பிரதமர் மன்மோகன் சிங்கை அ.தி.மு.க., எம்.பி..க்கள் 15 பேர், நேற்று சந்தித்துப் பேசினர். டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. அப்போது, அ.தி.மு.க.,பொது செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தரப்பில் எழுதப்பட்டிருந்த கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் அளித்தனர்.
அதில், தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொள்முதல் விலை போதாது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் மற்ற மாநிலங்களில் இருப்பதை விட கரும்புக்கு அளிக்கப்படும் ஆதாரவிலை குறைவாக இருப்பதையும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சுட்டிக்காட்டனர்.
எனவே, தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாது மாநில அரசையும் கரும்புக்கு கூடுதல் ஆதார விலை அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக, சந்திப்புக்கு பின்னர், நிருபர்களிடம் பேசியபோது தம்பிதுரை மற்றும் மைத்ரேயன் ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment