எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, December 18, 2011

வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க, 400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்க ரூ.80 கோடி மானியம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

சென்னை, டிச. 18-
வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க
400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மானியம்
வீதம் ரூ.80 கோடி வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-வேளாண்மை தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும். உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், வேளாண் வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது. அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் உணவு பாதுகாப்பு அளிப்பதை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை யிலான அரசு தனது குறிக்கோளாக கொண்டுள்ளது.மண்வளசீர்கேடு, குறைந்து வரும் நீர்வள ஆதாரங்கள், கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்கு தேவையான உட்கட்டமைப்பு
வசதிகளுக்கு போதிய முதலீடு அளிக்காதது,
புது உத்திகளை பயன்படுத்தாமை, போதிய
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள்
மேற்கொள்ளாத நிலை மற்றும்இடுபொருட்களின்
விலை ஏற்றம் ஆகிய காரணங்களால் வேளாண்
தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை
அறிந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள், இதனைகளையும் பொருட்டு ஆக்கப்
பூர்வமானநடவடிக்கைகளைஎடுத்துவருகிறார்கள்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெரிய
நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும்
வளர்ந்து வருவதால், பெரும்பாலான விவசாயத்
தொழிலாளர்கள் தொழில் சார்ந்த லாபகரமான
வேலை செய்ய நகரங்களுக்கு குடிபெயர்ந்து
செல்கின்றனர். இதன் காரணமாக விவசாயத்
திற்கு தேவையான வேலையாட்கள் இல்லாத
நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
மேலும், பயிர் செய்வதற்கான உற்பத்தி செலவுகள்
அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனை
நன்கு உணர்ந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் வருங்காலத்தில் உணவு
உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில்,
வேளாண் இயந்திரங்களை கொள்முதல்
செய்வதற்காக ஒவ்வொரு தொடக்கவேளாண்மை
கூட்டுறவு சங்கங்களுக்கும் மானியமாக 20
லட்சம் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்
களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்
ளார்கள்.
இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும்
வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில்
விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனை
பயன்படுத்தி, விவசாயிகள் அதிக வேலையாட்
கள் தேவையின்றி, இயந்திரங்கள் மூலம் அதிக
சிரமமின்றி விவசாயப் பணிகளை விரைவாக
செய்ய இயலும். மேலும் நவீன தொழில்
நுட்பங்களை பயன்படுத்துவதனால் குறைந்த
நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி
கிடைக்க வழிவகுக்கும்.
அரசின் இந்த வேளாண் இயந்திரமயமாக்கல்
நடவடிக்கைகளினால், வேளாண் பொருட்
களின் உற்பத்தி அதிகமாவதுடன், விவசாயிகள்
வருமானமும் அதிகரித்து, கிராமப்புற பொருளா
தாரம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment