மீன் பிடிக்கச் சென்றபோது அயல் நாட்டு வணிகக்
கப்பலிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்தவர் குடும்
பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொண்டதுடன், ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க
உத்தரவிட்டுள்ளார்கள். இதுதொடர்பாக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி
மாவட்டம், விளவங்கோடு வட்டம், பூத்துறையைச் சேர்ந்த பிரடிசான் போஸ்கோ
என்பவருக்கு சொந்தமான கப்பல் கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதிக்கு
15.2.2012 அன்றுமீன்பிடிக்கச் சென்றபோது,அயல்நாட்டு வணிகக் கப்பலில்
இருந்த ஒருவர் சுட்டதில், மீன் பிடி கப்பலில் இருந்த கன்னியாகுமரி
மாவட்டம், இரையுமன்துறை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சேவியர் என்பவரது
மகன் அஜீஸ் பிங்கோ உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும்
துயரம் அடைந்தேன். இத்துப்பாக்கிச் சூட்டில் அகால மரண மடைந்த அஜீஸ் பிங்கோ
குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
No comments:
Post a Comment