அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித்தலைவி
ஜெ ஜெயலலிதாஅவர்களின்
முக்கிய அறிவிப்பு
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்-2012
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்
18.3.2012 அன்று நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்
தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல்
பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஏற்கெனவே
நியமிக்கப்பட்டுள்ள 34 பேர்களுடன்,
35. திரு. பி. பழனியப்பன் அவர்கள்
உயர் கல்வித் துறை அமைச்சர்
36. திரு. வி. மூர்த்தி அவர்கள்
திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலளார்
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
37. திரு. கே.ஏ. ஜெயபால் அவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர்
மீன்வளத் துறை அமைச்சர்
38. திரு. முக்கூர் என். சுப்பிரமணியன் அவர்கள்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
39. திரு. அ. முஹம்மத்ஜான் அவர்கள்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்
40. திரு. வி.ஷி.வி. ஆனந்தன் அவர்கள்
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
41. திரு. அ. தமிழ்மகன் உசேன் அவர்கள்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
42. டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., அவர்கள்
கழக கொள்கை பரப்புச் செயலாளர்
43. திரு. செ. செம்மலை, எம்.பி., அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர்
ஆகியோர் கூடுதலாக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு
பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக
வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment