எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, July 11, 2010

நாளை அ.இ.அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்

கோவை:பெட்ரோல், டீசல், கெரசின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கோவையில் நாளை அ.இ.அ.தி.மு.க., சார்பில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில், இதய தெய்வம் டாகடர் புரட்சிதலைவி அம்மா  பங்கேற்கிறார்.சமீபத்தில் மத்திய அரசு, பெட்ரோல், டீசல், கெரசின் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அ.இ.அ.தி.மு.க., சார்பில் நாளை (13ம் தேதி) கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.இதற்கென பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்பாடுகளை, அ.தி.மு.க., பொருளாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன் ஆகியோர் கோவையில் தங்கியிருந்து கவனித்து வருகின்றனர்.


கண்டன பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு, குடிநீர், உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அ.இ.அ.தி.மு.க., நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் நாளை பகல் 12.15 மணிக்கு அம்மா கோவை வருகிறார். விமான நிலையத்திலிருந்து கார் மூலம் அவினாசி ரோட்டிலுள்ள வ.உ.சி., பூங்கா மைதானம் வரும் அவர், அங்கு நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் 45 நிமிடம் பேசுகிறார். பின், மீண்டும் அவினாசி ரோடு வழியாக, கார் மூலம் விமான நிலையத்தை அடைந்து, சென்னை செல்கிறார்..

அனைவரும் வருக வருக......................................................

No comments:

Post a Comment