ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் மஸ்தான்(38).அ.இ. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் நேற்று பந்த் என்பதால் தனது சைக்கிள் கடையை மூடிவிட்டு காந்திரோடில் அமர்ந்திருந்தார். பகல் 1.05 மணிக்கு அம்மா வாழ்க, அம்மா வாழ்க என கத்தியபடி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்து அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மஸ்தான். மரணச் செய்தி என்னை வேதனையில் ஆழ்த்துகிறது. அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!
Tuesday, April 27, 2010
Sunday, April 18, 2010
நெய்வேலியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சிலை: அம்மா திறப்பு
நெய்வேலி:நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா நேற்று திறந்து வைத்தார்.நெய்வேலி வட்டம் 9ல் கடந்த 1991ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது. பல்வேறு சிக்கல் காரணமாக சிலை திறக்கப்படாமல், மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை திறக்க கடந்த மாதம் அம்மா உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று நடந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அ.இ.அ.தி.மு.க.,நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா , சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் மாலை 3 மணிக்கு நெய்வேலிக்கு வந்தார். அங்கிருந்து காரில் சென்று வட்டம் 9ல் நிறுவப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்தார்.பின், தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டைக் கண்டித்து நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
Friday, April 16, 2010
அ.இ.அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டம்: 27ம் தேதி 'பந்த்'தில் பங்கேற்க முடிவு
சென்னை:'மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 27ம் தேதி நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்தில், தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என, அ.இ.அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் புரச்சித்தலைவி அம்மா அவர்களின் போயஸ் தோட்டம் இல்லத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. காலை 11.10 மணிக்கு துவங்கிய அக்கூட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது. ஜெயலலிதா தலைமை வகித்தார்.
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், பார்வர்டு கட்சி சார்பில் கதிரவன், மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அ.இ.அ.தி.மு.க., சார்பில் செங்கோட்டையன், தம்பிதுரை பங்கேற்றனர். வரும் 27ம் தேதி நடக்கவுள்ள கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த கூட்டணிக் கட்சிகள் அக்கூட்டத்தில் முடிவெடுத்தன.
கூட்டம் முடிந்த பின், வெளியே வந்த வைகோ மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைபிடித்து வரும் தாராளமய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, அத்தியாவசியப் பண்டங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையும், மத்திய அரசு உயர்த்தியது. நூல் விலை உயர்ந்ததன் காரணமாக, ஜவுளித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரத்திற்கு அளித்து வந்த மானியம் 300 கோடி ரூபாயை குறைத்ததோடு உர விலை மீதான கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கியதால் உரவிலையும் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
மொத்தத்தில் இந்த விலைவாசி உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதித் துள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.அ.இ.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் கடந்த 12ம் தேதி டில்லியில் கூடி, விலைவாசி உயர்வுக்கு காரணமான ஐ.மு., கூட்டணி அரசை எதிர்த்து வரும் 27ம் தேதி தேசிய அளவில் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.வரும் 27ம் தேதி நடக்கவுள்ள கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் எதிர்காலத்திலும் நிச்சயம் தொடரும்.இவ்வாறு வைகோ கூறினார்.
Thursday, April 15, 2010
அம்மா இன்று மதுரை வருகை..
மதுரை:தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அ.இ.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜ் சமீபத்தில் குடும்பத்துடன் விபத்தில் சிக்கினார்.இதில், அவர் உட்பட இரண்டு பேர் மதுரை மாட்டுத்தாவணி ப்ரீத்தி மருத்துவமனையிலும், மூன்று பேர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களை நலம் விசாரிக்க, இன்று மதியம் 12.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மதுரை வருகிறார்.
Wednesday, April 14, 2010
தலைமைக்கழக பேச்சாளர்கள் அம்மாவின் திட்டம்.
இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் இருந்து தலைமை கழக பேச்சாளர்களை உருவாக்கஅ.இ. அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அ.இ. அ.தி.மு.க., வின் முக்கிய அமைப்பான இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையில் ஏராளமான படித்த இளைஞர்களும், இளம் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், நாட்டு நிலவரங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இவர்கள் நன்றாக அறிந்துள்ளனர். திறமையான இந்த இளைஞர்களை வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அதிக அளவில் பயன்படுத்தஅ.இ.அ.தி.மு.க நிரந்தர பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திட்டமிட்டுள்ளார்.......
Tuesday, April 13, 2010
Sunday, April 11, 2010
குன்னூரில் இன்று அ.இஅ தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை:'நீலகிரி மாவட்டத்தில் ஊனமுற்றோருக்கான அரசு சலுகைகளை வழங் காதமைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் குன்னூரில் நடத்தப்படும்' என்று, புரட்சித்தலைவி அம்மா அறிவித்துள் ளார்.அம்மா அவர்கள் வெளியிட்ட அறிக்கை:மனித பிறவியில் உறுப்பு இழந்தவர்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதும், அவர்களுக்கு சம உரிமையையும், சம வாய்ப்பையும் பெற்றுத் தருவதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலை வாய்ப் பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம், 1981ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டது.
ஊனமுற்றோர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற அடிப்படையில், 1992ம் ஆண்டு, ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென ஒரு தனித் துறையை நான் ஏற்படுத்தினேன். கடந்த 1994ம் ஆண்டில் முதன் முறையாக அ.இ.அ.தி.மு.க., அரசு தான் ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது.அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஊனமுற்றோருக்கென்று சிறப்பான பல திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்துவதில், தமிழக அரசு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது. அதன் பயனாக கடந்த 2004ம் ஆண்டில், ஊனமுற்றோர் நாளன்று ஜனாதிபதி வழங்கிய 58 தேசிய விருதுகளில் 14 விருதுகளை தமிழகம் பெற்றது.கடந்த 2005ம் ஆண்டு பார்வையற்றோர் நலனுக்காகவும் மற்றும் பிற ஊனமுற்றோர் நலனுக்காகவும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
கடந்த நான்கு ஆண்டுகளாக மைனாரிட்டி தி.மு.க., ஆட்சியில் ஊனமுற்றோருக்கான சலுகைகள் அவர்களை சென்றடையவில்லை. உதாரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஊனமுற்றோருக்கான சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.தொகுப்பு வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்படுவதில்லை. மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் ஊனமுற்றோர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. ஊனமுற்றோருக்கான சலுகைகளை வழங்காத மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்தும், அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் உடனடியாக கிடைக்க நடவடிக்க எடுக்க வலியுறுத்தியும்,அ.இ. அ.தி.மு.க., சார்பில் இன்று காலை 11 மணிக்கு குன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.
Saturday, April 10, 2010
மைனாரிட்டி .மு.க., அரசைக் கண்டித்துஅ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை:'மைனாரிட்டி தி.மு.க அரசின் பட்ஜெட் மற்றும் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன' என, டாகடர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த அம்மாவின் அறிக்கை:விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் மைனாரிட்டி தி.மு.க அரசின், பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அ.தி.மு.க., சார்பில்,மைனாரிட்டி தி.மு.க., அரசின் பட்ஜெட் மற்றும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தொகுதிக்கு இரண்டு இடங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இக்கூட்டங்களில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று பேசவுள்ளனர்.இவ்வாறு அம்மாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)