எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, December 27, 2011

கைத்தறி நெசவாளர்கள்-பரம்பரை இந்திய மருத்துவ வைத்தியர்கள்60 வயதினை கடந்தவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1000-மாக உயர்வு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு 42 ஆயிரம் தொழிலாளர்கள்-நெசவாளர்கள்-பரம்பரை இந்திய மருத்துவ வைத்தியர்கள் பயன் பெற நடவடிக்கை

60 வயதினை கடந்த தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள்-பரம்பரை இந்திய மருத்துவர்களின் மாத ஓய்வூ-தியத் தொகை-யினை ரூ.1000-மாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதேபோல் நெசவாளர் 60 வயதுக்கு முன் இறக்க நேரிட்டால் அவரது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத் தொகையும் ரூ.1000-மாக உயர்த்தி வழங்க உத்தர-விட்டுள்ளார்கள். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவர். தொழிலாளர்களின் முன்னேற்றம் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு வழி வகை செய்யும் என்பதை உணர்ந்துள்ள முதலமைச்சர் புரட்சித்த�வி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு, தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றவுடனேயே பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப் பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்கள். அந்த வகையில், பல்வேறு சமூக பாது காப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியது போல், தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவு செய்த தொழிலாளர் களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயையும் 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம், கட்டுமான நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நூல் நெய்யும் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு காலணி, தோல் பொருட்-கள் உற்பத்தி மற்றும் தோல் பதனி டுதல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஓவியர் நல வாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பாதையோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் நல வாரியம், ஆகிய நல வாரியங்களில் பதிவு செய்து, 60 வயது நிரம்பிய தொழிலாளர்கள் 11,062 பேர் பயன் பெறுவார்கள். இதே அடிப்படையில், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் அமைப்பின் கீழ் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதினை கடந்த நெசவாளர்களுக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 400 ரூபாயினை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தர-விட்டுள்ளார்கள். இதனால், 19,404 நெசவாளர்கள் பயன்பெறுவர். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1.1.92 முதல் துவக்-கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தின்படி, நெசவாளர் 60 வயதுக்கு முன் இறக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியமாக 550 ரூபாய் அவர் இறந்த நாளிலிருந்து 10 ஆண்டு அல்லது இறந்தவர் உயிருடன் இருந்திருந்தால் 60 வயது எய்தக் கூடிய காலம் வரையில், இதில் எது நெசவா-ளர்களின் குடும்பத்திற்கு அதிக பயன-ளிக்குமோ, அவ்வகையில் ஓய்வூதியம் வழங்கப்ப ட்டு 12-ம் பக்கம் பார்க்க

No comments:

Post a Comment