எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 9, 2012

ராமேஸ்வரம் அருகே அரசு பேருந்து மோதியதில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ரூ. 1 லட்சம் நிதியுதவி.

ராமேஸ்வரம் அருகே அரசு பேருந்து மோதியதில்
மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ. 1 லட்சம்
நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம்
வட்டம், மெய்யம்புளி கிராமம், அருள்மிகு
ஏகாந்தராமர் திருக்கோயில் அருகே 6.2.2012
அன்று இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது
ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி
சென்று கொண்டிருந்த அரசு பேருந்து
மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம்
செய்த மெய்யம்புளி கிராமத்தைச் சேர்ந்த
ஜீவாநந்தம் என்பவரின் மகன் ஆரோக்கிய
ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம்
அடைந்தேன்.
இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்த
ஆரோக்கிய ராபின் குடும்பத்திற்கு எனது
ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இத் துயரச் சம்பவத்தில் காலமான
ஆரோக்கிய ராபின் குடும்பத்திற்கு
முதலமைச்சரின் பொது நிவாரண
நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான்
உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் தமது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment