எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, May 26, 2016

வாக்காளர்களுக்கு முதலைமைச்சர் நன்றி


‘எனது தலைமையிலான அரசு மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும்’ வாக்காளர்களுக்கு முதலைமைச்சர்  நன்றி
12:29 AM | மே 27, 2016
சென்னை,எனது தலைமையிலான அரசு மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்று தமிழக முதல்-அமைச்சர் அம்மா தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அ.தி.மு.க.வுக்கு வழங்கி உள்ளனர்.“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.வாக்காளர்களுக்கு நன்றிதமிழக மக்கள் எனது தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது நன்றி உரித்தாகுக. அ.தி.மு.க வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும்இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அளித்ததைப் போல, தொடர் வெற்றியை எனக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல எனது தலைமையிலான புதிய அரசு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்ற உறுதிமொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment