கிறிஸ்தவர்களின் புனித நகரமான ஜெருசலேம்
சென்றுவர நிதியுதவி வழங்க அரசாணை பிறப்பித்த முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்
கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலஉதவிகள் வழங்கிபேசினார்கள்.
ஒட்டுமொத்த கிறிஸ்தவ இன மக்களையும் ஈர்த்த அந்த விழாவில் ?கிறிஸ்தவ மக்கள்
மேற்கொள்ளும் இஸ்ரேல் புனித யாத்திரைக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்
என்ற கோரிக்கை கழக ஆட்சி அமைந்ததும் உடனடியாக நிறைவேற்றி வைக்கப்படும்?
என்கிற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்கள். இறையருளால் தமிழக மக்களின்
ஒட்டுமொத்த ஆதரவுடன் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சரான கழகப்
பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
கழகத்தின்சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள்.
கடந்த 20-ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள இறை மக்கள் புத்துணர்வு
மையத்தில் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ்
விழாவில் பேசும்போது,?கிறிஸ்தவர்களின் புனித நகரமான ஜெருசலேம் சென்றுவர
அரசு நிதியுதவி அளிக்கும் என்றும் முதல் கட்டமாக 500 பேருக்கு ஜெருசலேம்
சென்றுவர ஏற்பாடு செய்யப்படும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். அதனை
செயல்படுத்தும் வகையில் அடுத்த 5 நாட்களில் அரசாணையும்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ஜெருசலேம் சென்றுவர ரூ.20 ஆயிரம்
வீதம் 500 பேருக்கு ரூ.1 கோடி நிதியும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த
செய்தி கிறிஸ்தவ மக்களுக்கு பேரானந்தத்தைத் தந்துள்ளது. பல்வேறு
மட்டங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன. பலரும் தங்கள்
உளமார்ந்த நன்றியையும், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களுக்கு
தெரிவித்துள்ளனர்.முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து
கிறிஸ்தவப் பிரிவினரையும் உள்ளடக்கி ஜெருசலேம் சென்று வர நிதியுதவி
அளிக்கும் திட்டம் செயல் படுத்தப்படும் என அறிவித்த தும், அதற்கான அரசாணை
பிறப்பித்ததும், பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளையும் மகிழ்ச்சியடைய
வைத்துள்ளது. ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களின் வரவேற் பையும்,
வாழ்த்துகளையும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
பெற்றுள்ளார்கள். பல ஆண்டு காலமாக இந்த கோரிக்கையை பல்வேறு கிறிஸ்தவ
அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் எந்த பயனும் இல்லை. இது கிறிஸ்தவ
மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், தான் முதல்வரானதும்
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று கடந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் வாக்கு
அளித்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இப்போதுஅதைநிறைவேற்றி
இருப்பது கிறிஸ்தவ மக்கள் இதயங்களில் தேன் சுவையாய் இனிக்கிறது. வரலாற்று
சிறப்புமிக்க இந்தஆணையின்மூலம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள்கிறிஸ்தவர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள். அம்மா அவர்களின்
ஆட்சிக்கு கிறிஸ்தவ மக்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் என கிறிஸ்தவ
மக்கள் நன்றி பெருக்கோடு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment