அ.இ.அ.தி.மு.க., சார்பில் திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 10 நாட்கள் முன்னதாக வரும் 14ம் தேதியன்றே நடைபெறுமென அறிவித்துள்ளது.இது குறித்து அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை, மணல் கொள்ளை, நீராதாரம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகள் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க., சார்பில், வரும் 24ம் தேதி திருச்சியில் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.அந்த ஆர்ப்பாட்டம், 10 நாட்கள் முன்னதாக, வரும் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
No comments:
Post a Comment