எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, July 27, 2010

கோர்ட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிக்கு எதிரான செயல்

:"கோர்ட்டிலுள்ள ஒரு பொருள் குறித்து கோர்ட்டில் தான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு, கோர்ட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது நீதிக்கு எதிரான செயல்' என டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:அரசியல் ரீதியாக என்னைப் பழிவாங்க வேண்டுமென்ற தீய எண்ணத்தில், சிறுதாவூர் என்ற இடத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை நான் அபகரித்து வீடு கட்டிக் கொண்டுவிட்டதாக தெரிவித்து, அது குறித்து விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை 2006ம் ஆண்டுமைனாரிட்டி  தி.மு.க., அரசு அமைத்தது.இதை விசாரித்த விசாரணை கமிஷன், இந்த நிலத்திற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தீர்ப்பளித்தது. விசாரணை கமிஷன் அறிக்கையை இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்தார் கருணாநிதி. கடைசியில் வேறு வழியின்றி, அதை வெளியிட்டார்.இதன் பின்னரும் எனக்கு எதிராக தி.மு.க., சார்பில் சிறுதாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க., அரசால் என் மீது புனையப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து, தி.மு.க., இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தேர்தலுக்கு முன், சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்கு எப்படியாவது தண்டனை பெற்று தர வேண்டும். என்னை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும், என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு பகீரத முயற்சி செய்தார்.

அது நிறைவேறாமல் போகவே, மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத வெத்து வேட்டு போராட்டத்தை தற்போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். அன்பழகன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கைத் தொடர்ந்து, இந்த வழக்கை கிட்டத்தட்ட 7 ஆண்டு காலம் நிறுத்தி வைத்த கருணாநிதி, தற்போது நான் காலம் கடத்துகிறேன் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது.இது போன்றதொரு போராட்டத்தை கருணாநிதியின் அனுமதியோடு ஸ்டாலின் அறிவித்திருப்பது கோர்ட் அவமதிக்கும் செயல்.

மேலும் கோர்ட் நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவது போல் அமைந்துள்ளது. முல்லை பெரியாறு பிரச்னை குறித்து, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அறிவித்த பின், கேரள அரசுக்கு எதிரான பொதுக்கூட்டம் என அதை மாற்றினார். கடைசியில் அதையும் நடத்த அருகதை இல்லாத கருணாநிதிக்கு, தனிப்பட்ட முறையில் என் மீது புனையப்பட்ட வழக்கிற்காக தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?நடுவர் மன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கருணாநிதி தயாரா?இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்

No comments:

Post a Comment