எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, December 25, 2011

தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், அவர்தம் மரபுரிமையர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்வு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கி
வைக்கப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அவர் தம் மரபுரிமையர்களுக்கு
மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.2
ஆயிரமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள். வளர்ச்சியில் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழ் மொழியின்வளமை மற்றும் செழுமைக்கு முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடுகொண்டு, மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- மொழி என்பது மனிதனை அடையாளப் படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழிதானும்வளர்ந்து, தன்னைபயன்படுத்தும்
மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது.
எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின்
சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின்
கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுவதோடு
மட்டுமல்லாமல் மனித சமுதாயஇணைப்புக்கும்
துணை செய்கின்றது.நிலைத்த பழமையும் வளரும் புதுமையும்
இரண்டறக் கலந்து வாழும் மொழி  தமிழ்மொழி.
அது நமது ஆட்சி மொழி. தமிழ் மொழிய
வளர்ச்சியில் தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான
அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தமிழ் மொழியின்வளமை மற்றும் செழுமைக்கு
முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடுகொண்டு,
மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும்
அர்ப்பணித்த தமிழ் அறிஞர் பெருமக்களின்
தன்னலமற்ற தொண்டே ஆகும்.அத்தகைய தமிழ்
அறிஞர்களின்நலன்பாதுகாக்கப்பட வேண்டும்
என்பதில் தமிழகமுதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் தலைமையிலான அரசு
உறுதியாக உள்ளது.இதன்அடிப்படையில், தமிழ்வளர்ச்சிக்காகவும்,
தமிழ்இலக்கிய மேம்பாட்டிற்காகவும், அயராது
பாடுபட்டதமிழ்அறிஞர்களைப்போற்றும்வகையில்,
அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, திங்கள்
தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம்,
1978-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர்
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால்
தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்
கீழ் தற்போது மாதந்தோறும் 1,000 ரூபாய்
உதவித் தொகையாக அகவை முதிர்ந்த தமிழ்
அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மொழிஉயர்ந்து வாழ வேண்டும் மற்றும்
மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள்
வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கம்
கொண்டதமிழகமுதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்கள் அகவை முதிர்ந்த தமிழறிஞர்
களுக்குஉதவித் தொகைவழங்கும்திட்டத்தின்கீழ்,
அகவைமுதிர்ந்த தமிழறிஞர்கள்மற்றும்அவர்தம்
மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும்
வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் நிதி உதவியை
2,000ரூபாயாகஉயர்த்திவழங்கஉத்தரவிட்டுள்ளார்
கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35
லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment