எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, July 6, 2010

"கருணாநிதியின் மனப்பான்மையை காங்., புரிந்து கொள்ள வேண்டும்' ...

 ""காங்கிரஸ் கட்சியில் உள்ள கருணாநிதியின் நண்பர்கள், தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரின் உண்மையான மனப்பான்மை குறித்து புரிந்து கொள்ள வேண்டும், '' என டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ராஜிவ் கொலையை கருணாநிதி அங்கீகரித்துவிட்டார் என்ற உண்மையையும், ராஜிவ் கொலையாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எனது கோரிக்கையால் கருணாநிதி அடைந்த ஆத்திரம் இன்றுவரை அடங்கவில்லை என்பதையும், தன் அறிக்கை மூலம் கருணாநிதி  வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள கருணாநிதியின் நண்பர்கள், தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரின் உண்மையான மனப்பான்மை குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதியை போல், தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நட்புறவுடன் பேசிப் பழகும் பழக்கமும், அவர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்கும் பழக்கமும் எனக்கு இயற்கையாகவே கிடையாது.போர் நடக்கும்போது, பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மைதான். இதனுடன், இலங்கையில் வேண்டுமென்றே பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், போர் முடிந்துவிட்டது என கருணாநிதியால் அறிவிக்கப்பட்டபின், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்ததையும், கருணாநிதி ஒப்பிட்டுப் பேசுகிறார்.இதன் மூலம், இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்ததை  நியாயப்படுத்துகிறார்.

1980ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டுமென்பதற்காக விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆரும், நானும் ஆதரவு அளித்து வந்தோம்.ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும், கடைசியாக முன்னாள் பிரதமரையும் கொலை செய்தததற்குப் பிறகு, விடுதலைப் போராட்ட அமைப்பு பயங்கரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.அந்த தருணத்தில் இருந்து, புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன்; கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை.

இன்றைக்குக்கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன் சரணடைந்த புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன்.இவ்வாறு தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்கு தனது மகளையும், மூத்த தி.மு.க., கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து, அவர்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களுடன் நாடு திரும்பி வந்தததற்கு காரணமான கருணாநிதியின் நடவடிக்கையை கண்டிக்கிறேன்.நூற்றுக்கணக்கான தமிழ்ச் செம்மொழி மாநாடுகளை உலகம் முழுவதும் நடத்தினாலும், கருணாநிதியின் துரோகச் செயலை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment