சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி எம்.எல்.ஏ., அன்பழகனிடம், அவரது உடல் நலம் குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் நேற்று விசாரித்தார். சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில், புதுச்சேரி மாநில செயலர் அன்பழகன் எம்.எல்.ஏ., சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் அ.தி.மு.க., பொதுச் செயலாளர்அம்மா , மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகனிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அங்கிருந்த அன்பழகன் குடும்பத்தினரிடம், அம்மா நலம் விசாரித்தார்.
No comments:
Post a Comment