எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, February 13, 2010

அம்மாவின் அவசப்பேச்சு....



விழுப்புரம் : கரும்பு டன் ஒன்றிற்கு ஆதார விலையாக 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் விழுப்புரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கைகளில் கரும்புகளுடன் விவசாயிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் குவிந்ததால், விழுப்புரம் நகரம் குலுங்கியது. ""கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால், அந்த ஜூவாலை ஆட்சியாளர்களை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும், கரும்பு டன்னுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று, ஆர்ப்பாட்டத்தில் அம்மா அவர்கள்  ஆவேசமாக பேசினார்.


 நேற்று, அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில், காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் அம்மா அவர்கள்  வந்திறங்கினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து அம்மாவை வரவேற்றனர். அங்கிருந்து காரில் புறப்பட்ட அம்மா அவர்கள் , ஹெலிபேடு அருகே அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலுக்கு சென்றார்.  10.45க்கு ஆர்ப்பாட்ட இடத்திற்கு காரில் புறப்பட்டார். 11 மணிக்கு ஆர்ப்பாட்ட மேடை அமைக்கப்பட்டிருந்த விழுப்புரம் நகராட்சி மைதானத்தை அடைந்தார்.


விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் அதிகமான கட்சித் தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, தம்பிதுரை, செம்மலை, மாநில நிர்வாகிகள் சுலோச்சனா சம்பத், சின்னசாமி, கடலூர் மாவட்ட செயலர்கள் சம்பத், அருண்மொழித் தேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பகல் 12.20க்கு மீண்டும் ஹெலிகாப்டரில் அம்மா அவர்கள்  புறப்பட்டார்.

கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால்...? ""கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால் அந்த ஜூவாலை ஆட்சியாளர்களை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும்,'' என்று, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவசமாக  பேசினார்.


கரும்பு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில், அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அம்மா அவர்கள் பேசியதாவது: கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு வழங்க மறுக்கிறது. இதனால், கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடியே தமிழகத்தில் கேள்விக் குறியாகி உள்ளது. இதன் விளைவாக, சாமானிய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு சர்க்கரை விலை விஷம் போல உயர்ந்து கொண்டுள்ளது. 1996ம் ஆண்டு தேர்தலுக்கு முன், கரும்பு டன் 1,000 ரூபாய் விலை வழங்கப்படும் என்று கருணாநிதி வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை. கரும்புக்கு மாநில அளவில் ஆதார விலையை அறிவிக்கக் கூடாது என்று தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து தடை ஆணை பெற்றது.


நான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, எனது முயற்சியால் தமிழக அரசு தலைமை வக்கீலை சுப்ரீம் கோர்ட்டில் வாதாட செய்து, மாநில அரசு ஆதார விலையை அறிவிக்கலாம் என்ற ஆணை பெறப்பட்டது. கடந்த 2005-06ம் ஆண்டுக்கான அரவைப் பருவத்திற்கு ஆதார விலையாக மத்திய அரசு அறிவித்த, 795 ரூபாயுடன் மாநில அரசின் ஆதார விலையாக 219 ரூபாயும் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு 1,014 ரூபாய் வழங்க உத்தரவிட்டேன். வாகன வாடகையை அந்தந்த ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதன் முதலாக உத்தரவு பிறப்பித்தது எனது ஆட்சிக் காலத்தில் தான். இதனால், வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை 12 ரூபாய் 50 பைசாவில் இருந்து 14 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு கரும்புக்கான ஆதார விலையை 503 ரூபாய் 40 பைசா என்ற அளவில் உயர்த்தி இருக்கிறது. ஆனால் தி.மு.க., அரசு 80 ரூபாய் அளவுக்கு மாநில அரசின் ஆதார விலையை குறைத்துள்ளது. எனது ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 219 ரூபாயை 139 ரூபாயாக குறைத்தவர் கருணாநிதி தான்.


மைனாரிட்டி தி.மு.க., அரசின் இதுபோன்ற விவசாய விரோத நடவடிக்கைகள் காரணமாகவும், கூலி உயர்வு, விவசாய இடுபொருட்கள் விலை உயர்வு, கடுமையான மின்வெட்டு, போக்குவரத்து செலவு உயர்வு போன்றவை காரணமாகவும் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2005-2006ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 21.38 லட்சம் டன்னாக இருந்தது. 2008-09ல் 16.16 லட்சம் டன்னாக குறைந் துள்ளது கரும்பு விவசாயிகளின் மனநிலையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. தற்போது சர்க்கரை விலை 44 ரூபாய் உயர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கரும்புக்கு கூடுதல் ஆதார விலை தரப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் கரும்புக்கு 2,100 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. கரும்புக்கான ஆதார விலை பிரச்னையில் மாநில அரசு தலையிடக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டபோது கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுத்த இயக்கம் அ.தி.மு.க., தான். அதன் விளைவாக அந்த உத்தரவையே மத்திய அரசு வாபஸ் பெற்றது. விளைச்சல் குறைவில்லாமல் இருந்தால் தான் விலைவாசி கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக கடத்தல், பதுக்கல் போன்றவை தான் மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியில் கொடிக் கட்டி பறக்கிறது.


நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் வகையில்,மைனாரிட்டி  தி.மு.க., அரசின் செயல்பாடு உள்ளது. கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எவ்வளவோ சிரமப்பட்டு, கடன் வாங்கி, நகைகளை விற்று, கரும்பு சாகுபடி செய்து விளைந்த கரும்புகளை வெட்டுவதற்குரிய ஆணையை, உரிய காலத்தில் வழங்கவில்லை.மைனாரிட்டி  தி.மு.க, அரசு, கரும்பு விவசாயிகளை பழிவாங்கி உள்ளது. கரும்பை வெட்ட முடியாமல் தீ வைத்து விவசாயிகள் கொளுத்தி உள்ளனர். அப்போது, கரும்பு விவசாயிகள் எப்படி எல்லாம் வருத்தம், வேதனைப் பட்டு இருப்பர். விவசாயிகளுக்கு கருணாநிதி பதில் கூறியே ஆக வேண்டும். விவசாயிகள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீர் துளிகளும் மைனாரிட்டி  தி.மு.க., அரசின் முடிவு நெருங்கி கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால் அந்த ஜூவாலை மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியாளர்களை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும். எனவே, கரும்பு விவசாயிகளுக்கு நமது முழுமையான ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறுஅம்மா அவர்கள் அவசமாக  பேசினார்.


எம்.ஜி.ஆர்., பாட்டு; அம்மா  அசத்தல்:அம்மா அவர்கள் , பேச்சுக்கு இடையே, விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் எம்.ஜி.ஆர்., பாடிய, "கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி... விவசாயி...' என்ற பாடலை ராகத்துடன் பாடினார். அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் பலத்த கைத்தட்டல் மூலம் தங்களது வரவேற்பை தெரிவித்தனர். "கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுத்து அறப்போராட்டம் நடத்தும் என்னை பார்த்து கிண்டலாக சிரிக்கின்றனர். தி.மு.க.,வினருக்கு சொல்லிக் கொள்கிறேன்' என்று கூறிய அம்மா அவர்கள்  அடுத்த பாடலை பாடினார்.


"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு... நல்ல தீர்ப்பை மக்கள் சொல்லும் நாள் வரும்போது அங்கே சிரிப்பவர் யார்... அழுபவர் யார்... தெரியும் அப்போது...' என்று ஆவேசமாக பாடினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பல்வேறு கோஷங்களை அம்மா அவர்கள்  எழுப்பினார். அப்போது, "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...' என்ற பாடலை உரக்க கூறினார்.

No comments:

Post a Comment