முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியதன்-பேரில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக
அவசர கால நடவடிக்கை திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு
அமைக்கப்படுவதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுத்தி வைத்து
உத்தரவிட்டுள்ளது. இது முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்
முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு:- முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தில்
நிலநடுக்கம் அல்லது வெள்ள ஆபத்து அல்லது இரண்டும் சேர்ந்து ஏற்படக் கூடிய
வாய்ப்பு மாதிரிகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகள்
எடுப்பதற்கான அவசரகால நடவடிக்கைகள் திட்டம் ஒன்றை உருவாக்க ஒரு நிபுணர்
குழுவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாரத பிரதமர் அவர்களுக்கு
20.12.2011 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்கள். தொழிலாளர் நல வாரியங்களில்
பதிவு செய்துள்ள உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகார குழு பல்வேறு
ஆய்வுகளை நடத்தி-யுள்ளது என்றும், மேலும் சில சோதனைகளை நடத்தி வருகிறது
என்றும் குறிப்பிட்டு, இக்குழுவின் அறிக்கை வரும் பிப்ரவரி மாதத்தில்
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
என்றும், முல்லை பெரியாறு அணை விவகாரம் உச்சநீதி-மன்றத்திலும் அணையின்
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உச்சநீதி-மன்றத்தால்
அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் குழு முன்பும் நிலுவையில் உள்ள நிலையில், தேசிய
பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அவசர கால நடவடிக்கை திட்டம் உருவாக்க
ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு தேவையற்றது என்றும் எடுத்துக்கூறி அந்த
உத்தரவைத் திரும்பப் பெறுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணயத்திற்கு
உத்தர-விடவேண்டும் என்று பாரதப் பிரதமரை அந்தக் கடிதத்தில் கேட்டுக்
கொண்டார்கள். பாரதப் பிரதமரை 25.12.2011 அன்று சென்னையில் சந்தித்து அளித்த
கோரிக்கை மனுவிலும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இதுப்பற்றி
எடுத்துக் கூறியுள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகார குழு
உச்சநீதிமன்றத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் அவசரகால
நடவடிக்கை திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்-படுவதை
நிறுத்தி வைத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்பொழுது
உத்தர-விட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment