வைத்ததை சுட்டிக்
காட்டிய சட்டப்பேரவைத் தலைவர், விஜயகாந்த்
துக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளித்தும் அவர்
அதை நிராகரித்துவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.
கருணாநிதிக்கு மறுப்பு
தெரிவித்துசட்டப்பேரவைத்
தலைவர் டி.ஜெயக்குமார்
விடுத்துள்ள அறிக்கை
வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர்
விஜயகாந்த் மீதான அவை
உரிமை மீறல் பிரச்சினை
யில், 2-.2.-2012 அன்று சட்ட
மன்றப் பேரவை எடுத்த
நடவடிக்கை குறித்து, பத்
திரிகையாளர் கேள்விக்கு,
மு.கருணாநிதி, "ஜனநாய
கத்துக்குப் புறம்பான
காரியங்கள் மாத்திரமல்ல,
ஜனநாயகத்தை உடைத்
தெறியும் காரியங்கள், இந்த
ஆட்சியில் தொடர்ந்து
நடைபெறுகிறது. அதற்கு
ஒரு உதாரணம், விஜய
காந்த் மீது செலுத்துகின்ற
அடக்குமுறைகளும்,
அட்டூழியங்களும்." என்று
விமர்சித்துள்ளார்.
1.-2.-2012 அன்று அவை
நடவடிக்கைகளுக்குக்
குந்தகம் விளைவித்த
விஜயகாந்த்தும், கூச்ச
லிட்டு குழப்பம் விளை
வித்த தே.மு.தி.க. உறுப்பி
னர்களும்,பேரவையிலிருந்து
வெளியேற்றப்பட்டனர்.
அவையில் அனைவரின்
முன்பும், சட்டமன்றத்தி
னுடைய கண்ணியத்தைக்
குலைக்கின்ற வகையில்,
விஜயகாந்த் நடந்து
கொண்டதால், அவர் மீது
பேரவையே நடவடிக்கை
எடுக்குமாறு பேரவைத்
தலைவர் அன்றைய
தினமே கேட்டுக் கொண்டி
ருக்கலாம். எனினும்,
உடனே அவசரப்பட்டு
நடவடிக்கை எடுக்காமல்,
வெளியேற்றப்பட்ட விஜய
காந்த் தனது நிலையை
எடுத்துரைக்க வாய்ப்பு
அளிக்கப்பட வேண்டும்
என்பதாலும், பேரவையில்
அவர் நடந்து கொண்ட
விதம் குறித்து, பேரவை
நடவடிக்கைகளின் ஒளிப்
பதிவு மற்றும் புகைப்படங்
களைப் பார்த்து, தீர
விசாரித்து, இப்பிரச்சினை
குறித்து ஆய்ந்து அறிக்கை
அளிப்பதற்காக பேரவைத்
தலைவரால் உரிமைக் குழு
விற்கு அனுப்பி வைக்கப்
பட்டது.

ராமேஸ்வரம் அருகே அரசு பேருந்து மோதியதில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ரூ. 1 லட்சம் நிதியுதவி.

ராமேஸ்வரம் அருகே அரசு பேருந்து மோதியதில்
மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ. 1 லட்சம்
நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம்
வட்டம், மெய்யம்புளி கிராமம், அருள்மிகு
ஏகாந்தராமர் திருக்கோயில் அருகே 6.2.2012
அன்று இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது
ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி
சென்று கொண்டிருந்த அரசு பேருந்து
மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம்
செய்த மெய்யம்புளி கிராமத்தைச் சேர்ந்த
ஜீவாநந்தம் என்பவரின் மகன் ஆரோக்கிய
ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம்
அடைந்தேன்.
இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்த
ஆரோக்கிய ராபின் குடும்பத்திற்கு எனது
ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இத் துயரச் சம்பவத்தில் காலமான
ஆரோக்கிய ராபின் குடும்பத்திற்கு
முதலமைச்சரின் பொது நிவாரண
நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான்
உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் தமது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்கள்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை.

கடலூரில் தி.மு.க.வைச்
சேர்ந்த முன்னாள் அமைச்
சர் பொன்முடிக்கு சொந்
தமான இருசக்கர வாகன
விற்பனை நிலையத்தில்,
லஞ்ச ஒழிப்பு போலீசார்
அதிரடி சோதனை மேற்
கொண்டனர்.
கடலூரில் தி.மு.க.வைச்
சேர்ந்த முன்னாள் அமைச்
சர் பொன்முடிக்கு சொந்த
மாக இருசக்கர வாகன விற்
பனை நிலையம் உள்ளது.
இந்த விற்பனை நிலையத்
தில் லஞ்ச ஒழிப்பு போலீ
சார் அதிரடி சோதனை
மேற்கொண்டனர்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ரூ. 550 கோடி கமிஷன்: கருணாநிதி பேரன்கள் தயாநிதி-கலாநிதி மீது வழக்குப் பதிவு அமலாக்கப் பிரிவு நடவடிக்கை.

2ஜி அலைக்கற்றை
ஒதுக்கீடு விவகாரம்
தொடர்பாக முறைகே
டாக சுமார் 550 கோடி
ரூபாய் பணம் பெற்றதாக,
கருணாநிதியின் பேரனும்,
முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன்
மற்றும் அவரது சகோதரர்
கலாநிதிமாறன் ஆகியோர்
மீது மத்திய அமலாக்கப்
பிரிவு வழக்குப் பதிவு
செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்
கற்றை ஒதுக்கீட்டில் நடந்த
ஒரு லட்சத்து 80 ஆயிரம்
கோடி ரூபாய் இமாலய
ஊழல் தொடர்பாக
தி.மு.க.வைச் சேர்ந்த
முன்னாள் தொலைத்
தொடர்புத்துறை அமைச்
சர் ஆ.ராசா கைது செய்
யப்பட்டு திகார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் மகள்
கனிமொழியும், இவ்வழக்
கில் சிறையில்
அடைக்கப்பட்டு தற்போது
ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சென்னை பொதுமருத்துவமனையில் கூடுதலாக 30 படுக்கை வசதி.

மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சர் வி.எஸ்.
விஜய் தலைமையில்
ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு நடவடிக்
கைகள் குறித்து ஆலோசிக்
கப்பட்டது. முதலமைச்
சரின் விரிவான மருத்துவ
காப்பீட்டு திட்டத்தின் கீழ்
ஏழை எளிய மக்களுக்கு
சிறப்பான சிகிச்சை வழங்க
தமிழக அரசு முடிவு
செய்துள்ளது.
இதற்காக தமிழ்
நாட்டில் உள்ள 17 அரசு
ம ரு த் து வ க ல் லூ ரி
மருத்துவமனைகளில்
அரசு காப்பீட்டு திட்டத்
துக்கான சிகிச்சை அளிக்
கப்படுகிறது. இதற்காக,
அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனைகளில்
கூடுதல் வசதி செய்வது
குறித்து இந்த கூட்டத்தில்
முடிவு எடுக்கப்பட்டது. 32
மாவட்ட அரசு மருத்துவ
மனைகளிலும் கூடுதல்
வசதி செய்வது என்றும்
முடிவு செய்யப்பட்டது.

கோடியக்கரையை சுற்றுலா தலமாக்க ஆவன செய்யப்படும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தகவல்.

கோடியக்கரையை
சுற்றுலா தலமாக்க ஆவன
செய்யப்படும் என்றும்
நாகப்பட்டினம் மாவட்
டத்தில் வரலாற்றுச் சிறப்பு
மிக்க பகுதிகளில் சுற்று
லாப் பயணிகளுக்கு அடிப்
படை வசதிகள் செய்து
தரப்பட்டுள்ளது என
அமைச்சர் எஸ்.கோகுல
இந்திரா பதிலளித்தார்.
சட்டப்பேரவையில்
கேள்வி நேரத்தின்போது
நடைபெற்ற கேள்வி-பதில்
விவரம் வருமாறு:
உறுப்பினர் என்.வி.காம
ராஜ்: எனது தொகுதிக்குட்
பட்ட ஆய்குளம் பகு
திக்கு பிற்படுத்தப்பட்
டோர் நல மாணவியர்
விடுதி கட்டுவதற்காக
ரூபாய் 90 இலட்சம்
வழங்கிய முதலமைச்சர்
புரட்சித் தலைவி அம்மா
அவர்களுக்கு தொகுதி
மக்கள் சார்பாக என் நன்றி
யைத் தெரிவித்துக்கொள்
கிறேன். வேதாரண்யம்
சுதந்திரப் போராட்டத்
திற்கு புகழ்பெற்ற ஊர்.
உப்பு சத்தியாக்கிரகம்
நடைபெற்ற ஊர். கோடி
யக்கரையில் பறவைகள்
சரணாலயம் உள்ளது.
பாகிஸ்தான், ஆஸ்திரே
லியா ஆகிய நாடுகளிலி
ருந்து பறவைகள் ஆண்டு
தோறும் வருகின்றன.
வேதாரண்யம், வேதா
ரண்ய ஈஸ்வரர் கோயில்

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா வழியில் சென்னை மக்களை நோய்களிலிருந்து விடுவிக்க மாநகராட்சி சிறப்பு திட்டம்.

உலகம் முழுவதும் பெருகிவரும் உயர் ரத்த
அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயிலிருந்து
சென்னை நகரில் வாழும் மக்களைக் காப்பாற்றும்
முயற்சியில் சென்னை மாநக-ராட்சி ஈடுபட்டுள்ளது.
மூன்றாம் முறையாக
முதல்வராக பொறுப்பேற்ற
புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உயர் தர மருத்
துவ வசதியை ஏற்படுத்திக்
கொடுத்து மக்களை
நோயிலிருந்து காப்பாற்ற
சங்கிலித் தொடர்போல
பல நடவடிக்கைகளை
எடுத்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக
முந்தைய கருணாநிதி ஆட்
சியில் விளம்பர நோக்கத்
தோடு தனியார் பயன்பெற
நிறைவேற்றப் பட்டு வந்த
மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தை மாற்றி அமைத்
தார்கள்.
அனைவருக்கும் தரம
�ன மருத்துவ சேவை
கிடைக்கும் வகையில்
முதலமைச்சரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தை கடந்த ஜனவரி
11&ம் தேதி தொடங்கி
வைத்தார்கள்.
ஒருகோடியே 34 லட்சத்
துக்கும் அதிகமான குடும்
பங்கள், இந்தத்திட்டத்தின்
கீழ் பயன்பெற முடியும்.
ஒரு குடும்பத்தினர் 4
ஆண்டுகளுக்குரூ. 4லட்சம்
வரை பெற இந்த விரிவான
மருத்துவக் காப்பீட்டு திட்
டம் வழிவகை செய்கிறது.

Wednesday, February 8, 2012

கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்னிலையில் தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் உள்பட 1025 பேர் கழகத்தில் இணைந்தனர்.

தே.மு.தி.க. கூடாரம் கூண்டோடு காலியாகிறது. கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முன்னிலையில் தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள், மாநில
மற்றும் மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க., ம.தி.மு.க.,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 1,025 பேர்
கழகத்தில் இணைந்தனர்.
இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்
டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நேற்று (7.2.2012 - செவ்வாய்க் கிழமை),
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின்
தேர்தல் பிரிவுச் செயலாளர் கா.ஜெகவீரபாண்டியன், தொழிற்சங்க பேரவைத் தலைவர் கோ. வேல்முருகன், சி.எஸ்.சந்திரிகா வேல்முருகன்,
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
டாக்டர் ஜெய்சன் ஜேக்கப், மருத்துவ அணிச்
செயலாளர் ராணிப்பேட்டை டாக்டர் பாரி,
தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் மதுரை
ரவீந்திரன், பானு ரவீந்திரன், இன்ஜினியரிங்
பிரிவு தொழிற்சங்கச் செயலாளர் திருவள்ளூர்
என்.கே.பொன்ராஜ், தோட்டத் தொழிலாளர்
பிரிவு தொழிற்சங்கச் செயலாளர் கிருஷ்ணகிரி பிரகாசம், தொழிற்சங்க துணைத் தலைவர்
எஸ்.கமலகண்ணன், மாநில மின்வாரிய
தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.ரஷித், செயலாளர் இளங்கோ, அமைப்பு சாரா
தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் திருச்சி
ஙிபிணிலி நடராஜா, கோவை மாவட்ட தொழிற்சங்க
த் தலைவர் திருப்பூர் கிருஷ்ணசாமி,
திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் கும்மிடிப்பூண்டி ஜி.பாபு, திருநெல்வேலி
மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் நெல்லை
சுந்தரம், தருமபுரி மாவட்ட தொழிற்சங்கத்
தலைவர் நாகை நடராஜன், தஞ்சாவூர்
மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் வடசேரி
பாஸ்கர், வடசென்னை மாவட்ட மருத்துவ
அணிச் செயலாளர் டாக்டர் எம்.செல்வராஜ்,
பெரம்பூர் பகுதி மருத்துவ அணி செயலாளர்
டாக்டர் கே.கோபால், ஜெகவீரபாண்டியனின்
மகன் எஸ்.முன்னா, மருமகன் விழுப்புரம்
எஸ்.கே.உசைன் நவாஸ், வேல்முருகனின்
மகன்கள் வி.கிஷோர்நாத், வி.பிரேம்நாத்,
2006 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஏற்க
�டு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள்
மற்றும் தஞ்சாவூர் நகர மாணவர்கள் 50
பேர் உட்பட 1000 பேர் தங்களை கழகத்தின்
அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்
கொண்டனர்.இந்நிகழ்வுகளின் போது, கழக
மாநிலங்கள் அவை உறுப்பினர் கி.வில்லியம்
ரபிபெர்னார்ட் உடன் இருந்தார்.

Tuesday, February 7, 2012

அனைத்து மாணவர்களுக்கும் மடிக் கணினி: முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அறிவித்தபடி வழங்க ஏற்பாடு.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி, மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக் கணினி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றி வருகிறார்கள். ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்கியதுடன், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்ப டுத்தினார்கள். விலையில்லா அரிசி, விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள், மிக்சி, கிரைண்டர், ஃபேன் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்கள்.
நான்காம் தமிழாக அறிவியல் தமிழைக்
கண்ட முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள், மாணவ-மாணவிகளின் அறிவைப்
பெருக்க மடிக் கணினிகள் மாணவர்களுக்கு
வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 9.12
லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி
வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
மாணவர்கள் இடை நிற்றலைத் தடுக்க
சிறப்பு ஊக்கத் தொகை, பாடப் புத்தகங்கள்,
4 ஜோடி சீருடைகள், அட்லஸ், ஜாமெட்ரி
பாக்ஸ், காலணிகள் என குழந்தைகளின்
கல்விச் செலவை புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு எண். 25/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
கழக இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறை
அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம்
பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில்
இருக்கும்
திரு. V. செந்தில்நாதன் அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்
படுகிறார்.

தமிழகத்திலுள்ள சுயநிதி மருத்துவம்-மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் கண்காணிக்கும் குழுவின் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அரசு எச்சரிக்கை.

உச்சநீதிமன்ற தீர்ப்
பின்படி தமிழகத்திலுள்ள
சுயநிதி மருத்துவம் மருத்
துவம்சார்ந்தகல்லூரிகளில்
மாணவர் சேர்க்கையை
முறைப்படுத்தும் மற்றும்
கண்காணிக்கும் குழு,
முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களின்
அரசு அமைத்துள்ளது.
இக்குழுவின்அனுமதியின்றி
நடைபெறும் மாணவர்
சேர்க்கை செல்லாது
எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக
அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்
படி தமிழகத்தில் உள்ள
சுயநிதி மருத்துவம் மற்றும்
மருத்துவம் சார்ந்த சிறு
பான்மைமற்றும்சிறுபான்மை
அல்லாத சுயநிதி கல்லூரி களில், நேர்மையாகவும்,
வெளிப்படையாகவும்,
தவறான முறையில் பயன
டையாமல் இருக்கும்படி
யாகவும் மாணவர் சேர்க்கை நடை
பெற உறுதிபடுத்துவதற்கு,
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற
நீதிபதி நீதியரசர்அ.அப்துல்
ஹாதி தலைமையின் கீழ்
"சுயநிதி மருத்துவகல்விக்
கான மாணவர் சேர்க்
கையை முறைப்படுத்தும்
மற்றும் கண்காணிக்கும்
குழு" ஒன்றினை தமிழக
அரசு, அரசாணை எண்.177,
உயர் கல்வித் துறை, நாள்.
1.8.2011ன்படி அமைத்துள்
ளது. இக்குழுவில் உறுப்பி
னர் செயலராக சுகாதாரம்
மற்றும் குடும்ப நலத்துறை
முதன்மைச் செயலாளர்
கிரிஜா வைத்யநாதன்,

1,36,109 ஏக்கர் நிலத்தின் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 3 மாவட்டங்களின் பூர்வீகப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
மாவட்டங்களிலுள்ள பூர்வீக பாசனப் பகுதிக
ளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரத்து
109 ஏக்கர் நிலத்தின் பாசன வசதிக்காக இன்று
(7&ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விட
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பான முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் அறிக்கை
வருமாறு:
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை
அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும்
இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள
வைகை பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு
சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு
வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து
எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண்
பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று
மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மாவட்டங்களில் உள்ள பூர்வீக பாசனப்
பகுதிகளுக்கு பாசனத்திற்காக வைகை
அணையிலிருந்து 7-.2.2012 முதல் தண்ணீர்
திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் இராமந
�தபுரம் மாவட்டங்களில் உள்ள 1.36,109 ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான்
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அமைச்சரவை பதவி விலக பா.ஜ.க. வலியுறுத்தல்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா
செய்ய வேண்டுமென்று
பாரதிய ஜனதா கட்சி
வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்
தில் பேசிய அக்கட்சியின்
மூத்த தலைவர் வெங்கய்ய
� நாயுடு, நாட்டையே
உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் ஆ.ராசா-
வின் ஊழலை அன்றைய
நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் மன்-
மோகன்சிங்கும் ஏன்
தடுத்து நிறுத்தவில்லை
என்று கேள்வி எழுப்பின
�ர்.
இந்த ஊழலுக்கு
பொறுப்பேற்று, மத்திய
அமைச்சரவை ஒட்டு-
மொத்த-மாக பதவி விலக
வேண்டும் என்றும் வெங்கய்ய
� நாயுடு வலியுறுத்தின
�ர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் அமைச்சர் நேரில் ஆய்வு.

சமூகநலத்துறைஅமைச்சர்
பா.வளர்மதி, ஒருங்கி
ணைந்த குழந்தை வளர்ச்
சித்திட்டத்தின்கீழ்சென்னை
சிந்தாதரிப்பேட்டை,
அருணாச்சலம் தெருவில்
உள்ள மாநகராட்சிப்
பள்ளி வளாகத்தில்
இயங்கும் 2 அங்கன்வாடி
மையங்களில் திடீரென
ஆளிணிவு செய்தார்.
ஆய்வின் பொழுது
சமூகநலம் மற்றும் சத்துண
வுத் திட்டத்துறை அரசு
செயலாளர் கே.கோபால்,
மற்றும் சமூகநல இயக்குநர்
ஜோதி நிர்மலா ஆகியோர்
உடன் இருந்தனர்.
இவ்வாளிணிவில் அங்கன்
வாடி மையங்களில் குழந்
தைகளுக்கு வழங்கப்படும்
தினசரி காலை உணவு
மற்றும்மதியஉணவுகுறித்து
அமைச்சர் குழந்தைகளி
டம் கேட்டு அறிந்தார்.
அரிசியின் தரம் குறித்து
ஆய்வு செய்த அமைச்சர்,
தரமானஅரிசியைகுழந்தை
களுக்கு வழங்க வேண்டும்
என்றும், மேலும் சுகாதார
மான முறையில் சமையல்
செய்து அதை விநியோகித்
திட வேண்டும் என்றும்
அறிவுரை வழங்கினார்.
குழந்தைகளுக்கு கல்வி
செல்வத்தை போதிப்ப
தோடு, எதிர்காலத்தில்
அவர்களின் செயல்பாடு
கள் உறுதியாக அமையும்
வண்ணம் விளையாட்டு
களிலும் ஈடுபடுத்தி அவர்
களின் செயல்திறனை
அதிகப்படுத்தவேண்டும்
என்றுகேட்டுக்கொண்டார்.
குழந்தைகளுக்கு வழங்கப்
படும் உணவு முறை
குறித்து மையத்தில் தினசரி
கால அட்டவணையை
பார்வையிட்ட அமைச்சர்
அவ்வட்டவணைப்படி
உணவுகள்வழங்கவேண்டும்
என்றுகேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருந்து தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டவிரோதமாக நோயாளிகளிடம் சோதனை செளிணிவதாக புகார் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

மருந்து தயாரிக்கும்
வெளிநாட்டு நிறுவனங்கள்,
சட்டவிரோதமாக, இந்
தியாவின் பல்வேறு
மாநிலங்களில், நோயாளி
களை பல்வேறு சோதனை
களுக்கு உட்படுத்தும்
விவகாரம் குறித்து, மத்திய
அரசு விளக்கம் அளிக்க
வேண்டுமென உச்ச நீதி
மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நோய்களுக்
கான மருந்துப் பொருட்
களை தயாரிக்கும் வெளி
நாட்டு நிறுவனங்கள்,
நோயாளிகளுக்கு, ஊசி
மருந்து செலுத்தியோ,
ம  த் தி  ர க  ள க்
கொடுத்தோ சோதனை
நடத்துவதற்கு, பெரும்
பாலான நாடுகளில் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு
வெளிநாட்டு நிறுவனங்கள்,
தடை செளிணியப்பட்டுள்ள
இந்த சோதனைக்கான
களமாக இந்தியாவை
பயன்படுத்தி வருவது
குறித்து, மத்தியப்பிரதேச
மாநிலம், இந்தூரைச்
சேர்நத ஒரு தன்னார்வ
அமைப்பு, உச்ச நீதிமன்
றத்தில் பொதுநல வழக்கு
தொடர்ந்துள்ளது.

Monday, February 6, 2012

அரசு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிப்ரவரி 13ம் தேதி ஸ்ரீரங்கம் பயணம்: முடிவுற்ற திட்டங்களை துவக்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் தான் போட்டி
யிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு
வருகிற 13ம் தேதி பயணம் செய்யவிருக்கிறார்கள். அப்போது அரசின் பல்வேறு
நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய
மக்களுக்கு வழங்குவதுடன் புதிய
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,
முடிவுற்ற திட்டங்களை திறந்தும் வைக்
கிறார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களை
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் பெருவாரியான
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற
வைத்து, மூன்றாவது முறையாக தமிழகத்தின்
முதலமைச்சராக்கினார்கள்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்ப
தற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீரங்கம்
தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம்
மேற்கொண்டார்கள்.
தேர்தல் நேரத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி
மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை
அப்போது நிறைவேற்றி வைக்கும் வகையில்
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்
நாட்டினார்கள்.
கிட்டத்தட்ட 7 மாதங்கள் நிறைவடைந்த
நிலையில் தனது சொந்த தொகுதிக்கு 2வது
முறையாக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் செல்ல உள்ளார்கள்.

Friday, February 3, 2012

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா கருத்து

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்ள்.

ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு தொடர்பாக,முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம், சென்னையில் நேற்று செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்தார்கள்.  ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பது பற்றி செய்தியாளர்கள்  கேட்டபோது, இப்பிரச்சினையில் சிறப்பு நீதிமன்றம் தான் இறுதி முடிவு
எடுக்கவேண்டும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதில் அளித்தார்கள்.

ப.சிதம்பரத்தின் ராஜினாமாவை வலியுறுத்துவீர்களா என்று செய்தியாளர்கள்  கேட்டபோது,இந்த கட்டத்தில் இதுபற்றி மேலும் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
தெரிவித்துள்ளார்ள்.

Monday, January 30, 2012

தமிழக மக்கள் உள்ளங்களில் வாழுகின்ற மாபெரும் தலைவர்களான பேரறிஞர் அண்ணா-பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

சென்னை, ஜன. 30
தமிழக மக்கள் உள்ளங்களில் வாழுகின்ற மாபெரும் தலைவர்களான
பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவிடங்களை
புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட 8 கோடியே 90 லட்சம் ரூபாயை
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒதுக்கீடு செய்து
உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில்
எல்லாம்" என்றார் மகாகவி பாரதியார். அதுபோல்
தமிழக மக்கள் உள்ளங்களில் இன்றளவும்
வாழுகின்ற மாபெரும் தலைவர்கள் பேரறிஞர்
அண்ணா அவர்களும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர்
அவர்களும்ஆவர். பேரறிஞர்அண்ணாஅவர்கள்
தனது இதயக்கனி என்று சொன்னது முன்னாள்
முதல்வர்பாரதரத்னாஎம்.ஜி.ஆர்அவர்களைத்தான்.
எனவே,இவ்விரண்டுதலைவர்களின்நினைவிடங்
களும் அருகருகே அமைந்திருப்பது இயற்கையே
யாகும்.

பணி சிறக்க தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.2 கோடியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி பிரிண்டர்- அகண்ட அலைவரிசை இணைய தள இணைப்பு வசதி வாங்கிக்கொள்ளலாம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அனுமதி.

சென்னை, ஜன. 30
கணினி புரட்சி மூலம் பல தகவல்களை இருந்த இடத்திலிருந்தே தெரிந்து
கொண்டு பணி சிறக்க சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு
நிதியான ரூ.2 கோடியிலிருந்து ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி
பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி
ஆகியவற்றை ஒரு முறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு
வருமாறு:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற
உறுப்பினர்கள் மூலமேமக்களாட்சிநடைபெறுகிறது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள கணினி புரட்சியின்
மூலம் பல தகவல்களை இருந்த இடத்திலிருந்து
கணினியின் மூலம் தெரிந்துக் கொண்டு,
அவர்களின் பணி சிறக்க அவர்களுக்கு கணினி
வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
எனவே தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் 11.08.2011 அன்று 2011-
12ஆம் ஆண்டைய திருத்திய வரவு, செலவு
திட்டத்திற்கான பொது விவாதத்தின்போது சட்ட
மன்றஉறுப்பினர்கள்,சட்டமன்றஉறுப்பினர்தொகுதி
மேம்பாட்டுத்திட்டநிதியிலிருந்துஒருமடிக்கணினி
வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்தார்கள்.மேலும்
நடப்பாண்டில் சட்டமன்ற உறுப்பினர்களின்
தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடியே 75
லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக
உயர்த்தி வழங்கவும் அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஒவ்வொரு
சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்
திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத
நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்துதங்களின்
தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி
அல்லது கணினி பிரிண்டர்
மற்றும் அகண்ட அலைவரிசை
இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை ஒருமுறை மட்டும்
வாங்கிக் கொள்வதற்கு தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒப்புதல்
அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

65வது நினைவு நாளையட்டி அண்ணல் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் - முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மாலை அணிவித்து மரியாதை.

சென்னை, ஜன. 30
தேசப் பிதா மகாத்மா
காந்தியின் 65வது நினைவு
தினமான இன்று தமிழக
அரசின் சார்பில் அவரது
திருவுருவச் சிலைக்கு
தமிழக ஆளுநர் டாக்டர்
ரோசையாவும், தமிழக
முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்களும்
மலர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்து
கிறார்கள்.
கொடியவன் கோட்சே
வால் அண்ணல் காந்திய
டிகள் சுட்டுக் கொல்லப்
பட்டு 64 ஆண்டுகள்
உருண்டோடி விட்டன.
இன்று அண்ணல்
காந்தியின் 65வது நினைவு
தினமாகும். அதை
யட்டி அவரது நினை
விடத்திலும், நாடெங்
கிலுமுள்ள காந்தி மண்ட
பங்கள், திருவுருவச் சிலை
களுக்கும் அரசியல் தலை
வர்களும், நாட்டு மக்களும்
மரியாதை செலுத்து
கிறார்கள்.
சென்னையில் கிண்டி
யிலுள்ள காந்தி மண்டபம்
உட்பட பல்வேறு இடங்
களில்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் காமரா
ஜர் சாலையிலுள்ள
மகாத்மா காந்தியடிகள்
திருவுருவச் சிலைக்கு
தமிழக அரசின் சார்பில்
மாலை அணிவித்து மரி
யாதை செலுத்தப்பட
உள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது ஆளுநர் உரை நிகழ்த்துகிறார்.

சென்னை, ஜன. 30
தமிழக சட்டப்பேரவை
இன்று கூடுகிறது. ஆளுநர்
ரோசையா பேரவையில்
உரையாற்றுகிறார்.
முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
பொறுப்பேற்ற பின் கடந்த
ஜூன் மாதம் சட்டப்
பேரவைக் கூட்டம் நடை
பெற்றது. இதனைத்
தொடர்ந்து பட்ஜெட்
கூட்டத் தொடர் கடந்த
ஆகஸ்ட் மாதம் தொடங்கி
செப்டம்பரில் நிறைவுற்றது.
முல்லைப் பெரியாறு
அணைவிவகாரம் தொடர்
பான சட்டசபையின்
சிறப்புக் கூட்டம் கடந்த
டிசம்பர் 15ம் தேதி நடை
பெற்றது.

Friday, January 27, 2012

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 21/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதா அவர்களின்
முக்கிய அறிவிப்பு
1. திரு. தோட்டக்கலை V.கிருஷ்ணமூர்த்தி,
2. திருமதி சந்தானலட்சுமி சுந்தரவதனம்,
3. திரு. சுந்தரவதனம்,
4. திருமதி வைஜெயந்தி மாலா
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை
உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி
வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன்
எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது
எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 20/2012


அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம்
கழக மருத்துவ அணி துணைச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,
எம்.எல்.ஏ., அவர்களும்,
புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும் திரு. வி.சி.ராமையா
அவர்களும்,
இன்று முதல் அவரவர் வகித்து வரும்
பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்
படுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில்,
டாக்டர் சி. விஜயபாஸ்கர்,அவர்கள்
(விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 19/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
திருச்சி புறநகர் மாவட்டம்
திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும்
திரு. ரி.ரி. பாலசுப்பிரமணியன் அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார்.
திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில்,
திரு.N.R.சிவபதி, அவர்கள்
(முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 18/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
கோவை புறநகர் மாவட்டம்
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில் இருக்கும்
திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார்.
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொறுப்பில்,
திரு.செ. தாமோதரன் அவர்கள்
(பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
வேளாண்மைத்துறை அமைச்சர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 17/2012

அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் பொறுப்பில் இருக்கும்
திரு. தூசி கே.மோகன் அவர்கள்
இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்படுகிறார். இவர் ஏற்கெனவே
வகித்து வரும் வெம்பாக்கம் ஒன்றியக் கழகச்
செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து
செயலாற்றுவார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச்
செயலாளர் பொறுப்பில்,
திரு.முக்கூர் என்.சுப்பிரமணியன், ஙி.கி.,அவர்கள்
(செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு
ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 16/2012

அனைத்திந்தியஅண்ணாதிராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலம்
மும்பை மாநகராட்சித் தேர்தல் - கழக வேட்பாளர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த
முடிவின்படி, 16.2.2012 அன்று நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகராட்சித்
தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ
வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காம் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு
நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. சாகுநகர் 180ஆவது வார்டு - திரு. ஷி.கி.நிக்கம் அவர்கள்
2. மலாட் மேற்கு 31வது வார்டு - திரு. ராஜா பழனிசாமி நாயனார் அவர்கள்