எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, February 3, 2012

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா கருத்து

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்ள்.

ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு தொடர்பாக,முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம், சென்னையில் நேற்று செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்தார்கள்.  ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பது பற்றி செய்தியாளர்கள்  கேட்டபோது, இப்பிரச்சினையில் சிறப்பு நீதிமன்றம் தான் இறுதி முடிவு
எடுக்கவேண்டும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதில் அளித்தார்கள்.

ப.சிதம்பரத்தின் ராஜினாமாவை வலியுறுத்துவீர்களா என்று செய்தியாளர்கள்  கேட்டபோது,இந்த கட்டத்தில் இதுபற்றி மேலும் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
தெரிவித்துள்ளார்ள்.

No comments:

Post a Comment