மைனாரிட்டி தி.மு.க., ஆட்சிக்கு எதிராக கோவையை தொடர்ந்து, திருச்சியில் டாகடர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் தலைமையில், அடுத்த மாதம் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து அம்மா வெளியிட்ட அறிக்கை:நீரின்றி, மின்சாரமின்றி வேளாண் தொழிலை செய்ய முடியாமல், விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தலால், கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலை செய்ய முடியாமல் மீனவர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர்.காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் மைனாரிட்டி தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டு, உணவு, பஞ்சம் ஏற்படும் நிலை மை உருவாகி இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.கடலில் 12 மைல் தாண்டி, தமிழக மீனவர்கள் மீன் பிடித்தல் கூடாது; அப்படி பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம், 3 மாத சிறைத் தண்டனை போன்ற கடல் மீன் தொழில் ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வடிவு, தமிழக மீனவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் வாழ்வோடு விளையாடியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தும், மணல் கொள்கையை மைனாரிட்டி தி.மு.க., அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு என்னும் கொடிய அரக்கனிடம் மக்களை சிக்க வைத்துள்ள மைனாரிட்டி தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.இ.அ.தி.மு.க., சார்பில் அடுத்த மாதம் 24ம் தேதி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment