எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 29, 2012

திருச்சி-1 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆரோக்கியசாமி மறைவு கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா இரங்கல்.

சென்னை, பிப்.28
திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி-1
தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.ஆரோக்கியசாமி மறைவுக்கு கழகப்
பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இரங்கல்
தெரிவித்துள்ளார்கள். .
இது குறித்து முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் இரங்கல்
செய்தி வருமாறு:
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி-1
தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எஸ். ஆரோக்கியசாமி மாரடைப்பால் மரண
மடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு
வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் ஆரோக்கியசாமியை
இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு
எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்
தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னா
ரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில்
இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment