எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, December 18, 2011

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் துரித நடவடிக்கையால் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மீட்பு

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் உடனடியாக விடுவிக்கப் பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அற்புதராஜ் மற்றும் 4 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். இதனை அறிந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அவர்கள் 5 பேரையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதனையடுத்து, இலங்கை கடற் படையால் பிடித்துச் செல்லப்பட்ட 5 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment