எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, August 16, 2010

மானாமதுரையில் ஆர்ப்பாட்டம்: அம்மா அறிவிப்பு

 ""மானாமதுரை பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றாததை கண்டித்து அ.இ.அ.தி.மு.க., சார்பில் இன்று(17ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும்,'' என இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அறிவித்துள்ளார். இது குறித்த அவரின் அறிக்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை, விளையாட்டு மைதான வசதியின்றி, இட நெருக்கடியால், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். இதனைப் போக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தையும், பயணிகள் தங்கும் விடுதியையும் வேறு இடத்திற்கு மாற்றி அந்த இடத்தை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் என அ.இ.அ.தி.மு.க., சார்பில் சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணராஜபுரம் தெருவிற்கும் இடையில் பாலம் கட்டுவதாக அரசு அறிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. குடிநீர், சாலை, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு அவலம் மானாமதுரை தொகுதியில் நிலவுகிறது. வைகை ஆற்றின் கரை ஓரங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்படாததால், கழிவு நீர் ஆற்றில் கலப்பதாகவும், மானாமதுரை தொகுதியில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். திருபுவனம் பேரூராட்சியில் பஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும், சமூக நல நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

திருபுவனம் ஒன்றியத்தில், லாடனேந்தல் முதல் திருப்பாச்சேத்தி வரை செயல்பட்டு வரும் மணல் குவாரியை அகற்றாததால், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதிதாக நில சர்வே செய்த பிறகும், ஆவணங்களை ஒப்படைக்காமல், பேரூராட்சி நிர்வாகம் மக்களை ஏமாற்றி வருகிறது. தாட்கோ மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்களில் பெருமளவு மோசடி நடைபெறுகிறது என மக்கள் தெரிவிக்கின்றனர். இளையான்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சீரான மின்சாரம் இன்றி இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் மானாமதுரை தொகுதி முழுவதும் எவ்வித மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதே சமயத்தில் மாநகராட்சிக்கு இணையாக குடிநீர், வீட்டு வரி ஆகியவை வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றை கண்டித்து, மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகில், நாளை(17ம் தேதி) காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 14, 2010

திருச்சி பிரம்மாண்ட கூட்டத்தில் அம்மா ஆவேசம்: தி.மு.க., மீது கடும் தாக்கு

""தமிழத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர, முதல்வர் கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக, துரோகங்களை இழைத்துள்ளார்,'' என அ.இ.அ.தி.மு.க., இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் , திருச்சியில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.

விலைவாசி உயர்வு, விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை, மணல் திருட்டால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க., சார்பில்,  திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் அம்மா  பேசியதாவது:  நான் அரசியலுக்கு வந்து 28 ஆண்டுகளாகின்றன.  இதுபோல மக்கள் கூட்டத்தை நான் என் வாழ்நாளில் எங்கும் பார்த்ததில்லை.தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு காலம் முடிந்து விட்டது. இப்போது தேர்தல் ஆண்டில் உள்ளோம். ஒன்பது மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். ஜனநாயக நாட்டில் ஓட்டு போடுவது மக்களின் கையில் உள்ள சிறந்த ஆயுதம்.முதல்வர் கருணாநிதி, உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளார். அவரது சொத்துக்கணக்கை  பார்த்தால், கால்குலேட்டருக்கும் கிறுக்கு பிடித்து விடும். கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த, அரசு எதையும் செய்யவில்லை. கேட்டால், மத்திய அரசு மீது பழிசுமத்துகிறார். மத்திய, மாநில ஆட்சியில் இருப்பது தி.மு.க., தான்.மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு, இல்லை என்கிறார்.  கர்நாடகாவை விட, தமிழகத்தில் குறைவு தான் என்கிறார். மின் கட்டண உயர்வு, ஆந்திராவை விட இங்கு குறைவு தான் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தை விலையைக் காட்டி, கருணாநிதி ஏமாற்றுகிறார்.

தமிழக விவசாயத்தை, காவிரியைக் கழித்து விட்டு கணக்கிட முடியாது. மொத்த பாசனத்தில் 85 சதவீதம் காவிரியை நம்பித் தான் உள்ளது. வறண்ட காவிரியை வற்ற வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. 1924ம் ஆண்டு கர்நாடகா - தமிழகத்துக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. 50 ஆண்டுகள் அமலில் இருந்த அந்த ஒப்பந்தத்தை, 1974ம் ஆண்டு புதுப்பிக்க தவறி விட்டார் கருணாநிதி. ஒப்பந்தம் காலாவதியாவதை உணர்ந்த கர்நாடகா அரசு, அணைகளைக் கட்டியது. அதை தடுக்க கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதுவே, காவிரி விஷயத்தில் அவர் செய்த முதல் துரோகம்.அதன்பின், இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது என 1971ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இது, இரண்டாவது துரோகம். 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது மூன்றாவது துரோகம். ஐகோர்ட் உத்தரவின்படி 1990ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் சேர்த்து 192 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என, 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது நான்காவது துரோகம்.

அதற்குக் காரணம், கர்நாடகாவில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான வணிக சம்ராஜ்யங்களை பாதுகாக்க, கர்நாடகாவை விரோதிக்க விரும்பாமல், தமிழக விவசாயிகளின் உரிமைகளை துளியும் கவலையில்லாமல், தாரை வார்த்துள்ளார். நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சை, பாலைவனமாக மாறியுள்ளது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.  கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தர, கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

இடையில், பல முறை பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கே அம்மாநில முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், காவிரி நீரைக் கேட்கவில்லை. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு, காவிரியில் நீர் திறந்து விடக் கேட்டு, கர்நாடகா முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகே, மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இருந்திருக்காது.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு : ஜெயலலிதா சூசகம் : காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு குறித்து ஜெயலலிதா பேசியதாவது:"தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு' என்று நான் சொல்வதற்கு கருணாநிதி கோபம் அடைகிறார். தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி முறையில் ஆட்சி அமைக்க மொத்தம் 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால், சபாநாயகர் தவிர தற்போது தி.மு.க.,விடம் 99 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மை இல்லாத தி.மு.க., தான் அரசு அமைத்து ஆட்சி நடத்துகிறது. இதை எப்படி மெஜாரிட்டி அரசு என்று சொல்லமுடியும்? காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதால் தான் கருணாநிதி அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடிய "பரந்த' மனம் கருணாநிதிக்கு இல்லை. ஆகையால், காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வினருக்கும் மட்டும் அமைச்சர் பதவிகளை அவர் மத்திய அரசிடம் வற்புறுத்தி பெற்றுக் கொண்டுவிட்டார்.
கருணாநிதியை எப்படி அழைப்பது? திருச்சியில் அம்மா விளக்கம் :  திருச்சியில் அ.இ அ.தி.மு.க., சார்பில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் புரட்சிதலைவி அம்மா பேசியதாவது:தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தியாவில் பெருமை மிக்க மாநிலமாக விளங்கிய தமிழகம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு கீழாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும், அதை மாற்றும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. 1,000 ரூபாய் கொடுக்கிறார்களே என ஏமாந்து ஓட்டு போட்டு விட வேண்டாம். குடும்ப ஆட்சியை வீழ்த்தி புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆளும் கட்சியை கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எங்காவது எதிர்க்கட்சியை கண்டித்து ஆளும் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு கேவலம் இங்கு நடந்துள்ளது. 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது என்மீது ஏராளமான பொய் வழக்குகளை போட்டனர். 12 வழக்குகளில் இருந்து வெளிவந்து விட்டேன். நீதிமன்றமே தீர்ப்பு அளித்து விட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று கருணாநிதியால் போடப்பட்டது. பெங்களுரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை ஏழு ஆண்டுகளாக இழுத்தடித்தது கருணாநிதி தான். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால், வழக்கை நான் தாமதப்படுத்துவதாக கூறி வருகிறார். நான் ஆமாம் என்று சொல்ல வேண்டும், சிறைக்குள் சென்று தண்டனை அனுபவிக்க வேண்டும், தேர்தலில் போட்டியில்லாமல் ஜெயித்து விடலாம் என கருணாநிதி நினைக்கிறார்.இப்படிப்பட்டவர் முதல்வராக இருக்கலாமா? கருணாநிதி பெயரை சொல்லுவதால் வேதனைப்படுகிறாராம்.

கோவையில் அ.இ.அ.தி.மு.க., கூட்டத்தை கண்டு மிரண்டு போய், பிரியாணி, மதுபாட்டில் கொடுத்து கூட்டத்தை கூட்டினார். 30 சதவீத அளவு கூட்டம் கூட அங்கு இல்லை. ஜெயலலிதா என்ற பெயரை என் பெற்றோர் எனக்கு வைத்தனர். நேரு, இந்திரா, காமராஜர் பெயரை எல்லாம் பெயர் சொல்லி தான் அழைக்கிறோம்.ஜெயலலிதா சொல்லும் போது கோபம் வருகிறது. எம்.ஜி.ஆர்., அழைத்த பட்டப்பெயர் சொல்லித் தான் இனி கூப்பிடப்போகிறேன். அது தான் தீயசக்தி. இனி, "திருக்குவளை தீயசக்தி' என்று தான் அழைப்பேன்.இவ்வாறு அம்மா பேசினார்.தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியை கண்டித்து ஜெயலலிதா கண்டன கோஷங்கள் முழங்க, கட்சியினர் அவற்றை திரும்பக் கூறினர்.


கருணாநிதிக்கு புது பெயர் அம்மா சூட்டினார்

 திருச்சியில் நடைபெற்ற அஇஅதிமுக., பொது கூட்டத்தில் பேசிய பொது செயலாளர்டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் முதல்வர் கருணாநிதிக்கு புதுபெயர் சூட்டினார். கூட்டத்தில் அம்மா பேசியதாவது: ஒருவருக்கு பெயர் என்பது மற்றொருவர் தன்னை அழைக்க வேண்டும் என்பதற்காக சூட்டப்படுகிறது. அதன்படி தான் தி.மு.க., கட்சி தலைவரை கருணாநிதி
என்று அழைத்தேன் ஆனால் அப்படி அழைப்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதால்
எம்.ஜி.ஆர் சூட்டிய தீயசக்தி என்ற பெயரை சூட்டுவோம்.இனிமேல் அவரை திருக்குவளை தீயசக்தி என்றே அழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த அ.இ.அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: கோவையை மிஞ்சியது

திருச்சி: அ.இ.அ.தி.மு.க., நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தால் கோவை நகரம் குலுங்கியது போல், நேற்று திருச்சியில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தால் குவிந்த தொண்டர்கள் வெள்ளத்தில் திருச்சி ஸ்தம்பித்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் மைனாரிட்டி  தி.மு.க., அரசு மீது சரமாரியான குறறச்சாட்டுகளை அடுக்கினார்.

அ.இ.அ.தி.மு.க., சார்பில், கடந்த மாதம் 13ம் தேதி கோவையில் பல்வேறு பிரச்னையை வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு திரண்ட கூட்டத்தால் கோவை குலுங்கியது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆளும் தி.மு.க.,வுக்கு "கிலி'யை ஏற்படுத்தியதாக அ.தி.மு.க.,வினர் கூறி வந்தனர்.  அதே இடத்தில் தி.மு.க., போட்டிக் கூட்டம் நடத்தியது. இதற்கிடையே, திருச்சியில்  கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் புரட்சிதலைவி அம்மா அறிவித்தார். அதன்படி, பொன்மலை "ஜி' கார்னர் மைதானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டனப் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கார், வேன், பஸ், லாரிகளில் அ.இ.அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்தனர். பகல் 11 மணிக்கே கூட்டம் நடந்த மைதானத்துக்கு தொண்டர்கள் சாரை, சாரையாக அணிவகுத்து வரத்துவங்கினர்.

ஆர்ப்பாட்டம் நடந்த மைதானத்துக்கு எதிரே சென்னை - மதுரை நான்குவழிச் சாலை முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க.,வினர் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்தே வந்தனர். மாலை 4 மணிக்கு தான் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்தாலும் மதியம் ஒரு மணிக்கே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் "ஜி' கார்னர் மைதானத்தில் குவியத் துவங்கினர். கூட்டத்துக்கு வரும் தொண்டர்களின் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் வாகனம் நிறுத்த இடமில்லாததால், சென்னை - மதுரை நான்குவழிச் சாலை முழுவதும் வாகனங்களை நிறுத்தினர். முதலில் 2 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேரம் செல்ல செல்ல பல கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் முதல் பழைய பால் பண்ணை மற்றும் மன்னார்புரம் நால்ரோடு வரை உள்ள நான்குவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளில் அ.இ.அ.தி.மு.க.,வினர் வந்த வேன், கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலையிலிருந்தே திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தனி விமானம் மூலம் நேற்று மாலை 4.15 மணிக்கு திருச்சி வந்த அம்மா, கூட்டம் நடந்த "ஜி' கார்னர் மைதானத்துக்கு வர ஒரு மணி நேரம் ஆனது. வழிநெடுகிலும் கட்சியினரும், மக்களும் அம்மா வந்த வாகனத்தை வரவேற்று, ஆர்ப்பரித்தனர். அ.இ.அ.தி.மு.க., தொண்டர்களுடன் பொதுமக்களும் மைதானம், நான்குவழிச்சாலை, பாலம் என அனைத்து இடங்களிலும் நிரம்பி வழிந்தனர்.

 சரியாக 5.25 மணிக்கு அம்மா மேடையேறினார். 5.35 மணிக்கு பேசத் துவங்கிய அவர்,மைனாரிட்டி தி.மு.க., அரசையும், முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும் சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.  7.15 மணிக்கு தன் பேச்சை முடித்தார். காவிரி பிரச்சனை, விலைவாசி உயர்வு, மண் கொள்ளை, உள்ளூர் அமைச்சர் நேருவின் நடவடிக்கை, ஹார்லிக்ஸ் கொள்ளை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவரது பேச்சைக் கேட்ட கட்சியினர் பலத்த ஆரவாரம் செய்தனர்.

Friday, August 13, 2010

திருச்சியில் இன்று அம்மா தலைமையில் ஆர்பாட்டம்.


மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து திருச்சியில் அ.இ.அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் , பிற்பகல் சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்திலும், தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலியிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையிலும், புரட்சிதலைவி அம்மா  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே நடந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் லக்ச்சகனக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்அம்மா  நேரடியாக கலந்து கொள்வதால் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.இந்நிலையில் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிப்பு, மணல் கொள்ளை, போலி மருந்து, போலி உணவு, போலி டாக்டர், போலி மதிப்பெண் சான்றிதழ், சட்டம், ஒழுங்கு அவல நிலை, விலைவாசி உயர்வுக்கு காரணமான மைனாரிட்டி  தி.மு.க., அரசை கண்டித்து, திருச்சியில் இன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கும் அம்மா அவர்கள் , இன்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான முக்கிய அறிவிப்புகளை அம்மா  வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Wednesday, August 11, 2010

கோவை, திருச்சியையடுத்து... மதுரைக்கு அம்மா , வருகை

மதுரை : கோவை, திருச்சியை அடுத்து மதுரைக்கு அடுத்த மாதம் மத்தியில்(செப்., 18-21) டாக்டர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் வரவுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.,நிரந்தர  பொதுச் செயலாளர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஆளுங்கட்சியின் குறைகளை பட்டியலிடுகிறார். திருச்சியில் வரும் 14ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதையடுத்து, மதுரை, நெல்லைக்கு அம்மா  செல்ல திட்டமிட்டுள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செப்., 18 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. மைதானத்தை மாநகராட்சி வழக்க மறுத்ததையடுத்து அ.இ. அ.தி.மு.க., ஐகோர்ட்டில் மனு செய்து அனுமதி பெற்றது. இவ்வழக்கில் ஆஜரான முன்னாள் சபாநாயகரும், மூத்த வக்கீலுமான பி.எச். பாண்டியன், இக்கூட்டத்தில் அம்மா , கலந்து கொள்ளயிருப்பதாக குறிப்பிட்டார். செப்., 18 முதல் 21ம் தேதிக்குள்ளாக ஏதாவது ஒரு தேதியில் அம்மா வர வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அ.இ.அ.தி.மு.க., தலைமை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என அ.இ.அ.தி.மு.க., வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.


Monday, August 9, 2010

டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: அம்மா குற்றச்சாட்டு

"வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படுமென, டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர் விரோத போக்கையே காட்டுகிறது' என, 
டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் மொத்த வருவாயில், 25 சதவீத வருவாயை ஈட்டித் தரும், 30 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் படும் துன்பங்கள், துயரங்கள் சொல்லி மாளாது. எனது ஆட்சி காலத்தில் பணியமர்த்தப்பட்டார்கள் என்பதற்காக, விசாரணையின்றி பணி நீக்கம் போன்ற இன்னல்களுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.பின்னர், லஞ்சம் கொடுத்தால் தான் மீண்டும் வேலை என்ற மோசமான நிலை நிலவுகிறது. ஏழு ஆண்டுகள் பணியாற்றியும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்கள் விஷயத்தில், எந்த ஒரு தொழிலாளர் நலச் சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை.டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு, வரும் 11ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களை அழைத்து பேசாமல், "பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என, டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர் விரோத போக்கையே காட்டுகிறது.மறுபுறம், "வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம்' என தொழிலாளர்களை அச்சுறுத்தி கையெழுத்து வாங்கும் நடவடிக்கைகளிலும், புதிய ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.பணியாளர்களை நேரடியாக சென்று மிரட்டும் நடவடிக்கையில் தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.மைனாரிட்டி  தி.மு.க., அரசின் இந்த தொழிலாளர் விரோத போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் முறையான செயல்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.


Sunday, August 8, 2010

துணைவேந்தரை தாக்கிய தி.மு.க., எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை


திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் காளியப்பன் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனடாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை:திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த விழா துவங்குவதற்கு சற்று முன், திருநெல்வேலி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜா துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, விழாவில் கலந்து கொள்ள இருந்த துணைவேந்தர் காளியப்பனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.இதை தடுக்கச் சென்ற உடற்கல்வி இயக்குனர் தேவதாசையும் தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதன் பின், விழா அரங்கத்திற்கு வந்த மாலைராஜா, சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியேறிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துணைவேந்தரிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, "நான் மீட்டிங்கில் இருக்கிறேன்; அப்புறம் பேசுகிறேன்' என மிகுந்த அச்சத்தோடும், பதற்றத்தோடும் கூறியிருக்கிறார். இதிலிருந்தே தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

கடந்த 2008ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இலவச கலர், "டிவி' வழங்கும் நிகழ்ச்சியின் போது, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த தனி துணை கலெக்டரை, தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் சிலர் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.அரசு கேபிள் நிறுவனத்திலும், எல்காட் நிறுவனத்திலும் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். தற்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த துணைவேந்தர் தாக்கப்படுகிறார்.

இச்சம்பவத்தை முதல்வரோ அல்லது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வரோ கண்டிக்கவில்லை.அரசு அதிகாரிகள், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எனது ஆட்சிக் காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்திலும் சரி, உரிய மரியாதையுடன் கவுரவமாக நடத்தப்பட்டனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. காளியப்பன், தேவதாஸ் தாக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். இது போன்ற தாக்குதல் இனியும் தொடர்ந்தால், அ.இ.அ.தி.மு.க., போராட்டக் களத்தில் குதிக்கும். மாலைராஜா மீது உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்.

Thursday, August 5, 2010

மனிதநேய கட்சி நிர்வாகிகள் அம்மாவுடன் சந்திப்பு...


 இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்களை  அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ், மனித நேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாரூண்ரஷீத் ஆகியோர் நேற்று அம்மாவை நேரில் சந்தித்து, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, August 4, 2010

உமாசங்கர் பணி நீக்கம் அரசின் பழிவாங்கும் போக்கு :

 "உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார் .

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலி ஜாதி சான்றிதழை கொடுத்து, அரசு பணியில் சேர்ந்து விட்டார் என்ற காரணத்தை காட்டி, ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்து சான்றிதழ்களை சரிபார்ப்பதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு. அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின் பழி வாங்கப்பட்டு அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டது. அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 400 கோடி ரூபாய் என்னவாயிற்று? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழி வாங்கப்படுகிறார்? இதை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

Sunday, August 1, 2010

அ.இ.அ.தி.மு.க., நிதியுதவி

அ.இ.அ.தி.மு.கவை  சேர்ந்த இருவர் சொந்தமாக தொழில்புரிய, இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் நிதியுதவி வழங்கினார்.அ.இ. அ . தி . மு . க . , தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டம்,சூரப்பள்ளம் கிராமத்தைசேர்ந்த ஆதிதிராவிடர் காலனி கிளைச் செயலர்மதியழகன் மற்றும் கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன் மிகவும் வறுமை நிலையில்இருப்பதாகவும், தொழில்செய்து வாழ்க்கை நடத்துவதற்கு நிதியுதவி அளிக்குமாறு புரட்சிதலைவி அம்மாவிடம் மனுக்களைஅளித்து இருந்தனர்.அவர்கள் இருவரையும் தனது இல்லத்திற்குவரவழைத்து, மதியழகனுக்கு32 ஆயிரம்ரூபாய், சுந்தரேசனுக்கு டீகடை வைக்க 34 ஆயிரத்து 850 ரூபாயும் அம்மா அவர்கள் வழங்கினார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாத்தூரில் நாளை அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்...


"சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத மைனாரிட்டி தி.மு.க., அரசைக் கண்டித்து, விருதுநகர் அ.இ.அ.தி.மு.க., சார்பில், சாத்தூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த ஆண்டு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்படுவதற்கு முன், படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என படந்தால், குருலிங்காபுரம் சுற்றியுள்ள 16 கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இந்த கோரிக்கையை மைனாரிட்டி  தி.மு.க., அரசு கண்டு கொள்ளவில்லை.நான்கு வழிச் சாலையைக் கடந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றுக்கு மக்கள் செல்லும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது.கடந்த ஒன்றரை ஆண்டில் நடந்த சாலை விபத்தில் மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்; 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதில், தற்காலிக ஏற்பாடாக படந்தால் சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாத்தூர் அரசு பொது மருத்துவமனை மின்சாரம், படுக்கை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுகிறது.

தி.மு.க., அமைச்சர், புதிதாக மருத்துவமனை கட்டப்படும் என்று சொல்லியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சாத்தூர் மக்களின் அடிப்படை தேவைகளை உடனே செய்து தர வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க., சார்பில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள்ளார்.