திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் காளியப்பன் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனடாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த விழா துவங்குவதற்கு சற்று முன், திருநெல்வேலி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜா துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, விழாவில் கலந்து கொள்ள இருந்த துணைவேந்தர் காளியப்பனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.இதை தடுக்கச் சென்ற உடற்கல்வி இயக்குனர் தேவதாசையும் தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதன் பின், விழா அரங்கத்திற்கு வந்த மாலைராஜா, சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியேறிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துணைவேந்தரிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, "நான் மீட்டிங்கில் இருக்கிறேன்; அப்புறம் பேசுகிறேன்' என மிகுந்த அச்சத்தோடும், பதற்றத்தோடும் கூறியிருக்கிறார். இதிலிருந்தே தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.
கடந்த 2008ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இலவச கலர், "டிவி' வழங்கும் நிகழ்ச்சியின் போது, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த தனி துணை கலெக்டரை, தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் சிலர் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.அரசு கேபிள் நிறுவனத்திலும், எல்காட் நிறுவனத்திலும் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். தற்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த துணைவேந்தர் தாக்கப்படுகிறார்.
இச்சம்பவத்தை முதல்வரோ அல்லது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வரோ கண்டிக்கவில்லை.அரசு அதிகாரிகள், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எனது ஆட்சிக் காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்திலும் சரி, உரிய மரியாதையுடன் கவுரவமாக நடத்தப்பட்டனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. காளியப்பன், தேவதாஸ் தாக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். இது போன்ற தாக்குதல் இனியும் தொடர்ந்தால், அ.இ.அ.தி.மு.க., போராட்டக் களத்தில் குதிக்கும். மாலைராஜா மீது உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment