காமன் வெல்த் போட்டியில் பங்கு பெறுவதற்கு பணமின்றி தவித்த வில்வித்தை வீரர் ஸ்ரீதர்க்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை அம்மா அவர்கள் வழங்கினர்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த வில்வித்தை வீரர் ஸ்ரீதர் 2008 மற்றும் 2009 ஆண்டு தேசிய அளவில் நட்டந்த வில்வித்தை போட்டியில் பல பிரிவுகளில் தங்க பாதகங்கள் வென்றவர்.2009 ஆம் நடந்த ஆசிய நாடுகளுக்கான வில்வித்தை போட்டியிலும் தங்கம் மற்றும் வெண்கல பாதகங்கள் பெற்றிருக்கிறார்.டில்லியில் காமன்வெல்த் போட்டி விரைவில் நடைபெறயுள்ளது .இதற்கான பரிசோதனை போட்டிகள் சமீபத்தில் நடந்தன இதில் வில்வித்தை வீரர் இரவல் வாங்கி போட்டியில் கலந்து கொண்டு அதிக மார்க் பெற்று உள்ளார்.இந்த நிலையில் வில்வித்தை விளையாட்டுக்கு தேவையான வில் உள்பட்ட உபகரணங்கள் வாங்க பணமின்றி ஸ்ரீதர் சிரமபடுவதாக தனியார் டிவியில் செய்தி வெளியானது இடை அறிந்த அம்மா அவர்கள் உடனடியாக வில்வித்தை வீரர் ஸ்ரீதரை நேரில் வரவழைத்து வில்வித்தை பயிற்சிக்கு தேவையான உபகரங்கள் வாங்குவதற்கு 2 லட்சம் ரூபாய்க்கான செக்கை வழங்கினர்.மேலும் காமன்வெல்த் போட்டி உட்பட சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஸ்ரீதரை அம்மா அவர்கள் வாழ்த்தினர்.......
No comments:
Post a Comment