எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, April 11, 2010

குன்னூரில் இன்று அ.இஅ தி.மு.க., ஆர்ப்பாட்டம்


சென்னை:'நீலகிரி மாவட்டத்தில் ஊனமுற்றோருக்கான அரசு சலுகைகளை வழங் காதமைனாரிட்டி  தி.மு.க., அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் குன்னூரில் நடத்தப்படும்' என்று, புரட்சித்தலைவி அம்மா அறிவித்துள் ளார்.அம்மா அவர்கள்  வெளியிட்ட அறிக்கை:மனித பிறவியில் உறுப்பு இழந்தவர்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதும், அவர்களுக்கு சம உரிமையையும், சம வாய்ப்பையும் பெற்றுத் தருவதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலை வாய்ப் பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம், 1981ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டது.

ஊனமுற்றோர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற அடிப்படையில், 1992ம் ஆண்டு, ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென ஒரு தனித் துறையை நான் ஏற்படுத்தினேன். கடந்த 1994ம் ஆண்டில் முதன் முறையாக அ.இ.அ.தி.மு.க., அரசு தான் ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது.அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஊனமுற்றோருக்கென்று சிறப்பான பல திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்துவதில், தமிழக அரசு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது. அதன் பயனாக கடந்த 2004ம் ஆண்டில், ஊனமுற்றோர் நாளன்று ஜனாதிபதி வழங்கிய 58 தேசிய விருதுகளில் 14 விருதுகளை தமிழகம் பெற்றது.கடந்த 2005ம் ஆண்டு பார்வையற்றோர் நலனுக்காகவும் மற்றும் பிற ஊனமுற்றோர் நலனுக்காகவும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த நான்கு ஆண்டுகளாக மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியில் ஊனமுற்றோருக்கான சலுகைகள் அவர்களை சென்றடையவில்லை. உதாரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஊனமுற்றோருக்கான சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.தொகுப்பு வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்படுவதில்லை. மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் ஊனமுற்றோர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. ஊனமுற்றோருக்கான சலுகைகளை வழங்காத மைனாரிட்டி  தி.மு.க., அரசை கண்டித்தும், அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் உடனடியாக கிடைக்க நடவடிக்க எடுக்க வலியுறுத்தியும்,அ.இ. அ.தி.மு.க., சார்பில் இன்று காலை 11 மணிக்கு குன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment