"என்னை கலந்தாலோசிக்காமல், என் கருத்தை கேட்காமல், தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம், தகவல் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே அரசு சிதைத்து இருக்கிறது' என, டாக்டர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் உரிமை சட்டப்படி, தலைமை தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முதல்வரால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைச்சர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.அ.இ.அ.தி.மு.க., ஆட்சியில் தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்பட்ட போது, கருணாநிதி தனக்கு பதிலாக, அன்பழகனை அனுப்பி வைத்ததாகவும், ஆனால், தற்போது நான் எனது சார்பில் யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. நான் முதல்வராக இருந்த போது நடந்த கூட்டத்தில், கருணாநிதி தனக்கு பதிலாக அன்பழகனை அனுப்பி வைக்கவில்லை. அன்றைய எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தான், அன்பழகன் கலந்து கொண்டார்.
தற்போது நடந்த குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக, குழுவின் உறுப்பினர் என்ற முறையில், தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை அரசிடம் நான் கோரியிருந்தேன். ஆனால், அரசு அந்த விவரங்களை எனக்கு அளிக்கவில்லை. எனவே, எந்த விதமான விவரமும் இன்றி கூட்டத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களை தெரிவிக்க முடியாது என்பதால் தான், அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை.நான் கோரிய விவரங்களை அரசு அளித்திருக்குமானால், அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருப்பேன். மைனாரிட்டி தி.மு.க., அரசின் பாரபட்சமான நடவடிக்கை தான், நான் பங்கேற்காததற்கு காரணம்.அரசு தரப்பில் தலைமை தகவல் ஆணையரை ஏற்கனவே முடிவு செய்து விட்டு, சம்பிரதாயத்திற்காக என்னை அழைத்தது போல் தான் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாகிறது; இது சர்ச்சைக்கு வழி வகுக்கும் செயல்.வெளிப்படையான முறையில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த குழுவில் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். என்னை கலந்தாலோசிக்காமல், என் கருத்தை கேட்காமல், தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம் இந்த சட்டத்தின் நோக்கத்தையே அரசு சிதைத்து இருக்கிறது.ஊடகங்கள் மற்றும் தகவல் உரிமை ஆர்வலர்களின் யூகத்திற்கு ஏற்ப, தலைமை தகவல் ஆணையரை நியமித்ததன் மூலம், இந்த நியமனம் ஒளிவு மறைவற்ற முறையில், வெளிப்படையாக நடக்கவில்லை என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார். அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பான செயல்.இவ்வாறு அம்மா தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment