எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!
Sunday, January 17, 2010
தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ....
அ.இ.தி.மு.க நிறுவனர் பரத் ரத்னா புரட்சி தலைவர் M.G.R அவர்களின் 93 ஆம் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது .இந்த விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமை செயலகத்தில் உள்ள M.G.R சிலைக்கு கழக பொது செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.முன்னால் அமைசர்கள் ஓ.பன்னீர் செல்வம் ,செங்கோட்டையன் ,பொன்னையன் ,ஜெயகுமார் ,உட்பட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருதனர் .இடை தொடர்ந்து M.G.R 93 வது பிறந்தநாள் மலரை அம்மா அவர்கள் வெளியிட எம்.ஜி.ஆர் மன்ற கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தமிழ்மகன் உசேன் பெற்றுக்கொண்டார் . தொடர்ந்து விபத்தில் இறந்த தொண்டர்கள் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர் பின்னர் அ.இ.தி.மு.க இளைஞர் பாசறை சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற ஊனமுற்ற மாணவிக்கு இலவச கம்ப்யூட்டர் அம்மா வழங்கினர். இளைஞர் பாசறை மூலம் உங்களுக்கு இலவச பயிற்சி அளிக்கபடுகிறது இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளபடுதிக்கொள்ள வேண்டும் உங்கள் எதிர் காலம் சிறப்பாக விளங்க என்னுடைய வாழ்த்துக்கள் என அம்மா அவர்கள் பேசினார்.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment