அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த இருவர் சொந்தமாக தொழில்புரிய, இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் நிதியுதவி வழங்கினார்.அ.இ. அ . தி . மு . க . , தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டம்,சூரப்பள்ளம் கிராமத்தைசேர்ந்த ஆதிதிராவிடர் காலனி கிளைச் செயலர்மதியழகன் மற்றும் கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன் மிகவும் வறுமை நிலையில்இருப்பதாகவும், தொழில்செய்து வாழ்க்கை நடத்துவதற்கு நிதியுதவி அளிக்குமாறு புரட்சிதலைவி அம்மாவிடம் மனுக்களைஅளித்து இருந்தனர்.அவர்கள் இருவரையும் தனது இல்லத்திற்குவரவழைத்து, மதியழகனுக்கு32 ஆயிரம்ரூபாய், சுந்தரேசனுக்கு டீகடை வைக்க 34 ஆயிரத்து 850 ரூபாயும் அம்மா அவர்கள் வழங்கினார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment