சென்னை, டிச. 21-
தமிழ்நாட்டில் ரூ. 686 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு பல்லுயிர்
பெருக்கப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:- நாட்டின் வளம், காட்டின் வளத்தில் அமைந்துள்ளது என்பதையும், காடுகளை வளர்த்து கண்போல் காப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி பெருகும் என்பதையும் உணர்ந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள், மனித சமுதாயம் உயிர்
வாழ்-வதற்கு மாசற்ற சுற்றுச்சூழலை ஏற்ப
டுத்தித் தரும் வனங்கள் முறையாக பாது-
காக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக
உள்ளார். வனப்பகுதிகளைச் சார்ந்துள்ள
கிராம மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை
நிறைவேற்றிடும் வகையிலும், தமிழகத்திலுள்ள
வன வளத்தினை அதிகரிக்கும் வகையிலும்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்-
களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜப்பான்
பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவி-
யுடன், 2005-2006 முதல் 2012-2013 முடிய
செயல்படும் தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டம்
மிமி என்ற எட்டாண்டு திட்டம் ஒன்று
ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது செயல்படுத்
தப்பட்டு வருகிறது. இத் திட்டமானது 2012-13
ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில்
?தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு
மற்றும் பசுமைத் திட்டம்?
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின்
நிதியுதவியுடன் 2011-12 முதல் 2018&2019 வரை-
யிலான எட்டு ஆண்டுகளில் 686 கோடியே
28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்-
படுத்திட முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
உயிரினங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு
செயல்படும் முறையினை மேம்படுத்தும் வகை
யிலும், தகுதியான மேலாண்மையால் பல்
லுயிர் பெருக்கப் பாதுகாப்பினை பலப்படுத்
தும் வகையிலும், வனப்பரப்பிற்கு வெளியே
மரங்கள் நடப்படும்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முக்கிய
பங்கினை அடைதல், இசைவிணக்கமான
பொருளாதார மேம்பாட்டினை அடைதல்
ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக்
கொண்டு செயல்படும் இத் திட்டத்தில்,
பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு, இயற்கை வளத்தை அதிகரித்த நிறுவனத்
திறனை மேம்படுத்துதல் ஆலோசனை சேவைஆகியவை சிறப்பு அம்சங்களாகும்.
உயர்நிலை அதிகாரக் குழு
இத் திட்டம் தமிழ்நாடு காடுவளர்ப்புத்
திட்டம் பகுதி மி மற்றும் பகுதி மிமி ஆகிய
திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்ட
வனப் பகுதிகள் நீங்கலாக, இதர வனப்பகுதிகளி
ல் 2011-12 முதல் 2018&2019 வரையிலான
எட்டு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்ப
டும்.
இத் திட்டத்தின் பணிகளை கண்காணிப்பதற்கா
க திட்ட மேலாண்மை பிரிவு ஒன்றினை
ஏற்படுத்த, முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், இத் திட்டம் சம்பந்தமாக, செயல்-
படுத்தப்பட உள்ள பணிகள் குறித்து முடி
வெடுக்க, தமிழக அரசின் தலைமைச் செயலா
ளர் அவர்கள் தலைமையில் ஓர் உயர்நிலை
அதிகாரக் குழு ஏற்படுத்தப்படும்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை
நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும்
பசுமைத் திட்டத்தில் பல்லுயிர் பெருக்கப்
பாதுகாப்பு திட்டத்திற்காக 93 கோடியே 46
லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், இயற்கை
வளத்தை அதிகரித்தலுக்கு 182 கோடியே 54
லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், நிறுவனத்
திறனை மேம்படுத்துவதற்காக 260 கோடியே
2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், ஆலோசனை
சேவைகளுக்காக 6 கோடியே 93 லட்சத்து 37
ஆயிரம் ரூபாயும், இதர பணிகளுக்காக 143
கோடியே 30 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும்
ஆக மொத்தம் 686 கோடியே 28 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்-
தப்படும்.
உடனடி இழப்பீடு
வன உயிரின மற்றும் உயிர்பன்மை பாது-
காப்பு பணிகள், சவால்கள் நிறைந்தவையாக
உள்ளன. மக்கட் தொகை பெருக்கத்தாலும்,
தொழில் மயமாக்கலாலும், விலங்குகளின்
இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் உணவு, நீர் மற்றும் வாழ்விடம்,
ஆகிய-வற்றிற்காக பெரும்பாலும் வன
விலங்குகள் இடம் பெயர்ந்து, மனிதர்கள்
வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்-
கள் வனவிலங்குகளை எதிர்க்கொள்ளும் சூழ்-
நிலை உருவாகிறது. இதனால் விலங்குகளின்
வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை
விரும்பி உண்μம் பயிர்களை காட்டுப் பகுதிகளி
லேயே வளர்ப்பது, காடுகளின் எல்லை
ஓரமாக தடைகளை அமைப்பது, கிராம மக்க-
ளின் திறனை மேம்படுத்துவது, விழிப்புணர்வு
ஏற்படுத்துவது, மனித உயிருக்கும், விவசாய
பயிர்களுக்கும் உடமைகளுக்கும் விலங்கு-
களால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக
இழப்பீடு வழங்கு-வது போன்ற பல்முனை
அம்சங்களை உள்ளடக்கிய செயல்திட்டத்-
தினை அமல்படுத்த முதலமைச்சர் புரட்சித்-
தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளா
ர்கள்.
No comments:
Post a Comment