சென்னை:"தமிழக மீனவர்களின் உயிர், உடைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசு மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, சென்னை கலெக்டர் அலுவலகம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:மீனவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டிய மைனாரிட்டி தி.மு.க., அரசு, அவர்களது வாழ்வாதாரத்தையே சீர்குலைத்துள்ளது.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதலில், நாகப்பட்டினம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன், கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இறந்தவரின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயை அளித்துவிட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தன்னுடைய பணியை கமுக்கமாக முடித்துக் கொண்டார் கருணாநிதி.
தமிழக மீனவர்கள் பிரச்னையில் உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காத சூழ்நிலையில், ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று எச்சரிக்கை விடுத்தால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.தன் சொந்தப் பிரச்னை என்றால் மத்திய அரசை மிரட்டும் கருணாநிதி, தமிழக மீனவர்கள் பிரச்னை என்றால் ஏன் அடக்கி வாசிக்கிறார்.தமிழக மீனவர்களின் உயிர், உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாமல், கடிதம் எழுதிக் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க., அரசைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க., வடசென்னை மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலர் சேகர்பாபு முன்னிலையில், ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் சனிக்கிழமையன்று (இன்று) சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment