எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 21, 2012

அனைத்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா; பிரதமருக்கு வலியுறுத்தல்.

சென்னை, பிப். 21
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்
அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு
உடனடியாக கைவிட வேண்டும் என்றும்
இது தொடர்பாக அனைத்து மாநில
அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் எனவும் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பிரதமருக்கு மீண்டும் எழுதியுள்ள
கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்கள்.
இதுதொடர்பாக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள், பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு 20.2.2012 அன்று மீண்டும் எழுதியுள்ள
கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் உள்ள சில பிரிவுகளை
ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என கடந்த
17ம் தேதி நான் எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளதை நினைவு கூர்கிறேன்.
சம்பந்தப்பட்ட பிரிவுகள் குறித்து பிற மாநில
முதலமைச்சர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்புக்
கருத்துகளுடன் நானும் உடன்படுகின்றேன்.
மேலும், மார்ச் 1ம் தேதி முதல்
நடைமுறைப்படுத்தவுள்ள தேசிய பயங்கரவாத
தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான
இத்திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக
கைவிட வேண்டும். அரசியல் நிர்ணய
சட்டத்தின்படி, பொது ஒழுங்கு மற்றும்
காவல்துறை, மாநில வரம்பிற்குள் வருவதால்,
அனைத்து மாநில அரசுகளுடன் பேச்சு
வார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள், பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்
ளார்கள்.

No comments:

Post a Comment