எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 14, 2012

யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி - தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா சூளுரை

திருச்சி, பிப். 14
உங்கள் அன்புச் சகோதரியின் அரசு ஏழை-எளிய மக்களின் நலனுக்காக
பாடுபடும் அரசு என்றும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு
செயல்படும் அரசு எனவும், யார் போற்றினாலும், தூற்றினாலும் என கடன் பணி
செய்து கிடப்பதே என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக மக்களின்
வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற
விழாவில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற அரசு
விழாவில் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட, சரித்திரப் புகழ்
வாய்ந்த ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த
இனிய விழாவிலே கலந்து கொண்டு, எனது
அருமை தொகுதி மக்களாகிய உங்களை
எல்லாம் கண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து
வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
உங்களோடு உரையாடும் வாய்ப்பினைப்
பெற்றுள்ளதில் உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.

No comments:

Post a Comment