ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பில், மாநில
அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில், லோக் ஆயுக்தாவை சேர்த்திருப்பது
உள்ளிட்ட காரணங்களால் அறிமுக நிலையிலேயே லோக்பால் மசோதாவை
எதிர்ப்பதாககழகம் தெரிவித்துள்ளது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர்
கொண்டு வரப் பட்டிருப்பதையும் கழகம் கண்டித்துள்ளது. நாட்டின்
பல்வேறுதுறைகளில் ஊழலை ஒழித் திடலோக்பால்அமைப்பை உருவாக்க வேண்டுமென பிரபல
சமூக சேவகர் அன்னா ஹசாரே உள்ளிட்டோர் நாடு தழுவிய போராட்டங்களை மேற்
கொண்டதை அடுத்து, நிர்ப்பந்தத்திற்கு ஆளான மத்திய அரசு, அதற்கான பணிகளை
மேற்கொண்டது. இது தொடர்பான வரைவு மசோதா, ஊழலை தடுப்பதற்கான அம்சங்களை
கொண்டிருக்கவில்லை என ஹசாரே மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர்,
இதில் திருத்தம் கொண்டு வரவேண்டுமெனஏற்கெனவே வலியுறுத்தினர். இதனால்
ஏற்பட்ட நீண்ட இழு பறிக்குப்பிறகு, வியாழக் கிழமை பிற்பகலில் லோக் பால்
மசோதா நாடாளு மன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற
விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி இம்மசோதாவை தாக்கல் செய்தார். இதைத்
தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கிய, எதிர்க்கட்சித் தலைவர்
சுஷ்மாஸ்வராஜ், மசோதாவில் இடம் பெற்றுள்ள பல்வேறு
அம்சங்களைகடுமையாகசாடினார். குறிப்பாக லோக்பால் அமைப்பில்
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தஅவர், து அரசியல்
அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட விஷயம் அல்ல என கூறினார். இந்த மசோதா,
மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதாக உள்ளது என்றும், இது ஊழலை
ஒழிக்க உதவாது என்றும் தெரிவித்த சுஷ்மாஸ்வராஜ்,இந்தமசோதாவை திரும்பப் பெற
வேண்டும் என்றும், புதிய லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்
என்றும் வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய கழக நாடாளு மன்றக் குழுத்
தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை, லோக்பால் அமைப்பில் லோக் ஆயுக்தாவை
சேர்த்திருப்பது தவறு என்றும் அறிமுக நிலை யிலேயே இந்த மசோதாவை
எதிர்ப்பதாகவும் கூறினார். ஊழலை ஒழிக்கும் லோக்பாலுக்கு கழகம் எதிரானது
அல்ல என்றும், மசோதாவில் இடம் பெற்றுள்ள ஷரத்து களை மட்டுமே
எதிர்ப்பதாகவும்அவர்தெரிவித்தார்.லோக்பாலில்லோக்ஆயுக்தா
சேர்க்கப்பட்டிருப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று
குறிப்பிட்ட டாக்டர் தம்பிதுரை, லோக்ஆயுக்தாவை அந்தந்த மாநிலங்களே
அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இது குறித்த மசோதாவை
நிறைவேற்றுவது முறை யல்லஎன்றும்தெரிவித்தார். லோக் ஆயுக்தா குறித்த
கழகத்தின் இந்த நிலைப்பாட்டை பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம்,
சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரித்தன. தொடர்ந்து பேசிய டாக்டர்
தம்பிதுரை, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக் கூடாது என்பது
கழகப் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான புரட்சித்தலைவி
அம்மாஅவர்களின்கருத்து என்றும், அந்த வகையில், லோக்பால் வரம்பில்
பிரதமரைகொண்டுவருவதை தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment