எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, August 14, 2010

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த அ.இ.அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: கோவையை மிஞ்சியது

திருச்சி: அ.இ.அ.தி.மு.க., நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தால் கோவை நகரம் குலுங்கியது போல், நேற்று திருச்சியில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தால் குவிந்த தொண்டர்கள் வெள்ளத்தில் திருச்சி ஸ்தம்பித்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் மைனாரிட்டி  தி.மு.க., அரசு மீது சரமாரியான குறறச்சாட்டுகளை அடுக்கினார்.

அ.இ.அ.தி.மு.க., சார்பில், கடந்த மாதம் 13ம் தேதி கோவையில் பல்வேறு பிரச்னையை வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு திரண்ட கூட்டத்தால் கோவை குலுங்கியது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆளும் தி.மு.க.,வுக்கு "கிலி'யை ஏற்படுத்தியதாக அ.தி.மு.க.,வினர் கூறி வந்தனர்.  அதே இடத்தில் தி.மு.க., போட்டிக் கூட்டம் நடத்தியது. இதற்கிடையே, திருச்சியில்  கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் புரட்சிதலைவி அம்மா அறிவித்தார். அதன்படி, பொன்மலை "ஜி' கார்னர் மைதானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டனப் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கார், வேன், பஸ், லாரிகளில் அ.இ.அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்தனர். பகல் 11 மணிக்கே கூட்டம் நடந்த மைதானத்துக்கு தொண்டர்கள் சாரை, சாரையாக அணிவகுத்து வரத்துவங்கினர்.

ஆர்ப்பாட்டம் நடந்த மைதானத்துக்கு எதிரே சென்னை - மதுரை நான்குவழிச் சாலை முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க.,வினர் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்தே வந்தனர். மாலை 4 மணிக்கு தான் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்தாலும் மதியம் ஒரு மணிக்கே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் "ஜி' கார்னர் மைதானத்தில் குவியத் துவங்கினர். கூட்டத்துக்கு வரும் தொண்டர்களின் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் வாகனம் நிறுத்த இடமில்லாததால், சென்னை - மதுரை நான்குவழிச் சாலை முழுவதும் வாகனங்களை நிறுத்தினர். முதலில் 2 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேரம் செல்ல செல்ல பல கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் முதல் பழைய பால் பண்ணை மற்றும் மன்னார்புரம் நால்ரோடு வரை உள்ள நான்குவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளில் அ.இ.அ.தி.மு.க.,வினர் வந்த வேன், கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலையிலிருந்தே திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தனி விமானம் மூலம் நேற்று மாலை 4.15 மணிக்கு திருச்சி வந்த அம்மா, கூட்டம் நடந்த "ஜி' கார்னர் மைதானத்துக்கு வர ஒரு மணி நேரம் ஆனது. வழிநெடுகிலும் கட்சியினரும், மக்களும் அம்மா வந்த வாகனத்தை வரவேற்று, ஆர்ப்பரித்தனர். அ.இ.அ.தி.மு.க., தொண்டர்களுடன் பொதுமக்களும் மைதானம், நான்குவழிச்சாலை, பாலம் என அனைத்து இடங்களிலும் நிரம்பி வழிந்தனர்.

 சரியாக 5.25 மணிக்கு அம்மா மேடையேறினார். 5.35 மணிக்கு பேசத் துவங்கிய அவர்,மைனாரிட்டி தி.மு.க., அரசையும், முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும் சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.  7.15 மணிக்கு தன் பேச்சை முடித்தார். காவிரி பிரச்சனை, விலைவாசி உயர்வு, மண் கொள்ளை, உள்ளூர் அமைச்சர் நேருவின் நடவடிக்கை, ஹார்லிக்ஸ் கொள்ளை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவரது பேச்சைக் கேட்ட கட்சியினர் பலத்த ஆரவாரம் செய்தனர்.

No comments:

Post a Comment