எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!
Tuesday, February 16, 2010
ஆடம்பரம் வேண்டாம் அம்மா அறிவிப்பு...
அரிசி,சர்க்கரை,பருப்பு,வகைகள்,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 ஆண்டாக ஏறிக் கொண்டே போகின்றன.இதனால் ஏழை,நடுத்தர மக்கள் அல்லல்படுகின்றனர்.தொடரும் மின்வெட்டு,மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழில் உற்ப்பத்தி குறைந்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில் வளர்ச்சிக்கும் எதிர் மறையான சூழ்நிலைபிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம். தமிழகத்தில் நிலவுகிறது.கொசுத் தொல்லை மக்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருக்கிறது.இதனால் புதுப்புது நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளதோடு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.மின் கட்டணம் உயரப் போகிறது என்பன போன்ற செய்திகள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளன.தமிழக மக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும் மக்கள் மனது வைத்தால் மாறும் இந்தச் சூழ்நிலையில் என் பிறந்தநாளன்று ஆடம்பரமான கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என்று அதிமுகவினரை கேட்டுக் கொள்கிறேன்.பிறந்தநாளன்று என்னை சந்திப்பதற்காக வருவதை தவிர்த்து ஏழைகளின் வாட்டத்தை சிறிதளவாவது போக்கும் வகையில் அவர்களுக்கு பொருளுதவி,மருத்துவ உதவி,அன்னதானம் ரத்ததானம் போன்ற நற்காரியங்களில் அதிமுகவினர் ஏடுபட்டால் அது எனக்கு மிகுந்த மகிழையைத் தரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment