எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, February 26, 2012

சென்னை:பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும். அவ்வாறு வழங்க முடியாத இடங்களில், பள்ளிகளே ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை அரசே ஈடுசெய்யும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்க, முந்தைய தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழகம் தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. என் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்த தவறிவிட்டது.மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்களும் உரிய காலத்தில் முடிக்கப்படாததால், நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. முந்தைய அரசு, அன்றாடம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தது. நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை பெற இயலவில்லை.
அன்னியர் பிரச்னை வேறுஇது தவிர, மின் தொடர் அமைப்பில் நெருக்கடி உள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒரு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர் நெருக்கடியின் விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவுக்கே மின்சாரம் பெற இயலுகிறது. இதனால், மின் இருப்புக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment