எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, December 18, 2011

சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ரூ.1 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு
முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ரூ.1 லட்சம் நிதியுதவி
காயமடைந்த இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க ஆணை


சென்னை, டிச. 18-
சாலைவிபத்தில் மரணமடைந்த ஒருவர்
குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க
உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் காயமடைந்த
இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் அறிக்கை வருமாறு:-
காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர்
வட்டம், வேங்கைவாசல் கிராமத்தைச் சேர்ந்த
பக்தவச்சலம் என்பவரின் மகன் ரமேஷ்
என்பவர் மீது 16.12.2011 அன்று மணல் ஏற்றிக்
கொண்டு வந்த லாரி மோதியதில் ரமேஷ்
சம்பவ இடத்திலேய உயிரிழந்தார் என்ற
செதியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.
இந்தச் சாலை விபத்தில் அகால மரண
மடைந்த ரமேஷ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த
இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
மேலும், இத்துயரச் சம்பவத்தில் இரண்டு
பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை
அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இருவருக்கும்
நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை
அதிகாரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட
நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் காயமடைந்துள்ள இவர்கள்
விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற
என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த விபத்தில் காலமான ரமேஷ்
குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது
நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும்,
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்று வரும் நாராயணன் மற்றும் தனசேகரன்
ஆகியோருக்கு தலா 25,000/-ரூபாயும் முதல
மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறுமுதலமைச்சர்புரட்சித்தலைவிஅம்மா
அவர்கள் தமது அறிக்கையில்-கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment