எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 16, 2010

மைனாரிட்டி தி .மு.க., ஆட்சியில் சர்க்கரை உற்பத்தி இறங்குமுகம்: அம்மா குற்றச்சாட்டு



சென்னை : "எனது ஆட்சியில் ஏறுமுகத்திலிருந்த சர்க்கரை உற்பத்தி, தி.மு.க., ஆட்சியில் இறங்குமுகத்தில்சென்று கொண்டிருக்கிறது' என, டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள் ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற கன்டன ஆர்ப்பாட்டத்தைக் கண்டு பொறுக்க முடியாத கருணாநிதி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். கருணாநிதியின் அறிக்கையை பார்க்கும் போது, "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த...' என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. எனது அறிக்கையை முழுமையாக படிக்காமல் கருணாநிதி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். மாநில அரசு ஆதார விலை யை அறிவிக்கக் கூடாது என, தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்து தடை ஆணை பெற உதவியாக இருந்தவர் கருணாநிதி.


கடந்த 2004ம் ஆண்டு வரை எனது ஆட்சிக்காலத்தில், கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படவில்லை என கூறுவது குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகிற கதையாக இருக்கிறது. எனது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, தடை ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்கலாம் என்ற உத்தரவும் சுப்ரீம் கோர்ட்டில் பிறப்பிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலையான 795 ரூபாயுடன், மாநில அரசின் ஆதார விலையான 219 ரூபாயை சேர்த்து, கரும்புக்கு கடன் ஒன்றுக்கு 1,014 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. வாகன வாடகையை வழங்கவும், ஆலை நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதையெல்லாம் கரும்பு விவசாயிகள் நன்கு அறிவர். இது பொறுக்க முடியாமல், தனியார் ஆலைகளிலே தர முடியுமா, தனியார் ஆலைகளிலே தருவதற்கு அரசு வலியுறுத்துமா என்றெல்லாம் கூறி, திசை திருப்பும் முயற்சியில் ஈடுப்பட்டவர் தான் கருணாநிதி.


குறைவான சர்க்கரை உற்பத்திக்கு, 1996, 2001ம் ஆண்டின் கருணாநிதி ஆட்சியின் தாக்கம் தான் காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 2005, 2006 ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு 21.38 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2006, 2007ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை அளவு 25 லட்சத்து 39 ஆயிரம் டன் ஆகும். எனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கை காரணமாக, சர்க்கரை உற்பத்தி 2006-2007ம் ஆண்டு அதிகரித்து இருக்கிறது. பின், 2007, 2008ம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி 16.16 லட்சம் டன்னாகவும் குறைந்து இருக்கிறது. இதிலிருந்து எனது ஆட்சிக்காலத்தில் ஏறுமுகத்தில் இருந்த சர்க்கரை உற்பத்தி, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இறங்கு முகத்தில் சென்று கொண்டிருப்பதை யா ரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.


எனது தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தையும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில் எனக்குள்ள ஆதரவையும் வரவேற்பையும் கண்டு, கிலி அடைந்து, இது போன்ற அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். முதல்வர் பதவிக்கே மிகப் பெரிய இழுக்கை ஏற்படுத்தியதுடன் கரும்பு விவசாயிகளையும் ஏமாற்ற முனைந்திருக்கிறார். இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment